நவம்பரில் மட்டும் 23.47 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கமாம்..!

இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி எந்த அளவுக்கு சிக்கலான விஷயமோ அதே அளவுக்கு, இந்திய மக்களுக்கு போதுமான வேலைவாய்ப்புகள் இல்லாமல் இருப்பது மிகப் பெரிய பிரச்சனை தான்.

இந்தியாவில் போதுமான வேலை வாய்ப்புகள் இல்லாததால், சாதாரண மக்கள், அன்றாடம் செலவழிக்கும் தொகை கூட கணிசமாக குறைந்து இருக்கிறது.

ஆக வேலை வாய்ப்பு இல்லாததால், மக்கள் கையில் பணம் இல்லை. பணம் இல்லாததால் டிமாண்ட் இல்லை, டிமாண்ட் இல்லாததால் நுகர்வு இல்லை என ஒரு பொருளாதார சிக்கல் நிலவிக் கொண்டு இருக்கிறது.

வேலை இல்லா திண்டாட்டம்

வேலை இல்லா திண்டாட்டம்

கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. ஆனால் மறு பக்கம் படித்து முடித்துவிட்டு கையில் பட்டப் படிப்புடன் வேலை தேடி இளைஞர்கள் கல்லூரிகளில் இருந்து இறங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள். இதை தடுக்க மத்திய அரசும் தன்னால் முடிந்த அளவுக்கு பல நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

தரவுகள்

தரவுகள்

அதன் ஒரு பகுதியாக, கடந்த நவம்பர் 2019 ஒரே மாதத்தில் மட்டும் சுமார் 23.47 லட்சம் பேர் முறையான பொருளாதார (Formal Economy) வேலைகளில் சேர்ந்து இருப்பதாகச் சொல்லி இருக்கிறது மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MOSPI - Minsitry of Statistics and Program Implementation).

3 திட்டங்கள்

3 திட்டங்கள்

மத்திய அரசின் மூன்று திட்டங்களில் இருந்து இந்த தரவுகளை எடுத்து இருக்கிறார்களாம். கடந்த நவம்பர் 2019-ல் Employees Provident Fund Organisation-ல் 8,67,963 பேர் புதிதாக சேர்ந்து இருக்கிறார்களாம். Employees' State Insurance Scheme-ன் கீழ் 14.33 லட்சம் பேர் சேர்ந்து இருக்கிறார்களாம். தேசியன் பென்ஷன் திட்டத்தின் கீழ் 46,686 பேர் சேர்ந்து இருக்கிறார்களாம்.

மொத்தம் 23.47 லட்சம்

மொத்தம் 23.47 லட்சம்

ஆக ஒட்டு மொத்தத்தில் 23,47,649 பேருக்கு, அமைப்பு சார்ந்த வேலை வாய்ப்புகள் உருவாகி இருப்பதாகச் சொல்கிறது அரசு. ஒரு நிறுவனத்தில் 20 பேருக்கு மேல் வேலை பார்த்தால், அவர்கள் தங்கள் நிறுவனத்தை Employees Provident Fund Organisation-ல் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பதிவு செய்ய வேண்டும்

பதிவு செய்ய வேண்டும்

அதே போல ஒரு நிறுவனத்தில் 10 பேருக்கு மேல் வேலை பார்த்தால் தங்களை Employees' State Insurance Scheme-ன் கீழ் பதிவு செய்து கொள்ள வேண்டும். தேசிய பென்ஷன் திட்டத்தின் கீழ் 18 - 60 வயதுக்குள் இருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் தங்களை பதிவு செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+