டெல்லி : தகவல் தொழில் நுட்ப துறையில் முன்னணி நிறுவனமான ஹெச்சிஎல் டெக்னாலஜி நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் அதன் நிகரலாபம் 6.9 சதவிகிதம் அதிகரித்து 2,711 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதன் முந்தைய ஆண்டு இதே காலாண்டில் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த லாபம் 2,534 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

நொய்டாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த நிறுவனம், கடந்த மார்ச் காலாண்டில் 2,230 கோடி ரூபாய் லாபத்தினை கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிறுவனத்தின் செயல்பாட்டின் மூலம் கிடைத்த ஒருங்கிணைந்த வருவாய் 18 சதவிகிதம் அதிகரித்து, 17,527 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 14,860 கோடி ரூபாயாக இருந்துள்ளது. இதே ஜூன் காலாண்டில் இதன் வருவாய் 16,427 கோடி ருபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் செயல்பாட்டு அளவு (operating margin ) 17.9 சதவிகிதம் அதிகரித்து, 23,497 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதே கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் இந்த நிறுவனம் 3,223 பேரை வேலைக்கு சேர்த்துள்ளதாகவும், இதோடு சேர்த்து மொத்தம் 1,47,123 பேர் உள்ளனர் என்றும், இதே ஜூன் காலாண்டில் 1,43,900 பேர் இருந்ததாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதே அட்ரிஷன் விகிதம் 16.9 சதவிகிதமாக குறைந்துள்ளது என்றும், இது ஜூன் காலாண்டில் 17.3 சதவிகிதமாகவும், முந்தைய ஆண்டு செப்டம்பர் காலாண்டில் 17.1 சதவிகிதமாகவும் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த நிறுவனம் இடைக்கால டிவிடெண்டாக ஒரு பங்குக்கு இரண்டு ரூபாய் வழங்க, ஹெச்.சி.எல் நிறுவனத்தின் உறுப்பினர் குழு முடிவெடுத்துள்ளதாகவும், மேலும் அக்டோபர் 22 முதல் இந்த நிறுவனத்தின் கூடுதல் இயக்குனராக ஷிகர் மல்ஹோத்ராவை நியமித்துள்ளதாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் தற்போது பங்கு விலை 31 ரூபாய் அதிகரித்து 1127 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.
மேலும் இந்த நிறுவனம் கடந்த ஆண்டு ஐ.பி.எம்க்கு சொந்தமான சில பொருட்களை வாங்கியதாகவும், இது நடப்பு ஆண்டில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியதாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications