மும்பை: பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் அதன் நிகரலாபம் இரு மடங்கு அதிகரித்துள்ளது.
பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் அதன் லாபம் வரி செலுத்துவதற்கு முன்பு மூன்று மடங்கு அதிகரித்து, 592.58 கோடி ரூபாயாக அறிவித்துள்ளது. இதே முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 185.70 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதே இந்த வங்கியின் வருவாய் 18 சதவிகிதம் அதிகரித்து, 6,047.14 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும், இதே முந்தைய ஆண்டில் 5,130.47 கோடி ரூபாயாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதே நிகரலாபம் கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 150 சதவிகிதம் அதிகரித்து, 358.78 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 149.19 கோடி ரூபாயாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதே இந்த வங்கியின் மொத்த செயல்படாத சொத்துக்களின் மதிப்பு 7.21 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதே முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 7.17 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே நிகர வாராக்கடன் 3.54 சதவிகிதமாக குறைந்துள்ளது. இது முந்தைய காலாண்டில் 4.23 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் கடன் மற்றும் மோசடி பிரிவின் கீழ் பவர் மற்றும் ஸ்டீல் துறையில் ஒரு கடன் கணக்கை, இவ்வங்கி இரண்டாவது காலாண்டில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது 33 கடன் வழங்குனர்கள் சம்பந்தபட்ட கூட்டமைப்பு கடனாக 829.77 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது என்றும் கூறப்படுகிறது.
மேலும் நிகர வட்டி வருவாய் 7.63 சதவிகிதம் அதிகரித்து 1,863.04 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே கடந்த ஆண்டு இதே காலாண்டில் 1,730.93 கோடி ரூபாயாக இருந்துள்ளது.
இந்த நிலையில் இந்த வங்கி பங்கின் விலை, புதன் கிழமை முடிவில் 13 சதவிகிதம் அதிகரித்து 142 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
இதே கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் இதன் லாபம் 365.37 கோடி ரூபாயாகவும், இதே இந்த காலாண்டில் வருவாய் 5,832.11 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications