ஐடி நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாகவே வழக்கத்திற்கு மாறான வளர்ச்சியினை கண்டு வருகின்றன. குறிப்பாக கொரோனாவின் வருகைக்கு பிறகு ஐடி துறையின் தேவையானது மிக அதிகளவில் அதிகரித்துள்ளது.
இதனால் ஐடி துறையில் ஊழியர்களுக்கு, கடந்த சில காலாண்டுகளாகவே வரலாறு காணாத அளவு அதிகரித்துள்ளது.
குறிப்பாக டிஜிட்டல் திறனுள்ள ஊழியர்களுக்கான தேவையானது, பற்றாக்குறையாகவே இருந்து வருவதாக, ஐடி நிறுவனங்கள் கூறி வருகின்றன.
ஊழியர்கள் வெளியேற்றம்
இது இப்படி எனில், ஏற்கனவே நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் ஊழியர்களின் வெளியேறும் விகிதமானது, வரலாறு காணாத அளவு அதிகரித்துள்ளது. ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை தக்கவைத்துக் கொள்ள ஒரே வருடத்தில் இரு முறை சம்பள உயர்வு, சிறப்பு போனஸ் உள்ளிட்ட பல வகையிலும் சலுகைகளை கொடுத்து வருகின்றன. ஆனாலும் வெளியேறும் விகிதம் அதிகரித்துள்ளது.
டெக் மகேந்திராவில் வெளியேற்றம்
டெக் மகேந்திரா நிறுவனத்தில் கடந்த 90 நாட்களில் மட்டும் 21% பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன.
பல நிறுவனங்களும் இந்த அட்ரிஷன் விகிதத்தினை குறைக்கவும், ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ளவும் அதிக காம்பன்சேஷன் மற்றும் ஊக்கத்தொகைகளை கொடுத்து வருகின்றன. இருப்பினும் ஒரு ஊழியருக்கு பற்பல ஆஃபர்கள் கிடைப்பதால், எங்கு சிறந்த ஆஃபர், எங்கு சம்பளம் அதிகம் கிடைக்கிறதோ? அங்கு ஊழியர்கள் செல்கின்றனர்.
அட்ரிஷன் விகிதம் அதிகரிப்பு
கடந்த 12 மாதங்களில் ஊழியர்களின் வெளியேறும் விகிதமானது இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ நிறுவனங்களில், முறையே 20.1% மற்றும் 20.5% ஆக அதிகரித்துள்ளதாக கூறியிருந்தன. இதே மற்றொரு முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் நிறுவனம் காலாண்டில் அட்ரிஷன் விகிதமானது 11.9% குறைந்துள்ளது.
டெக் மகேந்திரா பணியமர்த்தல்
கடந்த ஜூலை மாதத்தில் டெக் மகேந்திரா நிறுவனம் 14,930 ஊழியர்களை பணியமர்த்தியுள்ளதாகவும், இதன் படி மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையானது 1.41 லட்சமாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. முதல் 4 ஐடி நிறுவனங்களில் இரண்டாம் காலாண்டில் 50,000 தொழிலாளர்களுக்கு மேல் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதே இரண்டு காலாண்டுகளிலும் சேர்த்து மொத்தம் 1 லட்சம் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications