கோயம்புத்தூர் மக்களால் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டம் முக்கியமான கட்டத்தை நோக்கி நகர்கிறது. 2025 ஆம் ஆண்டு ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் முதற்கட்ட பணிகள் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மற்றும் பெங்களூர்-க்கு நிகராக கோயம்புத்தூர் ஐடி துறையிலும், உயர் தொழில்நுட்ப துறையிலும் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில், இந்த மெட்ரோ திட்டம் கோயம்புத்தூரின் உள்கட்டமைப்பில் முக்கிய வளர்ச்சியாக இருக்கும்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (சிஎம்ஆர்எல்) நிர்வாக இயக்குனர் எம்.ஏ.சித்திக் மெட்ரோ திட்டத்தில் செயல்படும் முக்கிய அமைப்புகள் மற்றும் அதிகாரிகளுடன் நடத்திய கூட்டத்திற்குப் பிறகு 025 ஆம் ஆண்டு ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் முதற்கட்ட பணிகள் தொடங்கும் என தெரிவித்தார்.
மத்திய அரசின் ஒப்புதல்: இந்த திட்டத்திற்கு விரைவில் மத்திய அரசின் இறுதி ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதன் மூலம் திட்டத்தின் செயல்பாடுகள் வேகமெடுக்கும். இத்திட்டத்தின் முதல் கட்டத்தில் அவினாசி சாலை மற்றும் சத்தியமங்கலம் சாலை என இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ சேவையை கொண்டுவரப்பட உள்ளது. இத்திட்டத்தின் மொத்த செலவு ரூ.10,740 கோடி ஆகும்.
2 ஆண்டுகளில் நிலம் கையகப்படுத்துதல்: இந்த திட்டத்திற்கு கணிசமான அளவு நிலம் கையகப்படுத்துதல் தேவைப்படும், நிலம் கையகப்படுத்துவதற்கான காலம் இரண்டு ஆண்டுகள் வரை ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
நிலம் கையகப்படுத்திய பின்னர், கட்டுமான கட்டம் மூன்று ஆண்டுகளுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. CMRL, அவினாசி சாலையின் வடக்குப் பகுதியில், வி.ஓ.சி மைதானத்தில் தொடங்கி நீலம்பூர் வரை (பிஆர்எஸ் மைதானம், பீளமேடு காவல் நிலையம், கோவை மருத்துவக் கல்லூரி), ஏற்கனவே உள்ள 10.1 கிமீ தூர மேம்பாலத்திற்கு அருகிலுள்ள நிலத்தைப் பயன்படுத்தி மெட்ரோ ரயிலை கட்ட திட்டமிட்டுள்ளது.
10 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும்: முதல் கட்டத்தில் இரண்டு வழித்தடங்களுக்கும் சுமார் 10 ஹெக்டர் நிலம் கையகப்படுத்தப்படும், மேலும் நீலம்பூரில் டிப்போ மற்றும் சேவை நிலையம் கட்ட 16 ஹெக்டர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.
மேலும் இத்திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்துதல் அளவை குறைக்க, சாலை ஓரத்தில் தூண்கள் நிறுவப்பட திட்டமிட்டு உள்ளது. இதேபோல் ஒவ்வொரு தூணும் 30 மீட்டர் இடைவெளியில் நிறுவி, ஏற்கனவே உள்ள சாலையின் மேல் பாதி பகுதியை மட்டும் பயன்படுத்தி கட்டுவது போன்ற புதுமையான வடிவமைப்புகள் இந்த திட்டத்தில் கொண்டு வரப்பட உள்ளது.
3-கோச் ரயில்கள்: கோவை மெட்ரோ ரயில் திட்டம் ஒருங்கிணைந்த வளர்ச்சியை முன்னுரிமையாகக் கொள்ளும், விமான நிலையம், ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களில் தடையின்றி இணைப்புகளை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்படும்.
மேலும் இத்திட்டத்தில் 3-கோச் ரயில்கள் பயன்படுத்தப்பட்டு ஒரு முறை பயணத்தில் 700 பயணிகள் வரையில் பயணிக்கப்படும் வகையில் அமைக்கப்பட உள்ளது. சென்னை மெட்ரோ வழித்தடத்தில் 4-கோச் ரயில்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மதுரை மெட்ரோ ரயில் திட்டம்: சென்னை மெட்ரோ விரிவாக்கம் போலவே, கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கும் மத்திய அரசாங்கத்திடமிருந்து நிதி பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசால் கோரிய கூடுதல் தகவல்கள் உள்ளடக்கிய திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கை (DPR) ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரை மெட்ரோ: திருமங்கலம் - ஒத்தக்கடையை இணைக்கும் மதுரை மெட்ரோ ரயில் திட்டம், நிலத்தடி பாதை உட்பட 32 கிமீ நீளம் கொண்ட ரயில் திட்டம். இதன் மதிப்பிடப்பட்ட செலவு ரூ.16,340 கோடி ஆகும். இதில் 17 மெட்ரோ நிலையங்கள் அமைக்கப்படும், அவற்றில் மதுரை உயர் நீதிமன்றம், புதுர், சிம்மக்கல், மதுரை சந்திப்பு மற்றும் திருமங்கலம் மெட்ரோ நிலையங்கள் முக்கியமானவை.
More From GoodReturns

கோயம்புத்தூர் ரியல் எஸ்டேட்: 3 வருடத்தில் டபுள் மடங்கு வளர்ச்சி.. இந்த ஏரியா பக்கமே போக முடியாது போலியே..!!

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

தங்கம் விலை அதிரடி சரிவால் கோயம்புத்தூர் மக்கள் செம குஷி.. நகை வாங்குவோருக்கு பொன்னான வாய்ப்பு..!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications