உலகில் எண்ணற்ற விஷயங்கள் நடக்கின்றன. அவற்றில் நம்பமுடியாத அளவிற்கு ஆச்சரியம் அளிக்கும் பல விஷயங்களை நாம் அடிக்கடி கேட்டுகொண்டும், பார்த்துகொண்டும்தான் இருக்கிறோம். அந்த வகையில், 2024 ஆம் ஆண்டில் ஒரு குடும்பமே சேர்ந்து ஒரு நிமிடத்திற்கு ரூ.3 கோடி சம்பாதிக்கின்றனர். அவர்கள் யார் தெரியுமா? ஒரு காலத்தில் இவரை ஒரு நிறுவனம் வேலையிலிருந்து நீக்கப்பட்டதன் எதிரொலி இன்று விஸ்வரூப வளர்ச்சியை எட்டியுள்ளது.
2024 ஆம் ஆண்டிற்கான உலகின் பணக்கார குடும்பங்களின் பட்டியலை ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ளது. இது முதல் 25 பணக்கார குடும்பங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் மீண்டும், அமெரிக்காவை சேர்ந்த வால் மார்ட்டின் உரிமையாளர்களான வால்டன் குடும்பம் முதலிடம் பிடித்தது. வால்டன் குடும்பம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவின் அம்பானி குடும்பமும் இந்த பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளது. வால்மார்ட் நிறுவனர் சாம் வால்டன் வேலையை பறிகொடுத்த நிலையில், பின்னாளில் வால் மார்ட்டை நிறுவி வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர். இன்று வால்டன் குடும்பம் ஒவ்வொரு நிமிடமும் 3 கோடி சம்பாதிக்கிறது.

வால்டன் குடும்பம்: வால்டன் குடும்பம் வால்மார்ட் பல்பொருள் அங்காடி வணிகத்தை செய்து வருகிறது. ஆறு தசாப்தங்களுக்கு முன்பு, சாம் வால்டன் என்ற நபர் அமெரிக்காவில் வால்மார்ட்டின் முதல் சூப்பர் மார்க்கெட்டை நிறுவினார். இன்று வால்மார்ட் $432 பில்லியன் (ரூ.36.9 லட்சம் கோடி) மதிப்புள்ள வணிக சாம்ராஜ்யமாக உள்ளது. வால்டன் குடும்பம் வால்மார்ட்டில் 46% பங்குகளைக் கொண்டுள்ளது. தற்போது, வால்டன் குடும்பத்தின் மூன்றாம் தலைமுறையினர் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர்.
வால்டன் குடும்பம் ஒவ்வொரு நாளும் வணிகத்தின் மூலம் $473.2 மில்லியன் சம்பாதிப்பதாக ப்ளூம்பெர்க் தெரிவிக்கிறது. அதாவது ஒரு நிமிடத்திற்கு 328,577 டாலர்கள் அல்லது 3 கோடி ரூபாய் ஆகும்.
வால்மார்ட்டின் ஆரம்பம்: வால்மார்ட்டின் நிறுவனர் சாம் வால்டன் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். சிறுவயதிலேயே விவசாயம், பால் விற்பனை, நாளிதழ் விநியோகம் செய்து குடும்பம் நடத்தினார். பின்னர் ஒரு சில்லறை கடையில் வேலை கிடைத்தது. ஆனால் சாம் வால்டன் தனது வேலையில் திருப்தி அடையாததால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். இந்தப் பின்னடைவு சாம் வால்டனின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
மளிகை வியாபாரத்தின் திறனை உணர்ந்த சாம் வால்டன் தனக்கு கிடைத்த ஒவ்வொரு பைசாவையும் சேமித்து வைத்தார். 1962 ஆம் ஆண்டில், சேகரிக்கப்பட்ட சிறிய தொகையைப் பயன்படுத்தி, அமெரிக்காவின் ஆர்கன்சாஸில் முதல் வால்-மார்ட் கடை நிறுவப்பட்டது. மக்கள் தள்ளுபடியை விரும்புகிறார்கள் என்பதை சாம் அறிந்திருந்தார். வால்மார்ட்டின் வெற்றிக்கான திறவுகோல் இதுதான்
2024 ஆம் ஆண்டின் முதல் 10 பணக்கார குடும்பங்கள்: 1. வால்டன் குடும்பம் (அமெரிக்கா)
சொத்துக்கள்: $432 பில்லியன் ஆகும்.
வணிகம்: வால்மார்ட் சூப்பர்மார்க்கெட்
2. அல் நஹ்யான் குடும்பம் (UAE)
சொத்துக்கள்: $323 பில்லியன்
வணிகம்: எண்ணெய் மற்றும் தொழில்துறை
3. அல் தானி குடும்பம் (கத்தார்)
சொத்துக்கள் : 172 பில்லியன்
வணிகம் : எண்ணெய் & எரிவாயு
4. ஹெர்ம்ஸ் குடும்பம் (பிரான்ஸ்)
சொத்துக்கள் : 170 பில்லியன் டாலர்
வணிகம்: ஆடம்பர ஃபேஷன்
5. கோச் குடும்பம் (அமெரிக்கா)
நிகர மதிப்பு: $148 பில்லியன்
வணிகம்: எண்ணெய், இரசாயனங்கள், ஆற்றல், நிதி, தொழில்நுட்பம்
6. அல் சவுத் குடும்பம் (சவூதி அரேபியா)
நிகர மதிப்பு: $140 பில்லியன்
வணிகம்: எண்ணெய்
7. மார்ஸ் குடும்பம் (அமெரிக்கா)
நிகர மதிப்பு: $133 பில்லியன்
வணிகம்: மிட்டாய் மற்றும் செல்லப்பிராணி பராமரிப்பு பொருட்கள்
8. அம்பானி குடும்பம் (இந்தியா)
நிகர மதிப்பு: $99 பில்லியன்
வணிகம்: எண்ணெய் சுத்திகரிப்பு, டெலிகாம், சில்லறை & நிதி
9. வெர்தைமர் குடும்பம் (பிரான்ஸ்)
சொத்துக்கள்: $88 பில்லியன்
வணிகம்: சேனல்
10. தாம்சன் குடும்பம் (கனடா)
சொத்துக்கள்: $87 பில்லியன்
வணிகம்: தாம்சன் ராய்ட்டர்ஸ்
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications