டெல்லி : இந்தியாவில் நடப்பு ஆண்டில் மது விற்பனையானது குறைந்துள்ளதாகவும், இதற்கு நிலவி வரும் மந்த நிலையோடு, அதிகப்படியான வரி விதிப்பும் ஒரு காரணம் என்றும் கூறப்படுகிறது.
இது தவிர சில மாநிலங்களில் சூழ்ந்த வெள்ளம், இந்த ஆண்டின் முதல் பாதியில் தேர்தல் மற்றும் வரி அதிகரிப்பு என பல காரணங்களால் மதுபான விற்பனை குறைந்ததாகவும், அதிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபான விற்பனை மெதுவான வேகத்திலேயே இருந்ததாகவும் கூறப்படுகிறது.

எனினும் சில மாநிலங்கள் மதுபான உற்பத்தியாளர்களுக்காக விற்பனையை தூண்டின என்றும், இந்த நிலையில் நடப்பு ஆண்டின் முதல் பாதியில் ஐ.எம்.எஃப்.எல் (Indian made foreign liquor) விற்பனை வெறும் 3.2 சதவிகிதம் அதிகரித்ததாகவும் தொழில்துறை நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிக்கைகள் கூறுகின்றன.
இது முந்தைய ஆண்டு முதல் பாதியில் 11 சதவிகித வளர்ச்சி கண்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் செப்டம்பர் காலாண்டிலும் 1.4 சதவிகிதமாக வளர்ச்சி இருந்தது குறிப்பிடத்தக்கது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 2.6 சதவிகித வளர்ச்சியை கொண்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
அதிலும் நிலவி வரும் மந்த நிலையால் மொத்த நுகர்வும் குறைந்துள்ளதாகவும், குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் சில மாநிலங்களில் வரி அதிகரிப்பு காரணமாக மேலும் இது பிரச்சனையை அதிகரித்துள்ளதாகவும், அலையட் பிளெண்டர்ஸின் தலைவர் அகமது ரஹிம்தூலா கூறியுள்ளார்.
இது ஏப்ரல் முதல் ஜூன் மாதங்களுக்கு இடையில் பல கட்டுப்பாடுகள் காரணமாக இந்த பிரிவு 2 சதவிகிதம் மட்டுமே வளர்ச்சியடைந்தது, ஏனெனில் பொதுத்தேர்தல் மதுபானத்திற்கான தேவையை சீர்குலைத்ததாகவும், இது மார்ச் காலாண்டில் விரிவாக்கத்தை விட 2.8 சதவிகிதம் விரிவடைந்தது என்றும், எனினும் செப்டம்பர் காலாண்டில் ஆந்திர அரசு சில கட்டுபாடுகளை விதித்தது என்றும், குறிப்பாக வட இந்தியாவில் உள்ள பணப்புழக்க பிரச்சனைகளும் இந்த சரிவுக்கு வழி வகுத்ததாகவும் கூறப்படுகிறது.
உலகின் இரண்டாவது பெரிய மது குழுமமான பெர்னோட் ரிக்கார்ட் கடந்த செப்டம்பர் காலாண்டில் 3 சதவிகித வளர்ச்சியை கண்டதாகவும், இது முந்தைய ஆண்டில் 34 சதவிகித வளர்ச்சியை கண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஒட்டுமொத்த மது விற்பனை சந்தையும் கடந்த ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் 12.9 சதவிகிதமாக இருந்த நிலையில், இதே காலத்தில் நடப்பு ஆண்டில் வெறும் 1.4 சதவிகிதமாக மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக விஸ்கி விற்பனை கடந்த ஆண்டு ஜூலை - செப்டம்பர் காலத்தில் 18 சதவிகிதமாக இருந்த நிலையில், நடப்பு ஆண்டில் சுமார் 1 சதவிகிதம் மட்டும் உள்ளது என்றும் கூறப்படுகிறது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications