2020க்கு இது போதும்.. ரிலையன்ஸ் ஜியோ செய்த சிறப்பான காரியம்..!

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளை 2020ஆம் ஆண்டுத் துவக்கத்தில் கொரோனா எதிரொலி காரணமாகக் கணிசமான வர்த்தகச் சரிவை எதிர்கொண்டாலும் டெலிகாம் சேவையின் சிறப்பான வளர்ச்சி காரணமாக இந்நிறுவனப் பங்குகள் 1530 ரூபாயில் இருந்து 1400 ரூபாய் வரையில் வர்த்தகம் செய்யப்பட்டது.

ஆனால் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட மார்ச் மாதத்தில் 1500 ரூபாய் அளவீட்டில் இருந்த ரிலையன்ஸ் பங்குகள் 875 ரூபாய் என்ற மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. இந்தக் காலகட்டத்தில் நாட்டின் அனைத்து முன்னணி நிறுவனங்களின் பங்குகளும் மோசமான சரிவை எதிர்கொண்டது.

முகேஷ் அம்பானி திட்டம்

முகேஷ் அம்பானி திட்டம்

இந்த மந்தமான வர்த்தகச் சூழ்நிலையில் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்டரீஸ், தனது டெலிகாம் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும், நிறுவனத்தின் கடன் சுமையைக் குறைக்க வேண்டும் எனத் திட்டமிட்டு டெலிகாம் பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்து களத்தில் இறங்கியது.

முதல் நிறுவனமே பேஸ்புக்

முதல் நிறுவனமே பேஸ்புக்

இத்திட்டத்தின் முதல் முதலீட்டு நிறுவனமே உலகின் மாபெரும் சமுக வலைத்தள நிறுவனமான பேஸ்புக் இதன் பின் அடுத்தடுத்து 13 வெளிநாட்டு நிறுவனங்கள் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு முதலீடு செய்து இந்நிறுவனத்தின் மதிப்பை சுமார் 5.16 லட்சம் கோடி ரூபாய்க்கு உயர்த்தியது.

பேஸ்புக் ரூ.43,574 கோடி முதலீடு

பேஸ்புக் ரூ.43,574 கோடி முதலீடு

ஏப்ரல் 22ஆம் தேதி முதல் நிறுவனமாகப் பேஸ்புக் சுமார் 43,574 கோடி ரூபாய் முதலீடு செய்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் சுமார் 9.99 சதவீத பங்குகளைக் கைப்பற்றியது.

13 முதலீடுகள்

13 முதலீடுகள்

இதைத் தொடர்ந்து சில்வர் லேக் - 5,656 கோடி ரூபாய், விஸ்டா ஈக்விட்டி பார்ட்னர்ஸ் - 11,367 கோடி ரூபாய், ஜெனரல் அட்லான்டிக் 6,598 கோடி ரூபாய், கேகேஆர் - 11367 கோடி ரூபாய், முபாதாலா - 9094 கோடி ரூபாய், அபுதாபி இன்வெஸ்ட்மென்ட் அத்தாரிட்டி - 5,684 கோடி ரூபாய், டிபிஜி - 4,547 கோடி ரூபாய், எல் கேட்டர்டன் - 1,895 கோடி ரூபாய், சவுதி பொது முதலீட்டு நிதி நிறுவனம் - 11,367 கோடி ரூபாய், இன்டெல் கேபிடெல் 730 கோடி ரூபாய், கடைசியாகக் கூகிள் 33,737 கோடி ரூபாய் முதலீடு செய்தது

1,52,056 கோடி ரூபாய்

1,52,056 கோடி ரூபாய்

இதன் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் சுமார் 32.47 பங்குகளை விற்பனை செய்து சுமார் சுமார் 1,52,056 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை திரட்டியது.

பங்கு விலை புதிய உச்சம்

பங்கு விலை புதிய உச்சம்

இதன் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு மதிப்பு 875 ரூபாய் வீழ்ச்சியில் இருந்து தடாலடியாகத் தனது ஜனவரி வலையான 1,500 ரூபாய் அளவீட்டை தாண்டி 2,369 ரூபாய் என்ற புதிய உச்சத்தைத் தொட்டு முதலீட்டாளர்களுக்குப் பெரிய அளவிலான நம்பிக்கையைக் கொடுத்தது.

மேலும் ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் லாக்டவுனில் எதிர்கொண்ட வீழ்ச்சியில் இருந்து லாக்டவுன் காலத்திற்குள்ளேயே மீண்டது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+