முகூர்த்த டிரேடிங்கில் 18% ஏற்றம்.. மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்..!

டாடா மோட்டார்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலை கடந்த ஞாயிற்குகிழமையன்று முகூர்த்த டிரேடிங்கில் 18 சதவிகித ஏற்றம் கண்டுள்ளது.

இதற்கு முக்கிய காரணம், இதன் குழும நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்திடமிருந்து, இந்த நிறுவனம் 6,500 கோடி ரூபாய் மதிப்புள்ள ஊக்கத் தொகையினை பெற உள்ளதாக கூறப்படும் நிலையில், இது முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்ததாகவும், இதனால் இந்த நிறுவனப் பங்கின் விலை ஞாயிற்றுகிழமையன்று நடைபெற்ற, சிறப்பு முகூர்த்த டிரேடிங் வர்த்தகத்தில் 18 சதவிகிதம் அதிகரித்ததாக கூறப்படுகிறது.

முகூர்த்த டிரேடிங்கில் 18% ஏற்றம்.. மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்..!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த வெள்ளிக் கிழமையன்று இந்த நிறுவனத்தின் உறுப்பினர் குழு, இந்த 6500 கோடி ரூபாய் உள்ளீட்டுக்கு அனுமதி கொடுத்துள்ளதாகவும், மேலும் இந்த நிதி இந்த நிறுவனத்தின் கடனை குறைக்க பயன்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தின் மொத்த கடன் 50,000 கோடி ரூபாய் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 216.56 கோடி ரூபாய் நஷ்டம் கண்டுள்ளதாகவும், இதே கடந்த ஆண்டு இதே காலாண்டில் 1,048.80 கோடி ரூபாய் நஷ்டம் கண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இதே வருவாய் 9 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும், 65,432 கோடி ரூபாயாக குறைந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

எனினும் செப்டம்பர் காலாண்டிலும் விற்பனை மந்தத்தால் அதிகப்படியான நஷ்டம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த நிறுவனத்தின் சொகுசு ரக காரான ஜாக்குவார் ரேண்ட் ரோவர் கார் விற்பனை கைகொடுத்ததாகவும், இதனால் நஷ்டம் குறைந்ததாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிலும் இந்த நிறுவனத்தின் சீனா பிரிவு கைகொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

ஒட்டொமொத்த வாகன துறையும் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், குறிப்பிட்ட நிறுவனங்கள் தவிர, மற்ற வாகன உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும், கடந்த செப்டம்பர் காலாண்டில் நஷ்டத்தினையே பதிவு செய்துள்ளன. எனினும் பண்டிகை கால விற்பனை மட்டுமே இந்த ஒட்டுமொத்த துறைக்கும் கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில நிறுவனங்கள் தங்களது விற்பனையை அதிகரித்துள்ளன. எனினும் டாடா மோட்டார்ஸ் மற்றும் அசோக் லேலண்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது விற்பனையை பற்றிய அறிக்கையை வெளியிட்டுள்ளன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+