நம் ஆட்களுக்கு சாக்லேட் என்றாலே டைரி மில்க், ஃபைவ் ஸ்டார் தான் நினைவுக்கு வரும். மிஞ்சி மிஞ்சிப் போனால் பெரிய பட்ஜெட் போட்டு வாங்கப் போகிறோம் என்றால் பார்ன்வில்லி (bournville) தான் இமாலய எல்லை.
மூன்று வேளையும் பீட்ஸா பர்கர் சாப்பிடுபவர்கள் என்றால் கூட பெர்ரெரோ ரோஷர் (ferrero rocher) சாக்லேட்டைத் தாண்டி சிந்திப்பது கடினம் தான். ஆனால் ஐடிசி நிறுவனம், இந்த சாக்லேட் துறையிலேயே ஒரு புதிய மைல்கல்லைத் தொட்டு இருக்கிறது. அப்படி என்ன மைல் கல் எனக் கேட்கிறீர்களா..?

உலகிலேயே விலை அதிகமான சாக்லேட் என, முறையாக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்கும் அளவுக்கு ஒரு காஸ்ட்லியான சாக்லேட்டை தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கி இருக்கிறது.
அந்த சாக்லேட்டின் பெயர் 'Trinity - Truffles Extraordinaire'. இந்த சாக்லேட்டை தன்னுடைய எலைட் சாக்லேட் பிராண்டான Fabelle Exquisite Chocolates-ன் கீழ் விற்கத் தொடங்கி இருக்கிறது. இந்த சாக்லேட்டை நம்மூர் பேக்கரிகளில் மாஸ்டர்கள் செய்வது போல ஏனோ தானோ எனச் செய்யவில்லை.
உலகிலேயே சமையல் கலையின் நோபல் பரிசாக மதிக்கப்படும் மிஷலின் ஸ்டார் (Michelin Star) வென்ற சமையல் கலைஞர்களை வைத்து இந்த சாக்லேட்டை தயார் செய்து இருக்கிறார்களாம். பிரான்ஸ் நாட்டின் மிஷலின் ஸ்டார் சமையல் கலைஞரான பிலிப்பெ காண்டிசினி (Philippe Conticini) தான் நம்முடைய 'Trinity - Truffles Extraordinaire' காஸ்ட்லி சாக்லேட்டை சமைத்து இருக்கிறாராம். இந்த சாக்லேட்டின் விலை எவ்வளவு தெரியுமா..? ஒரு கிலோ 4.3 லட்சம் ரூபாய். இதை ஐடிசி நிறுவனமும் தன் ஸ்டேட்மெண்டிலேயே அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள்.
இந்த 'Trinity - Truffles Extraordinaire' சாக்லேட் 15 கிராம் எடை கொண்ட 15 சாக்லேட்டுகளை, கையால் இழைத்து இழைத்து உருவாக்கப்படும் மரப் பெட்டியில் அடைத்து விற்கிறார்களாம். ஆக 15 * 15 = 225 கிராம் கொண்ட சாக்லேட் பெட்டியின் விலை, ஜிஎஸ்டி எல்லாம் சேர்த்து ஒரு லட்சம் ரூபாயாம். இந்த தீபாவளிக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் போனஸ் வாங்கியவர்கள் இந்த 'Trinity - Truffles Extraordinaire' சாக்லேட்டை வாங்கி சுவைத்துப் பார்த்துச் சொல்லுங்கள். முடிந்தால் எங்களுக்கும் ஒரு பீஸ் கொடுங்களேன். எம்மாடியோ ஒரு பீஸ் சாக்லேட்டின் விலையே 6,666 ரூபாயா..?
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications