ரூ.92,642 கோடி பாக்கி தொகையை செலுத்தச் சொன்ன உச்ச நீதிமன்றம்! மிரண்டு போன ஏர்டெல் வோடபோன் ஐடியா!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற டெலிகாம் நிறுவனங்கள், மத்திய டெலிகாம் துறை கோரிய 92,642 கோடி ரூபாயைச் செலுத்த வேண்டும் என தீர்ப்பு வழங்கி இருக்கிறது உச்ச நீதிமன்றம்.

இந்த தீர்ப்பை முழுமையாக பார்ப்பதற்கு முன் முதலில் ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற டெலிகாம் நிறுவனங்களுக்கும், மத்திய டெலிகாம் துறைக்கும் இருக்கும் கருத்து வேறுபாடுகளை முதலில் பார்ப்போம்.

மத்திய டெலிகாம் துறை ஒவ்வொரு டெலிகாம் நிறுவனத்தின் வருவாய்க்கு தகுந்தாற் போல, லைசென்ஸ் கட்டணம் மற்றும் ஸ்பெக்ட்ரத்துக்கும் கட்டணங்களை நிர்ணயிப்பார்கள்.

இன்ஃபோசிஸ் புகார் மீது நடவடிக்கை..! அமெரிக்க பங்கு & பரிவர்த்தனை ஆணையம் விசாரணை..!இன்ஃபோசிஸ் புகார் மீது நடவடிக்கை..! அமெரிக்க பங்கு & பரிவர்த்தனை ஆணையம் விசாரணை..!

கணக்கு

கணக்கு

டெலிகாம் நிறுவனங்கள் தங்களின் சரிசெய்த தோராய வருவாய் (AGR - Adjusted Gross Revenue) அடிப்படையில் தான், மத்திய டெலிகாம் துறை ஒவ்வொரு நிறுவனத்துக்குமான லைசென்ஸ் கட்டணங்கள் மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டணங்களை நிர்ணயிக்கிறார்கள். இப்போது இந்த சரிசெய்த தோராய வருவாய் (AGR - Adjusted Gross Revenue)-யில் எதை எல்லாம் சேர்த்துக் கொள்ள வேண்டும், எந்த வருமானத்தை எல்லாம் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்பதில் தான் சிக்கல்.

அரசு தரப்போ

அரசு தரப்போ

மத்திய டெலிகாம் துறையோ, சரிசெய்த தோராய வருவாய் (AGR - Adjusted Gross Revenue) கணக்கீட்டில் டிவிடெண்டுகள், மொபைல் போன்களை விற்று வரும் வருமானம், ஸ்கிராப் பொருட்கள் விற்பனை மற்றும் வாடகை மூலம் வரும் வருமானம் என அனைத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டு தான் லைசன்ஸ் கட்டணம் மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டணத்தை கணக்கிட வேண்டும். டெலிகாம் சேவையில் இருந்து வரும் வருமானத்தை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு கட்டணங்களை நிர்ணயிக்கக் கூடாது என வாதிட்டது.

டெலிகாம் நிறுவனங்கள்

டெலிகாம் நிறுவனங்கள்

ஏர்டெல், வோடபோன் ஐடியா,போன்ற இந்திய டெலிகாம் நிறுவனங்களோ, தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் டெலிகாம் சேவை வழியாக கிடைக்கும் வருவாயை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டு லைசென்ஸ் கட்டணம் மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டணங்களை கணக்கிட வேண்டும். மற்ற எந்த வருமானத்தையும் கூடுதலாக கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என வாதாடியது. இந்த வழக்கு சுமாராக கடந்த 14 ஆண்டுகளாக நடந்தது.

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், கடந்த 2015-ம் ஆண்டில் மத்திய டெலிகாம் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் தான் சரிசெய்த தோராய வருவாய் (AGR - Adjusted Gross Revenue) கணக்கிடுகிறார்கள். இந்த தீர்ப்பில் கணக்கிட்ட சரிசெய்த தோராய வருவாய் (AGR - Adjusted Gross Revenue)-யின் படி பார்த்தால், டெலிகாம் நிறுவனங்கள் வழங்கும் சேவை வழியாக வரும் வருமானம் போக, மற்ற சில வருமானங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே மத்திய டெலிகாம் துறை கணக்கிட்டு கோரியது போல, டெலிகாம் சேவை வருவாய் + மற்ற வருமானங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு கேட்கும் லைசென்ஸ் தொகை சரியே என தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள்.

நஷ்டம்

நஷ்டம்

இப்போது மத்திய டெலிகாம் துறையின் கணக்கீட்டு முறை சரி என உச்ச நீதிமன்றம் சொல்லி இருப்பதால், இந்திய டெலிகாம் நிறுவனங்கள் செலுத்தாமல் பாக்கி வைத்திருக்கும் லைசென்ஸ் கட்டணம் + லைசென்ஸ் கட்டணங்களுக்கான வட்டி + அபராதம் + அபராதத்துக்கான வட்டி என அனைத்தையும் சேர்த்து செலுத்தச் சொல்லும் தொகை தான் மேலே சொன்ன 92,642 கோடி ரூபாய். இவ்வளவு பெரிய தொகையை செலுத்தச் சொன்னால் டெலிகாம் நிறுவனங்களுக்கு கடுமையான நஷ்டம் ஏற்படத் தானே செய்யும்.

ஏர்டெல் செலுத்த வேண்டிய தொகை

ஏர்டெல் செலுத்த வேண்டிய தொகை


இந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனமாக இருந்த ஏர்டெல் நிறுவனம்
லைசென்ஸ் கட்டணம் 5,529 கோடி ரூபாய்
லைசென்ஸ் கட்டணத்துக்கான வட்டி 9,816 கோடி ரூபாய்
அபராதம் 2,407 கோடி ரூபாய்
அபராதம் மீதான வட்டி 3,930 கோடி ரூபாய்
மொத்தம் 21,682 கோடி ரூபாய் செலுத்த வேண்டி இருக்கிறதாம்.

வோடபோன் மட்டும் செலுத்த வேண்டிய தொகை

வோடபோன் மட்டும் செலுத்த வேண்டிய தொகை


வோடபோன் நிறுவனம் மட்டும் தான் இங்கு பார்க்கிறோம். ஐடியா தனியாக பின்னால் இருக்கிறது.
லைசென்ஸ் கட்டணம் மட்டும் 4,785 கோடி ரூபாய்
லைசென்ஸ் கட்டணத்தைச் செலுத்தாமல் இருந்ததற்கான வட்டி 9,064 கோடி ரூபாய்
லைசென்ஸ் கட்டணத்தை செலுத்தாதற்கான அபராதம் 2,281 கோடி ரூபாய்
அபராதத்தை செலுத்தாதற்கான வட்டி 3,693 கோடி ரூபாய்
என ஒட்டு மொத்தமாக சேர்த்துப் பார்த்தால் 19,824 கோடி ரூபாய் செலுத்த வேண்டி இருக்கிறதாம்.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் செலுத்த வேண்டிய தொகை

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் செலுத்த வேண்டிய தொகை

அனில் அம்பானியின் ஆர் காம் என்றழைக்கப்படும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்
லைசென்ஸ் கட்டணம் மட்டும் 3,632 கோடி ரூபாய்
லைசென்ஸ் கட்டணத்தைச் செலுத்தாமல் இருந்ததற்கான வட்டி 7,681 கோடி ரூபாய்
லைசென்ஸ் கட்டணத்தை செலுத்தாதற்கான அபராதம் 1,789 கோடி ரூபாய்
அபராதத்தை செலுத்தாதற்கான வட்டி 3,355 கோடி ரூபாய்
என ஒட்டு மொத்தமாக சேர்த்துப் பார்த்தால் 16,456 கோடி ரூபாய் செலுத்த வேண்டி இருக்கிறதாம்.

டாடா குழுமம் செலுத்த வேண்டிய தொகை

டாடா குழுமம் செலுத்த வேண்டிய தொகை


டொகொமோ என்கிற பெயரில் களம் இறங்கிய டாடா குழுமம்
லைசென்ஸ் கட்டணம் மட்டும் 2,321 கோடி ரூபாய்
லைசென்ஸ் கட்டணத்தைச் செலுத்தாமல் இருந்ததற்கான வட்டி 4,603 கோடி ரூபாய்
லைசென்ஸ் கட்டணத்தை செலுத்தாதற்கான அபராதம் 1,096 கோடி ரூபாய்
அபராதத்தை செலுத்தாதற்கான வட்டி 1,966 கோடி ரூபாய்
என ஒட்டு மொத்தமாக சேர்த்துப் பார்த்தால் 9,987 கோடி ரூபாய் செலுத்த வேண்டி இருக்கிறதாம்.

ஐடியா செல்லூலர் செலுத்த வேண்டிய தொகை

ஐடியா செல்லூலர் செலுத்த வேண்டிய தொகை


இதில் வோடபோன் கிடையாது. பிர்லா குழுமத்தின் ஐடியா செல்லூலர் நிறுவனம் தனியாக
லைசென்ஸ் கட்டணம் மட்டும் 2,086 கோடி ரூபாய்
லைசென்ஸ் கட்டணத்தைச் செலுத்தாமல் இருந்ததற்கான வட்டி 3,942 கோடி ரூபாய்
லைசென்ஸ் கட்டணத்தை செலுத்தாதற்கான அபராதம் 925 கோடி ரூபாய்
அபராதத்தை செலுத்தாதற்கான வட்டி 1,533 கோடி ரூபாய்
என ஒட்டு மொத்தமாக சேர்த்துப் பார்த்தால் 8,485 கோடி ரூபாய் செலுத்த வேண்டி இருக்கிறதாம்.

ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ

முகேஷ் அம்பானி தலைமையில் வீர நடை போட்டுக் கொண்டிருக்கும் ரிலையன்ஸ் ஜியோ
லைசென்ஸ் கட்டணம் மட்டும் 6 கோடி ரூபாய்
லைசென்ஸ் கட்டணத்தைச் செலுத்தாமல் இருந்ததற்கான வட்டி 3 கோடி ரூபாய்
லைசென்ஸ் கட்டணத்தை செலுத்தாதற்கான அபராதம் 3 கோடி ரூபாய்
அபராதத்தை செலுத்தாதற்கான வட்டி 1 கோடி ரூபாய்
என ஒட்டு மொத்தமாக சேர்த்துப் பார்த்தால் 13 கோடி ரூபாய் செலுத்த வேண்டி இருக்கிறதாம்.

மற்ற நிறுவனங்கள்

மற்ற நிறுவனங்கள்

இந்திய டெலிகாம் துறையில் வியாபாரமே வேண்டாம் என ஒதுங்கிய ஏர்செல், அரசின் எம் டி என் எல், பி எஸ் என் எல், டெலினார் இந்தியாம் வீடியோகான் கம்யூனிகேஎஷன்ஸ், எஸ் எஸ் டி எல், லூப் டெலிகாம், ரிலிஅயன்ஸ் ஜியோ என பல நிறுவனங்கள் ஒன்ரு சேர்ந்து மத்திய டெலிகாம் துறைக்கு 16,208 கோடி ரூபாய் செலுத்த வேண்டி இருப்பதாக ப்ளூம்பெர்க் க்விண்ட் தன் செய்தியில் சொல்லி இருக்கிறது.

டெலிகாம் நிறுவனங்களின் நிலை

டெலிகாம் நிறுவனங்களின் நிலை


ஏற்கனவே ஏர்டெல் நிறுவனத்துக்கு 1.01 லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கிறது. ஏர்டெல் இப்போது மேலும் 21,682 கோடி ரூபாய் லைசென்ஸ் கட்டண பாக்கியை வட்டியோடு செலுத்த வேண்டும் என்றால் என்ன ஆவது. அதே போல வொடபோன் ஐடியா நிறுவனத்துக்கு 1.20 லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கிறது. ஆக ஐடியாவும், வோdஅபோனும் இணைந்து விட்டதால் இரண்டு நிறுவனங்களின் பாக்கி தொகையான (19824 + 8,485) 28,309 கோடி ரூபாயை இவர்கள் செலுத்த வேண்டும். இவர்களின் நிலையும் கவலைக்குரியது தான்.

இதை இந்த நிறுவனங்கள் எப்படி சமாளிக்க இருக்கிறது என்பதை காத்திருந்து பார்ப்போம்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Airtel Vodafone idea in trouble supreme court asked to pay 92000 crore dues

Airtel Vodafone idea in trouble supreme court asked to pay 92000 crore dues. Bharti Airtel owes Rs 21,682.13 crore as license fee. Vodafone Idea owes Rs 19,823.71 crore, Reliance Communications owes a total of Rs 16,456.47 crore. Reliance jio owes a total of Rs 13 crore only.
Story first published: Thursday, October 24, 2019, 18:30 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X