முகேஷ் அம்பானியின் அதிரடியான திட்டம்.. அடுத்து என்ன செய்ய போகிறார்?

மும்பை: தான் எந்தவொரு செயலை செய்தாலும் அதில் காரணமில்லாமல் செய்ய மாட்டார் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, அந்த வகையில் தற்போது டிஜிட்டல் வணிகத்திற்காக புதிய நிறுவனம் ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏன் எதற்காக இந்த நிறுவனம்? ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தினால், ஆட்டம் கண்டுள்ள மற்ற நிறுவனங்கள், தற்போது முகேஷ் அம்பானி மீண்டும் ஒரு டிஜிட்டல் நிறுவனத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அடுத்து என்ன செய்ய காத்திருக்கிறதோ தெரியவில்லை என்று கருதப்படும் நிலையில், இது ரிலையன்ஸின் டிஜிட்டல் சேவைகளுக்காக உருவாக்கப்படும் தனி நிறுவனம் என்று கூறப்படுகிறது.

அது மட்டும் அல்ல, புதியதாக உருவாக்கப்படும் டிஜிட்டல் வணிக நிறுவனத்தில் 1.08 டிரில்லியன் ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

புதிய நிறுவனம்

புதிய நிறுவனம்

இந்த புதிய டிஜிட்டல் நிறுவனம் தொடர்பாக ஏற்கனவே கடந்த வெள்ளிக்கிழமையன்று அதன் இயக்குனர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இந்த நிலையில் ஜியோ தொடர்பான வணிக செயல்கள் புதிய நிறுவனத்திற்கு மாற்றப்படும் என்றும், வணிகம் மட்டும் அல்ல, ஜியோ நிறுவனத்திற்கு சொந்தமான கடன் தொகையும் இந்த நிறுவனத்திற்கு மாற்றப்படும் என்றும், இதனால் ஜியோ கடன் இல்லாத நிறுவனமாக மாற்றம் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதற்காக இந்த புதிய நிறுவனம்?

எதற்காக இந்த புதிய நிறுவனம்?

இவ்வாறு கடன் தொகை இல்லா நிறுவனமாக மாற்றப்படும் போது இந்த நிறுவனத்தில், புதிய முதலீடுகளை உருவாக்க இது சாதமாக அமையும் என்றும், குறிப்பாக வெளி முதலீடுகளை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிலும் உருவாக்கப்படும் புதிய டிஜிட்டல் நிறுவனத்தில் 1.08 டிரில்லியன் ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளதாகவும், இது தவிர ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு சொந்தமான 65,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளும் புதிய நிறுவனத்திற்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடன் இல்லா நிறுவனமான மாற்ற முடிவு

கடன் இல்லா நிறுவனமான மாற்ற முடிவு

வரும் மார்ச், 31, 2020, ஆண்டுக்குள் ஜியோ முழுமையாக கடன் இல்லா நிறுவனமாக மாற்றப்படும் என்றும் ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டில் சேவைகளைக் தொடங்கிய 4ஜி வயர்லெஸ் நெட்வொர்க்கில் சுமார் 50 பில்லியன் டாலர்களை செலவழித்த பின்னர், தற்போது முகேஷ் அம்பானி தனது நிறுவனங்களை கடன் இல்லா நிறுவனங்களாக மாற்றவும், அதன் இருப்பு நிலைகளை உயர்த்தும் நோக்கத்துடனும் செயல்பட்டு வருகிறார்.

எவ்வளவு கடன்?

எவ்வளவு கடன்?

ஜியோ நிறுவனம் ஆரம்பித்த சில வருடங்களுக்குள்ளேயே, பல ஆயிரம் கோடி வாடிக்கையாளர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளது. இந்த நிலையில் வாடிக்கையாளர்களை தன் பக்கம் ஈர்க்க பல அதிரடியான சலுகைகளை கொடுத்து வந்தது ஜியோ. குறிப்பாக இலவச கால்கள், டேட்டா, குறைந்த விலையில் போன்கள் எனவும் கொடுத்து வந்தது. அதிலும் மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது, யாரும் கொடுக்க முடியாத சலுகைகளை கொடுத்து வந்தது என கூறலாம். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 30ம் தேதி நிலவரப்படி, இந்த நிறுவனத்தின் கடன் 840 பில்லியன் ரூபாயாக இருந்தது என்றும் இதன் தலைமை நிதி அதிகாரி கூறியுள்ளார்.

ஐபிஒ கொடுக்க திட்டமா?

ஐபிஒ கொடுக்க திட்டமா?

முகேஷ் அம்பானியின் இந்த திட்டம், ஜியோ நிறுவனத்தின் மூலம் பொதுப்பங்கு வெளியிட திட்டமிட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. ஏனெனில் ஜியோ அறிமுகமான மூன்று ஆண்டுகளுக்குள்ளேயே நாட்டின் முதல் நெட்வொர்க்காகவும், உலக அளவில் இரண்டாவது நெட்வொர்க்காகவும் உள்ளது. அதிலும் இந்த நிறுவனத்தின் அதிரடியான சலுகையினால் சுமார் 350 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது இந்த நிறுவனம். இந்த நிலையில் இது குறித்து தனது கருத்தினை கூறியுள்ள முகேஷ் அம்பானி தனது தொலைத் தொடர்பு நிறுவனம் மற்றும் சில்லறை வர்த்தக நிறுவனங்களை ஐந்து ஆண்டுகளுக்குள் பட்டியிடத் தொடங்கும் என்றும் கூறியுள்ளார்.

கடந்த காலாண்டில் வருவாய்

கடந்த காலாண்டில் வருவாய்

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ரிலையன்ஸ் ஜியோ 9.9 பில்லியன் ரூபாயை ஈட்டியுள்ளது. இதன் வருவாய் 123.54 பில்லியன் ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+