விஜய்-இன் தவெகவுக்கு 13, திமுகவுக்கு 0 : சட்டமன்ற தேர்தலில் நடந்த தலைகீழ் மாற்றம்!!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இந்த முறை பல்வேறு சுவாரசியங்களை தந்திருக்கிறது. வரலாறு காணாத வகையில் மக்கள் திராவிட கட்சிகளை புறக்கணித்து விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு திரளாக வாக்களித்துள்ளனர். தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து இருக்கிறது.

தமிழக வெற்றிக்கழகத்தின் இந்த வெற்றியின் மூலம் ஏராளமான சாதாரண மக்கள் மற்றும் இளம் வயதினர் அதிக அளவில் சட்டசபையில் எம்எல்ஏக்களாக மின்ன போகின்றனர். அதுமட்டுமில்லை எப்போதும் இல்லாத வகையில் இந்த முறை தமிழக சட்டசபையில் 23 பெண் எம்எல்ஏக்கள் இடம்பெற உள்ளனர். 2026 சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களிலும் , ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி 73 இடங்களிலும், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றியை பெற்றன.

விஜய்-இன் தவெகவுக்கு 13, திமுகவுக்கு 0 : சட்டமன்ற தேர்தலில் நடந்த தலைகீழ் மாற்றம்!!

கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக தமிழ்நாட்டை மாறி மாறி திமுகவும் அதிமுகவும் ஆட்சி செய்து வந்த நிலையில் இந்த முறை திராவிட கட்சி அல்லாத ஒரு கட்சி ஆட்சி அமைக்கிறது. முதல் தேர்தலிலேயே விஜயின் தமிழக வெற்றிக்கழகம் சாதனை வெற்றியை பதிவு செய்திருக்கிறது. விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கிறார். இந்த சட்டசபையில் கிட்டத்தட்ட 23 பெண்கள் எம்எல்ஏக்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 13 பேர் தமிழக வெற்றி கழக கட்சியை சேர்ந்தவர்கள்.

Also Read

தவெக சார்பில் எம்.எல்.ஏ ஆக தேர்வு செய்யப்பட்டுள்ள பெரும்பாலான பெண்கள் சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர்கள்.

தவெக பெண் எம்.எல்.ஏக்கள்:

எம்.ஆர்.பல்லவி (திரு.வி.க.நகர்)

காமாட்சி (பல்லாவரம்)

சிந்து (குடியாத்தம்)

விஜயலட்சுமி (குமாரபாளையம்)

தமிழ்செல்வி (பவானிசாகர்)

சத்தியபாமா (திருப்பூர் வடக்கு)

கமலி (அவினாசி)

கனிமொழி சந்தோஷ் (கவுண்டம்பாளையம்),

சத்யா (கிருஷ்ணராயபுரம்),

குழந்தை ராணி நாச்சியார் (சிவகங்கை),

கீர்த்தனா (சிவகாசி),

ஜெகதீஸ்வரி (ராஜபாளையம்),

தாஹிரா (ராணிப்பேட்டை )

விஜய்-இன் தவெகவுக்கு 13, திமுகவுக்கு 0 : சட்டமன்ற தேர்தலில் நடந்த தலைகீழ் மாற்றம்!!

பிற கட்சி பெண் எம்.எல்.ஏக்கள்:

பிரேமலதா விஜயகாந்த் (தே.மு.தி.க., விருத்தாசலம்)

சவுமியா அன்புமணி (பா.ம.க., தர்மபுரி)

லீமாரோஸ் (அ.தி.மு.க., லால்குடி)

மரகதம் குமரவேல் (அ.தி.மு.க., மதுராந்தகம்)

எல்.ஜெயசுதா (அ.தி.மு.க., ஆரணி)

உஷாராணி (அ.தி.மு.க., ஏற்காடு)

மரகதம் வெற்றிவேல் (அ.தி.மு.க., பாப்பிரெட்டிப்பட்டி,

சத்தியபாமா (அ.தி.மு.க., தாராபுரம்)

லதா (மா.கம்யூ, கீழ்வேளூர்),

தாரகை கத்பர்ட் (காங்கிரஸ், குளச்சல்)

Recommended For You

தமிழக வெற்றி கழகம் சார்பில் 13 பெண்களும், அதிமுக சார்பில் 6 பெண்களும், மார்க்சிஸ்ட், தேமுதிக, பாமக, காங்கிரஸ் சார்பில் தலா ஒருவர் என மொத்தம் 23 பெண்கள் எம்எல்ஏக்களாக சட்டசபையில் அமர இருக்கின்றனர். இவர்களில் திமுக பெண் எம்.எல்.ஏக்கள் ஒருவர் கூட இல்லை. கூட்டணி கட்சியில் இருந்து தான் 3 பேர் வந்துள்ளார்களே தவிர நேரடி திமுக பெண் எம்.எல்.ஏக்கள் யாரும் இல்லை. ஒட்டுமொத்தமாக சதவீத அடிப்படையில் பார்த்தால் தமிழ்நாடு சட்டமன்றத்தில் 10% பெண்கள் எம்எல்ஏக்களாக திகழப் போகிறார்கள். இதில் தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் அரசியலுக்கும் பொது வாழ்வுக்கும் புதியவர்கள் அதே வேளையில் எதிர்க்கட்சி பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் நீண்ட அரசியல் அனுபவம் கொண்டவர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+