இந்திய ரயில்வே 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பயணிகளுக்கு உகந்த நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி, 100 நாள் திட்டத்தை மாற்றத் தயாராகி வருகிறது.
இந்தத் திட்டத்தில் புதிய 24 மணிநேர இந்திய ரயில்வே ரயில் டிக்கெட் ரீபண்டு திட்டம், வந்தே பாரத் ஸ்லீப்பர், உதம்பூர்- ஸ்ரீநகர்- பாரமுல்லா ரயில் லிங்க் இறுதிக் கட்டம் திறப்பு, ரயில்வே பயணிகளுக்கான சூப்பர் ஆப், இந்தியாவின் முதல் வெர்ட்டிகல் லிப்ட் ரயில்வே பாலம் ஆகியவை ரயில்வே அமைச்சகத்தின் 100 நாள் திட்டங்களில் அடங்கும்.

2024 மக்களவைத் தேர்தலுக்குப் பின் பதவியேற்கும் புதிய அரசு இந்தத் திட்டங்களை செயல்படுத்த உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின்படி அனைத்து அமைச்சர்களும் புதிய அரசுக்கான 100 நாள் மக்கள் நலத் திட்டங்களை உருவாக்குவதில் முனைந்துள்ளனர்.
இந்திய ரயில்வே 24 மணிநேர டிக்கெட் ரீபண்டு திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. தற்போதுள்ள நடைமுறைப்படி ரீபண்டு பெறுவதற்கு மூன்று நாட்கள் ஆகும். அத்துடன் டிக்கெட்டிங், டிரெய்ன் டிராக்கிங் உள்பட பல்வேறு வசதிகள் கொண்ட சூப்பர் ஆப்பையும் அறிமுகப்படுத்த உள்ளது.
ரயில்வேயின் 100 நாள் திட்டத்தில் உள்ள முக்கிய அம்சங்கள்-
- புதிய ஆட்சி அமைந்த முதல் 100 நாட்களுக்குள் பிரதம மந்திரி ரயில் யாத்ரி பீமா யோஜனா இன்சூரன்ஸ் திட்டம் பயணிகளுக்கு அறிமுகம்.
- 40,900 கி.மீ. நீளமுள்ள 3 எக்கனாமிக் காரிடார்களை ரூ.11 லட்சம் கோடியில் அமைப்பு.
- 24 மணிநேரத்தில் பயணிகள் தங்களது ரயில் டிக்கெட் ரீபண்டை எளிதாகப் பெறும் திட்டம்.
- டிரெய்ன் ஸ்டேட்டஸ், டிக்கெட் புக்கிங், ரயில்வே தொடர்பான பிற சேவைகளை பெறுதல் உள்ளிட்ட அம்சங்கள் கொண்ட சூப்பர் ஆப்பை நிறுவுதல்.
- ஜம்முவிலிருந்து காஷ்மீருக்கு உதம்பூர்- ஸ்ரீநகர்- பாரமுல்லா ரயில் லிங்க் திட்டத்தின் மூலம் அதிக ரயில்களை இயக்குதல்.
- உலகின் மிக உயர்ந்த ரயில்வே பாலமான செனாப் பாலத்தை அமைத்தல்.
- இந்தியாவின் முதல் கேபிள் இணைப்பு ரயில் பாலமான அஞ்சி காட் பாலம் திறப்பு
- இந்தியாவின் முதல் வெர்டிகிள் லிப்ட் ரயில் பாலம், ராமேஸ்வரத்தை இணைக்கும் பாம்பன் பாலம்.
- வந்தே பாரத் ரயில்களில் ஸ்லீப்பர் பர்த்களை அமைத்தல்.
- புல்லட் ரயில் திட்டத்தை விரைவுபடுத்தி செயல்படுத்துதல். அகமதாபாத்- மும்பை இடையிலான 508 கி.மீ. நீளமுள்ள பாதையை 2029 ஏப்ரலுக்குள் செயல்படுத்துதல். ஆகியவை இந்த 100 நாள் திட்டத்தில் அடங்கும்.
Story written by: I.Jayachandran


Click it and Unblock the Notifications