இன்றெல்லாம் இளைஞர்கள் சிறுவயதிலேயே நிதி சுதந்திரத்தை அடைந்து விட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். அதற்காக சிலர் உழைக்கவும் செய்கின்றனர். அப்படி தான் கஷ்டப்பட்டு முன்னேறியது குறித்த விவரங்களை டெல்லியைச் சேர்ந்த நபர் ட்வீட் செய்திருந்தார். 23 வயதான குஷால் ஆரோரா என்ற இளைஞர் ஆண்டுக்கு $500,000 சம்பாதிப்பதற்காக அவர் செய்த தியாகங்கள் குறித்து ஒரு ட்விட்டர் பதிவில் விவரித்திருந்தார்.
தன்னுடைய X பதிவில் குஷால் அரோரா ஆண்டுதோறும் $500,000 (ரூ. 4,20,35,350) சம்பாதிப்பதற்காக அவர் என்னென்ன விஷயங்களை விடுத்திருந்தார் என்பதை ஒரு பதிவாக போஸ்ட் செய்திருந்தார். இவருடைய கஷ்டத்தை பலரும் பாராட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சமூக ஊடகங்களில் பயனர்கள் இளைய தலைமுறையினர் மீது தேவையற்ற அழுத்தத்தை உருவாக்கியதற்காக அவரை கடுமையாக கண்டித்தனர்.

அரோரா தனது பதிவில், இந்திய மதிப்புக்கு ஆண்டுதோறும் ரூ. 4,20,35,350 சம்பாதிக்க தான் செய்த தியாகங்களான நீண்ட நேரம் பணிபுரிதல், சமூக நிகழ்வுகளை தவிர்த்தல் மற்றும் தூக்கமில்லாமால் இருந்த இரவுகள், தனக்கு நிதி சுதந்திரத்தை அடைய உதவியதாக போஸ்ட் செய்துள்ளார்.
தனது X பதிவில் "எனக்கு 23 வயதாகிறது, ஆண்டுக்கு $5,00,000க்கும் அதிகமாக சம்பாதிக்கிறேன். என் வயதில் உள்ள மாணவர்கள் ரிலாக்ஸ் செய்துகொண்டிருந்தபோது, நான் தூக்கமில்லாமால் இரவுகளிலும் உழைத்தேன், சமூக நிகழ்வுகளை தவிர்த்தேன், தோல்விகளுடன் போராடி, இந்த நிலையை அடைந்திருக்கிறேன். நீங்கள் உங்கள் கனவு வாழ்க்கையை உருவாக்கி கொண்டிருக்கிறீர்களா?" என்ற கேள்வியுடன் பதிவிட்டிருந்தார்.
இவருடைய பதிவு பல இளைஞர்களுக்கும் உத்வேகம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் செல்வத்தின் மீது ஆரோக்கியமற்ற கருத்துக்களை பதிவிட்டதற்காக அரோராவை நெட்டிசன்கள் கடுமையாக சாடினர்.
நீங்கள் உங்கள் வாழ்க்கையை வாழ்ந்தீர்கள்.. அவர்கள் அவர்களுடைய வாழ்க்கையை வாழ்கிறார்கள். எல்லாருமே இவ்வளவு பணம் சம்பாதிக்க வேண்டும் என்று கனவு காண்பதில்லை. இதை ஒரு பிரபலமான விஷயமாக கருதுவதை நிறுத்துங்கள். நீங்கள் கடினமாக உழைத்தீர்கள். பணம் சம்பாதித்தீர்கள்.. அதோடு நீங்கள் வாழுங்கள். இளைஞர்களுக்கு அந்த அழுத்தத்தை உருவாக்குவதை நிறுத்துங்கள் என்று ஒரு எக்ஸ் பயனர் பதிவிட்டிருந்தார்.
மற்றொரு பயனர் "நான் அந்த வயதில் பார்ட்டியிலிருந்தேன். இப்போது நீங்கள் சொன்னதை விட அதிகமாக சம்பாதிக்கிறேன். நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான். உங்களுக்கு ஒரு விஷயம் வேலை செய்தால்.. அது அனைவருக்கும் வேலை செய்யும் என்று அர்த்தமல்ல என்று பதிவிட்டிருந்தார்.
சில கமெண்ட்ஸ்களுக்கு பதில் அளித்த அரோரா நான் 19 வயதில் இருந்து எனது பெற்றோருக்கு உதவியாக இருக்க விரும்பினேன். அதற்கான எனது பயணத்தை பகிர்ந்தேன். இது இளைஞர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துவது போல தோன்றினால் தயவுசெய்து என்னுடைய போஸ்டை மியூட் செய்து விடுங்கள். ஆனால் எனது இலக்கு பார்வையாளர்கள் மற்றும் இளைஞர்களை ஊக்குவிப்பது தான் என்று எழுதி இருந்தார்.
பல்வேறு எதிர் விளைவுகள் இருந்த போதிலும் ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது. குஷால் அரோராவின் கனவு வாழ்க்கை என்ற பதிவு, வெற்றி, மன ஆரோக்கியம் இளைஞர்கள் இன்று எதிர்கொள்ளும் அழுத்தங்கள் பற்றிய உரையாடலைத் தூண்டியுள்ளது


Click it and Unblock the Notifications