அதானி குழுமத்தின் எஃப்எம்சிஜி நிறுவனமான அதானி வில்மர், 2022 ஆம் ஆண்டில் ஐபிஓ வெளியிட்டு மிகப்பெரிய லாபத்தை அள்ளிக்கொடுத்த முக்கிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
இந்த நிலையில் எஃப்எம்சிஜி பிரிவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் அதானி வில்மர் 2 நாட்களில் பேக்-டு-பேக் அப்பர் சர்க்யூட்டைத் தொட்டு வருவதால்.
இந்த வாரத்தின் அதிக லாபத்தைக் கொடுத்த முக்கிய நிறுவனங்கள் பட்டியலில் சேர்ந்துள்ளது.
அதானி வில்மர்
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் அதானி வில்மர் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 5% அப்பர் சர்க்யூட் அளவீட்டைத் தொட்டது. அதன் ஐபிஓ வெளியீட்டு விலையுடன் ஒப்பிடுகையில், இன்று வரையில் அதானி வில்மர் பங்குகள் கிட்டத்தட்ட 140 சதவீதம் உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஐபிஓ வெளியிட்டு ஒரு வருடத்திற்குள் அதானி வில்மர் மல்டி பேக்கர் ஆக மாறியுள்ளது.
அப்பர் சர்க்யூட்
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில், அதானி வில்மர் பங்குகள் 5% அப்பர் சர்க்யூட்டில் முடிந்த நிலையில் ஒரு பங்கு விலை 550.85 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் மும்பை பங்குச்சந்தையில் இதன் சந்தை மதிப்பு கிட்டத்தட்ட 71,593 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. திங்கட்கிழமை 5 சதவீதம் அப்பர் சர்க்யூட் அளவீட்டைத் தொட்டு 524.65 ரூபாயாக இருந்தது.
10 சதவீத வளர்ச்சி
அதானி வில்மர் பங்கு இந்தத் திங்கட்கிழமை வர்த்தகம் முதல் அதன் 8 நாள் தொடர் நஷ்டத்தை நிறுத்தியுள்ளது. டிசம்பர் 9 முதல் 23 வரையிலான காலகட்டத்தில் மும்பை பங்குச்சந்தையில் அதானி வில்மார் பங்குகள் கிட்டத்தட்ட 24 சதவீதம் சரிந்தன. இருப்பினும், டிசம்பர் 26-27 முதல், அதானி வில்மார் பங்குகள் சுமார் 10% க்கும் அதிகமான உயர்வை பதிவு செய்த காரணத்தால் இழப்புகளின் அளவு டிசம்பர் மாதம் குறைந்துள்ளது.
17.37 மடங்கு சப்ஸ்கிரிப்ஷன்
அதானி வில்மர் தனது ஐபிஓவை ஜனவரி 27 முதல் 31 ஆம் தேதி வரை வெளியிட்டது, மேலும் இந்த ஐபிஓ கடைசி நாளில் 17.37 மடங்கு அதிகச் சப்ஸ்கிரிப்ஷனை பெற்றது. இந்நிறுவனம் ஒரு பங்கின் விலையை 218-230 ரூபாய் என நிர்ணயித்தது குறிப்பிடத்தக்கது.
தள்ளுபடி விலை
அதானி வில்மர் தனது ஐபிஓ வெளியீட்டு விலையுடன் ஒப்பிடும்போது தள்ளுபடி விலையில் தான் பிப்ரவரி 8 ஆம் தேதி பங்குச் சந்தைகளில் பட்டியலிட்டது. ஆயினும் தற்போது 140 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
தள்ளுபடி விலை
அதானி வில்மர் ஐபிஓ முடிந்ததும் பிஎஸ்இயில் ஒரு பங்குக்கு 221 ரூபாய்க்கு அறிமுகமானது, அதே நேரத்தில் என்எஸ்இயில் ஒரு பங்கு 227 ரூபாய்க்குப் பட்டியலிடப்பட்டது. ஒரு பங்குக்கு 230 ரூபாய்க்கு ஐபிஓ-வில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் bse, nse-யில் தள்ளுபடியில் தான் விற்பனை.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications