கூகுள் ஊழியர்கள் 250 பேர் சூரிச் அலுவலகத்தில் இருந்து வெளியேறி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது நிறுவனம் தங்களுடன் பணிபுரிந்த ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ள நிலையில், இது மேற்கொண்டு ஊழியர்களை பணி நீக்கம் செய்யலாம் என்ற அச்சத்தின் மத்தியில் இருக்கலாம் என தெரிகிறது.
கடந்த ஜனவரி நடுப்பகுதியில் கூகுள் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனம், சுமார் 12,000 ஊழியர்களை உலகம் முழுக்க பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவித்தது.
இந்த நடவடிக்கையில் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் அமெரிக்கா மற்றும் கனடா உள்ளிட்ட பல பகுதிகளில் அடங்குவார்கள்.
போராட்டம்
இந்த நிலையில் தான் கூகுள் நிறுவன ஊழியர்கள் சூரிச் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்து, போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளதாக தெரிகின்றது.
சர்வதேச பொருளாதாரம் என்பது நிலையற்ற ஒரு பாதைக்கு சென்று கொண்டுள்ள நிலையில், மிகப்பெரியளவிலான பணி நீக்க நடவடிக்கைகளும் வந்து கொண்டு தான் உள்ளன. இது இன்னும் நீடிக்கலாம் என்ற அச்சமே இருந்து கொண்டு தான் உள்ளன.
ஏற்கவே முடியாது
இதற்கிடையில் தான் கூகுள் நிறுவன ஊழியர்கள் இப்படி ஒரு நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். மேலும் இது குறித்து ஊழியர்கள் தரப்பில் கூகுள் ஊழியர்கள் நாங்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக நிற்கிறோம். இந்த பணி நீக்கம் என்பது ஏற்புடையது அல்ல எனவும் கூறப்படுகிறது. ஆக பணி நீக்கங்களுக்கான மாற்றுகளை, தீவிரமாகவும் ஆய்வு செய்ய தொழிலாளர்களுடன் நிறுவனம் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.
யோசிக்க வேண்டிய விஷயம்
பணி நீக்கத்தினை தவிர்க்க முடியாவிட்டால், நிறுவனம் அவற்றின் பிரச்சனைகளையாவது குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது அவசியமான ஒன்று என்றும் ஊழியர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆக இதுவும் யோசிக்க வேண்டிய ஒரு விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
புதிய பிரச்சனை
கூகுள் நிறுவனம் நல்ல பெர்பான்மன்ஸ் செய்த ஊழியர்களை கூட சமீபத்தில் பணி நீக்கம் செய்ததாக சர்ச்சையானது. இது மேற்கொண்டு பிரச்சனையாக வெடித்தது. இப்படி ஒரு சூழலில் கூகுள் நிறுவனம் தற்போது மேற்கொண்டு புதியதாக ஒரு பிரச்சனையை எதிர்கொண்டுள்ளது. இதனை எப்படி சரி செய்யப் போகிறதோ?


Click it and Unblock the Notifications