இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறை சமீப காலமாக பல்வேறு சவால்களை சந்தித்தாலும், புதிய உச்சத்தை தொடர்ந்து அடைந்து வருகிறது. மெட்ரோ விரிவாக்கம், பொருளாதார வளர்ச்சி, மேம்பட்ட கட்டமைப்பு வசதிகள் போன்ற காரணங்களினால் ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சி பாதையை நோக்கி பயணிக்கிறது. ப்ரோப் ஈக்விட்டி நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்தியாவின் முக்கிய ரியல் எஸ்டேட் சந்தையாக டெல்லி மாறியுள்ளது. டிசம்பர் காலாண்டில் அதிகப்படியான விற்பனையை எட்டியுள்ளது. அதாவது வீடு விற்பனை 25 சதவீதம் வரையிலும் புதிதாக கட்டப்பட்டு டெலிவரி செய்யப்பட்ட வீடுகளின் விற்பனை 59 சதவீதமும் அதிகரித்துள்ளது.
மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி என்சிஆர் போன்ற டயர் 1 நகரங்கள் ரியல் எஸ்டேட் சந்தையில் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. 2024-ஆம் ஆண்டில் டயர் 2 நகரங்களிலும் இதே போன்ற வளர்ச்சி தென்பட்டது. இது போன்ற நகரங்கள்ல மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை தரம், விசாலமான இடம், நவீன வசதிகள் ஆகியவற்றை வழங்குகின்றன. இதனால் வீடு வாங்குபவர்கள் பலர் ஈர்க்கப்படுகின்றனர்.

லக்ஸ்ரி வீடுகளுக்கான தேவை அதிகரிப்பு: 2024-ஆம் ஆண்டில் லக்சரி வீடுகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களுக்கு இடையில் லக்ஸரி வீடுகளின் விற்பனை 37.8% அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சிக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் வசதி படைத்த இந்தியர்களின் காரணமாக இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும் பிரீமியம் வாழ்க்கை முறைகளுக்கு ஏற்ப இந்த வீடுகள் கட்டியமைக்கப்பட்டுள்ளன. இந்த வருடம் இளம் தொழில் வல்லுநர்கள் ரியல் எஸ்டேட் சந்தையில் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். கிட்டத்தட்ட 60 சதவீத வீடு வாங்குபவர்கள் 35 வயதிற்கு உட்பட்டவர்கள்.
2025 ஆம் ஆண்டுக்கான கண்ணோட்டம்: 2025-ஆம் ஆண்டிலும் இந்திய ரியல் எஸ்டேட் சந்தை நம்பிக்கைகுரியதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் சந்தை 10 சதவீத வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2030-ஆம் ஆண்டுக்குள் ரியல் எஸ்டேட் சந்தை ஒரு ட்ரில்லியன் டாலர்களை எட்டும் என்று அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. அதேபோல 2025 ஆம் ஆண்டிலும் ரியல் எஸ்டேட் துறை 25 சதவீதம் வரை வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது கட்டிடக்கலைஞர்கள் சிறந்த வடிவமைப்புகளுக்கு முன்னுரிமை வழங்குகின்றனர். அதோடு ஸ்மார்ட் தொழில்நுட்பங்கள், ஆட்டோமேட்டிக் செட்டப் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் காரணமாக இளைய தலைமுறையினர் ரியல் எஸ்டேட் சந்தையில் ஈர்க்கப்படுகின்றனர்.


Click it and Unblock the Notifications