முன்னணி உள்நாட்டு தரகு நிறுவனமான ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ், அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்திய சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 26,300 அளவில் உயரும் என்று மதிப்பிட்டுள்ளது. அதேபோல், அடுத்த ஆண்டு விலை அதிகரிக்க வாய்ப்புள்ள ஸ்மால்கேப், மிட்கேப் மற்றும் லார்ஜ்கேப் உள்ளிட்ட 26 பங்குகள் லிஸ்ட் செய்துள்ளது.
ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் இந்தியாவின் முன்னணி உள்நாட்டு தரகு நிறுவனமாகும். 2025 ஆம் ஆண்டின் இறுதியில் நிஃப்டி 50 குறியீடு 26,300 அளவைத் தொடும் என்று ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவனம் கணித்துள்ளது. அதன்படி, மூலதனச் செலவு மற்றும் நுகர்வு அதிகரிப்பு ஆகியவை சந்தையை உயர்த்தும் என்று கூறியுள்ளது.

இந்திய பங்குச் சந்தை: சமீப காலமாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் இருந்து விலகி இருந்தாலும், டிசம்பரில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் அதிக முதலீடு செய்யும் போக்கு தெளிவாகத் தெரிகிறது. அடுத்த ஓராண்டில் இந்தியாவில் பணவீக்க விகிதம் குறையும் என்றும், ஜிடிபி வளர்ச்சி அதிகரிக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் இந்திய பங்குச் சந்தைக்கும் பலன் தரும்.
எனவே, சில்லறை முதலீட்டாளர்களின் பங்கேற்பு அதிகரிப்பதும் பங்குச் சந்தைக்கு சாதகமாக அமையும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில், ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் உயர்ந்த வளர்ச்சியை அடையும் துறைகளில் பங்குகளை பரிந்துரைத்துள்ளது. அவற்றில், லார்ஜ், மிட், ஸ்மால்கேப் துறைகளில் உள்ள 26 பங்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.
லார்ஜ்கேப் பங்குகள்: ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் பரிந்துரை செய்துள்ள பங்குகளில் லார்ஜ்கேப் பங்குகள் அதிகம் இடம்பெற்றுள்ளன. அவற்றில், பார்தி ஏர்டெல், எச்டிஎஃப்சி வங்கி, எஸ்.பி.ஐ,பஜாஜ் ஃபைனான்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா, இண்டிகோ, எஸ்பிஐ லைஃப், இன்ஃபோசிஸ், ஐடிசி, லார்சன் & டூப்ரோ, JSW ஸ்டீல், டாடா பவர், என்டிபிசி, அம்புஜா சிமெண்ட்ஸ், கெயில், ஜிண்டால் ஸ்டீல் மற்றும் BHEL ஆகிய பங்குகளை ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் பரிந்துரைத்துள்ளது.
மிட்கேப் பங்குகள்: மிட்கேப் பங்குகளில் அரோபிந்தோ பார்மா, சோலார் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள், இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட பங்குகளை ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் கொடுத்துள்ளது.
ஸ்மால்கேப் பங்குகள்: அதேபோல், ஸ்மால்கேப் பங்குகளில் கஜாரியா செராமிக்ஸ், சிக்னேச்சர் குளோபல், லெமன் ட்ரீ ஹோட்டல்கள், பிரமல் பார்மா, ஏஞ்சல் ஒன், நவின் புளோரின் உள்ளிட்ட பங்குகள் உள்ளன.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications