மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில், அதன் நிகரலாபம் 218 சதவிகிதம் அதிகரித்து 3,012 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இதே முந்தைய ஆண்டு இதே காலாண்டில் இதன் நிகரலாபம் 944..87 கோடி ரூபாயாக மட்டுமே இருந்துள்ளது.

இதே இந்த வங்கியின் நிகர வருவாய் 17.67 சதவிகிதம் அதிகரித்து, 24,600 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 20,905.7 கோடி ரூபாயாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த பொதுத்துறை வங்கியின் சொத்து மதிப்பும் கடந்த இரண்டாவது காலாண்டில் அதிகரித்துள்ளது. இதே மொத்த செயல்படாத சொத்துக்களின் மதிப்பும் 1.61 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதே ஏப்ரல் - ஜூன் வரையிலான முதல் காலாண்டில் 1.68 லட்சம் கோடி ரூபாயாக இருந்துள்ளது கவனிக்கதக்கது. இதேபோல் மொத்த வாராக்கடன்களின் மதிப்பும் 59,939.2 கோடி ரூபாயாக சரிந்துள்ளதாகவும், இதே கடந்த ஜூன் காலாண்டில் 65,624 கோடி ரூபாயாக இருந்ததாகவும், இது முந்தைய ஆண்டில் செப்டம்பர் காலாண்டில் 94,809.98 கோடி ரூபாயாக இருந்ததாகவும் இந்த வங்கி தெரிவித்துள்ளது.
இந்த வங்கியின் நிகர வட்டி வருவாய் 17.67 சதவிகிதம் அதிகரித்து 24,600 கோடி ரூபாயாக அதிகரித்திருப்பதாகவும், இது முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 20,906 கோடி ரூபாயாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதே செயல்பாட்டு லாபம் 31 சதவிகிதம் அதிகரித்து, 18,199 கோடி ரூபாயாகவும், இதே முந்தைய ஆண்டில் 13,905 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.
உள்நாட்டு கடன் வளர்ச்சி 8.43 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளதாகவும், குறிப்பாக சில்லறை மற்றும் தனிநபர் கடன் 18.90 சதவிகிதம் அதிகரித்து, 6.85 லட்சம் கோடி ரூபாயாகவும், இதே கார்ப்பரேட் கடன் வளர்ச்சி 3 சதவிகிதம் அதிகரித்து, 7.65 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும், உள்நாட்டு கரண்ட் அக்கவுண்ட் சேவிங்க்ஸ் அக்கவுண்ட் டெபாசிட் 8 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் இவ்வங்கி தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இந்த வங்கி பங்கின் விலை தற்போது 7 சதவிகிதம் அதிகரித்து 282 ரூபாயாக அதிகரித்துள்ளது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications