சென்னை: பொதுவாக ஐஐடி கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அங்கே நடக்கும் கேம்பஸ் இன்டர்வியூக்களில் அதிகபட்ச ஊதியத்துடன் வேலை வாய்ப்பினை பெறுவார்கள்.
எனவேதான் இத்தகைய கல்வி நிறுவனங்களில் படிப்பதற்கு மாணவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆனால் ஐஐடி மாணவர்களுக்கே வேலை வாய்ப்பு குறைந்துள்ளது என்ற செய்தி வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் மாணவரான தீரஜ் சிங் ஆர்டிஐ மூலம் பெறப்பட்ட தகவலை அண்மையில் வெளியிட்டிருந்தார். அதில் ஐஐடி மெட்ராஸில் 2024 ஆம் ஆண்டு பட்டப்படிப்பை முடிக்கும் மாணவர்களில் கேம்பஸ் பிளேஸ்மெண்ட்களில் மொத்தம் 1,150 பேர் மட்டுமே வேலைவாய்ப்பை பெற்றதாகவும் பாதிக்கும் அதிகமானவர்கள் வேலை வாய்ப்பை பெறவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு ஐஐடி மெட்ராஸ் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஐஐடி மெட்ராஸில் 2024ஆம் ஆண்டு படிப்பை முடிக்கும் பாதிக்கும் அதிகமான மாணவர்களுக்கு இதுவரை வேலையே கிடைக்கவில்லை என்ற வெளியான தகவலில் உண்மையில்லை என ஐஐடி மெட்ராஸ் சார்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.
அதில் ஐஐடி மெட்ராஸில் மாணவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கான பிளேஸ்மென்ட் பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அடுத்த என்ன செய்வது என முடிவெடுக்காமல் இருப்பதாகவும், தங்களுக்கு இருக்கும் பல்வேறு வாய்ப்புகளை ஆய்வு செய்து வருவதுமே காரணம் என்றும் கூறியுள்ளது.
சில மாணவர்கள் மேற்கொண்டு உயர் படிப்பை படிக்க வேண்டும் என்றும் ,சிலர் தங்களுடைய சொந்த நிறுவனத்தை தொடங்க வேண்டும் என்றும், சிலர் சிவில் தேர்வுகள் போன்ற போட்டி தேர்வுகளுக்கு போட்டித் தேர்வுகளில் பங்கேற்க தயாராக வேண்டும் என்றும் விரும்புகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மாணவர்கள் இதற்கான முடிவை எடுப்பதற்கு நேரம் எடுத்துக் கொள்வதாகவும் வரும் ஜூலை மாதம் மாணவர்களின் பிளேஸ்மெண்ட் விவரங்கள் முழுமையாக வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்ற பிறகு, எத்தனை மாணவர்கள் வேலைக்கு சென்றனர், எத்தனை மாணவர்கள் மேற்படிப்புக்கு சென்றனர், எத்தனை பேர் சயதொழிலை தேர்வு செய்தனர் என்ற விவரங்கள் விரிவாக வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில், ஐஐடி மும்பையில் 2024 ஆம் ஆண்டு மேற்படிப்பை முடிக்கும் மாணவர்களில் 36 சதவிகித மாணவர்கள் இதுவரை எந்த ஒரு வேலை வாய்ப்பையும் பெறவில்லை என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கு ஐஐடி மும்பை வெளியிட்ட விளக்கத்தில் மே மாதம் இறுதி வரை பிளேஸ்மெண்டுகள் நடக்கும் என்பதால் அப்பொழுது மட்டுமே விரிவான விரிவான தரவுகள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.அண்மையில் டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனம் வெளியிட்ட செய்தியிலும் ஐஐடி டெல்லியில் பயிலும் மாணவர்கள் பொருத்தமான வேலைகள் கிடைக்காமல் தவித்து வருவதாக கூறப்பட்டிருந்தது.
Story written by: Devika
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications