ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் நிகரலாபம் ரூ.126 கோடி.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அரசு பொதுத்துறை வங்கியான ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் வங்கி கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் அதன் நிகரலாபம் 23.5 சதவிகிதம் அதிகரித்து, 126 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இது முந்தைய நிதியாண்டில் இதே காலாண்டில் 102 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் நிகரலாபம் ரூ.126 கோடி.. !

 

இதே இந்த வங்கியின் மொத்த வருவாய் 15 சதவிகிதம் அதிகரித்து 5,702 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 4,967 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.

மந்த நிலையிலும் பஜாஜ் ஆட்டோ ரூ.1,402 கோடி லாபம்.. கொண்டாட்டத்தில் பங்குதாரர்கள்!

இதே நிகர வட்டி வருவாய் 15 சதவிகிதம் அதிகரித்து, 1,456 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே வட்டி அல்லாத வருவாய் 35 சதவிகிதம் அதிகரித்து 824 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதே கடந்த செப்டம்பர் 30, 2019 வரையிலான காலத்தில் வராக்கடன் 12.53 சதவிகிதமாக குறைந்துள்ளதாகவும், இது கடந்த செப்டம்பர் 2018ல் 17.24 சதவிகிதமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதே மொத்த வாராக்கடன் 5.94 சதவிகிதமாக குறைந்துள்ளது என்றும், இது முந்தைய ஆண்டு 10.07 சதவிகிதமாக இருந்தது என்றும் கூறப்படுகிறது.

குறிப்பாக சில்லறை கடன் மற்றும் வேளாண்மை, சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன்களில் இருந்து, 1,388 கோடி ரூபாய், புதிய சரிவுகள் ஏற்பட்டுள்ளாதாகவும் இந்த வங்கி தெரிவித்துள்ளது.

இதே ஜவுளி மற்றும் இரும்பு, ஸ்டீல் உற்பத்தி மற்றும் மொத்த விநியோகம் உள்ளிட்ட பல புதிய தொழிலுக்கு பங்குகளித்த முக்கிய தொழில்களில் அடங்கும் என்றும் இந்த பொதுத்துறை வங்கி தெரிவித்துள்ளது. எனினும் கடந்த செப்டம்பர் காலாண்டில் ரொக்க வசூல் 825 கோடி ரூபாயாக குறைந்துள்ளதாகவும், இது முந்தைய ஆண்டில் 1,491 கோடி ரூபாயாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த வங்கியின் பங்கின் விலை, தற்போது ஒரு ரூபாய் அதிகரித்து 51 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.

கடந்த ஆகஸ்ட் 30ம் தேதியன்று நிர்மலா சீதாராமன் பொதுத்துறை வங்கி இணைப்பு பற்றிய அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இதன் படி பஞ்சாப் நேஷல் பேங்க், ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், யுனைடெட் பேங்க், இணைக்கபட இருப்பதாகவும், இவ்வாறு இணைக்கப்படும் போது இந்த வங்கி பொதுத்துறை வங்கிகளில் இரண்டாவது மிகப்பெரிய வங்கியாக இருக்கும் என்றும் கூறியிருந்தது நினைவு கூறத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Oriental Bank of commerce second quarter profit sharply hiked 24% to Rs.126 crore

Oriental Bank of commerce second quarter profit sharply hiked 24% to Rs.126 crore and its total income up by 15% to Rs 5,702 crore.
Story first published: Wednesday, October 23, 2019, 15:53 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X