டெல்லி : தனியாரை சேர்ந்த தொலைத் தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் ஐடியா, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள், தங்களது நெட்வொர்க் நிறுவனத்தின் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளுக்கான பாக்கித் தொகையாக 4,500 கோடி ரூபாயை தொலைத் தொடர்பு துறைக்கு செலுத்தியுள்ளன.
இந்த நிறுவனங்களில் சில கடுமையான நிதிச் சிக்கலில் இருந்தாலும், இந்த தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களது நெட்வொர்க் சேவைக்காக அரசிடம் வாங்கிய ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளுக்கான பாக்கித் தொகையைச் செலுத்துவதற்கு அக்டோபர் 21ம் தேதி கடைசித் தேதியாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அதை செலுத்தியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

.இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் கடைசி தேதி அக்டோபர் 21 என்றாலும் இதற்கு முன்னபாகவே இந்த தனியார் நிறுவனங்கள் பாக்கித் தொகையை செலுத்தி விட்டன என்பது தான்.
இதில் முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது பங்குக்காக 1,133 கோடி ரூபாயும், இதே வோடபோன் ஐடியா 2,421 கோடி ரூபாயும் செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதே பார்தி ஏர்டெல் நிறுவனம் தனது பாக்கி தொகையாக 977 கோடி ரூபாயும் செலுத்தி உள்ளது.
தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் நெட்வொர்க் நிறுவனங்கள் தாங்கள் வாங்கிய ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளுக்கான பாக்கித் தொகையைச் செலுத்துவதில் நெருக்கடியைச் சந்திக்காமல் இருக்க, சென்ற மார்ச் மாதத்தில் வருடாந்திர தவணை எண்ணிக்கையை 10லிருந்து 16 ஆக உயர்த்தி அறிவித்தது மத்திய அரசு.
இருப்பினும் தொலைத் தொடர்பு துறையில் நிலவி வரும் கடுமையான நிதி நெருக்கடியால், இன்னும் கூடுதல் சலுகைகள் வழங்க வேண்டும் என்று வோடஃபோன் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி, தொலைத் தொடர்பு செயலாளர் அன்ஷு பிரகாஷைச் சந்தித்து முறையிட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் கட்டணக் விகித குறைப்பு, அழைப்பு இணைப்புக்கான கட்டணங்கள் அதிகமாக விதிக்கப்படுவது உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது என்றும், ஜியோவால் நிலவி வரும் போட்டியால் போட்டி போட்டுக் கொண்டு கொடுக்கும் சலுகைகளாலும் நிறுவனங்கள் அதிகளவு கடன்களை சந்தித்துள்ளதாகவும், இத மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதிலும் உடனடியாக லைசென்ஸ் பீஸ், ஸ்பெக்ட்ரம் கட்டணங்கள், ஜிஎஸ்டி விகிதம் உள்ளிட்ட சிலவற்றை குறைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்

ஈரான் போரில் பாகிஸ்தானுக்கு மறைமுக பங்கு: வெளிச்சத்திற்கு வந்தது பாகிஸ்தானின் இரட்டை வேடம்!!



Click it and Unblock the Notifications