டெல்லி: நடப்பு நிதியாண்டில் நிலவி வரும் ஒட்டுமொத்த பொருளாதார மந்த நிலையும், விமான நிறுவனங்களையும் விட்டு வைக்கவில்லை. அதிலும் எரிபொருளுக்கான விலையேற்றம், அன்னிய செலவாணி இழப்புகள், பராமரிப்பு செலவுகள் காரணமாகவும் அதிக இழப்புகளை சந்தித்துள்ளன.
அதிலும் குறிப்பாக இண்டிகோ விமான நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், அதன் நிகரலாபத்தை இழந்து, நிகர நஷ்டமாக 1,062 கோடியை பதிவு செய்துள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 651.50 கோடி ரூபாயை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதே செயல்பாடு மூலம் கிடைத்த வருவாய் 31.1 சதவிகிதம் அதிகரித்து, 8,539.80 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே கடந்த ஆண்டு இதே காலாண்டில் 6,514.10 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே மொத்த வருவாய் 24.2 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
வரி வட்டி, கடன் தொகை மற்றும் மறுசீரமைப்பு, வாடகை செலவுகள் ஆகியவற்றிற்கு முன்னர், இந்த நிறுவனத்தின் வருவாய் 15.9 சதவிகிதம் அதிகரித்து, 256.40 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 221.30 கோடி ரூபாயாக இருந்துள்ளது.
இதே மற்ற வருவாய் 32 சதவிகிதம் அதிகரித்து 434.60 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே முந்தைய ஆண்டு 328.80 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதே மொத்த செலவுகள் 27.6 சதவிகிதம் அதிகரித்து, 9,571.60 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும், இது முந்தைய ஆண்டினை விட ஒப்பிடும்போது 465 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும், இது கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது நடப்பு ஆண்டில் தேய்மானம், கடன் தொகை செலவினங்கள் மட்டும் 1,028.70 கோடி அதிகரிதுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதே கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் பயணிகளின் டிக்கெட் விலை மூலம் கிடைத்த வருவாய் 34.4 சதவிகிதம் அதிகரித்து 7,100.50 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதே துணை வருவாய் எனப்படும் இதரவருவாய் 29.8 சதவிகிதம் அதிகரித்து 930.20 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது குறித்து இண்டிகோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரோனோஜோய் தத்தா இது குறித்து கூறுகையில், வரலாற்றில் இல்லாத அளவுக்கு நாங்கள் பலவீனத்தை கண்டுள்ளோம். கடந்த ஆண்டு இதே காலாண்டில், வரிக்கு முந்தைய நஷ்டம் 12.7 சதவிகிதமாக மட்டுமே இருந்தது. ஆனால் நடப்பு ஆண்டில் அன்னிய செலவாணி இழப்புகள் மற்றும் பராமரிப்பு செலவுகள், சம்பள மதிப்பீடுகள் உள்ளிட்டவை மேலும் அதிகளவிலான நஷ்டத்திற்கு வழிவகுத்தன என்றும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலை தற்போது 147 ரூபாய் குறைந்து 1,517 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.


Click it and Unblock the Notifications