பந்தன் வங்கி தனது செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், அதன் நிகரலாபமாக 972 கோடி ரூபாயை ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 488 கோடி ரூபாயாக இருந்துள்ளது.
இந்த நிலையில் பந்தன் வங்கியின் நிர்வாக இயக்குனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சந்திர சேகர் கோஷ் இது குறித்து கூறியதாவது, கடந்த செப்டம்பர் காலாண்டில் எங்களது செயல்திறன் மிகச் சிறப்பாக உள்ளது. வங்கியில் வைப்புத் தொகை மற்றும் முன்னேற்றங்களில் வலுவான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் இலாபமும் சாதனை வளர்ச்சியுடன் உள்ளது என்றும் கூறியுள்ளார்.

மேலும் நாங்கள் எங்களது தற்போதைய செயல்திறனை கருத்தில் கொண்டு இன்னும் சிறப்பாக அதிக நம்பிக்கையுடன் இருக்கிறோம். அதிலும் வரலாற்று ரீதியாக இரண்டாம் பாதி ஆண்டு எப்போதும் முதல் பாதி ஆண்டை விட சிறப்பாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் இவ்வங்கியின் டெபாசிட் தொகை 49.26 சதவிகிதம் அதிகரித்து, 49,195 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும், இது முந்தைய ஆண்டில் 32,959 கோடி ரூபாயாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதே கரண்ட் அக்கவுண்ட் சேவிங்ஸ் அக்கவுண்ட் (CASA) 38.69 சதவிகிதம் வளர்ச்சி கண்டும், இது கடந்த ஆண்டு 36.9 சதவிகிதமாக இருந்தது.
இதே கடந்த செப்டம்பர் காலாண்டில் வாராக்கடன் 0.56 சதவிகிதமாகவே உள்ளது. இது கடந்த ஜூன் காலாண்டிலும் 0.56 சதவிகிதமாகவே இருந்துள்ளது. இதே கடந்த ஆண்டு செப்டம்பர் 2018ல் இது 0.69 சதவிகிதமாக இருந்தது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதே வட்டி அல்லாத நிகர வருவாய் 56.96 சதவிகிதம் வளர்ச்சி கண்டு 361 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 230 கோடி ரூபாயாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதே நிகர வட்டி வருவாய் 41.84 சதவிகிதம் அதிகரித்து 1,529 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 1,078 கோடி ரூபாயாக மட்டுமே இருந்ததுள்ளது குறிப்பிடத்தக்கது. இதே இந்த வங்கியின் செயல்பாட்டு லாபம் 49.66 சதவிகிதமாக அதிகரித்தும் 1,308 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும், இது கடந்த ஆண்டு இதே காலாண்டில் 874 கோடி ரூபாயாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்த செப்டம்பர் 30, 2019 நிலவரப்படி மொத்த வாராக்கடன் 1.76 சதவிகிதமாக உள்ளது என்றும், இதுவே ஜூன் 30, 2019 நிலவரப்படி 2.02 சதவிகிதமாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications