புதிதாக வரும் 250 வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவை! விமானத்திற்கு இணையான வசதிகள்! இனி நைட் டிராவல் வேற லெவல்!

இந்திய ரயில்வே வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு வருகிறது. அதன் அடிப்படையில் 250-க்கும் மேற்பட்ட புதிய வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலானோர் வசதியான பயணத்திற்காகவே இது போன்ற ரயிலை தேர்வு செய்கின்றனர். அதிநவீன வசதிகள் கொண்ட ரயில் சேவையை இரவு நேர பயணத்திற்கும், விரிவாக்கம் செய்தால் பயணிகளுக்கு வசதியாக இருக்கும் என்பதற்காக இந்திய ரயில்வே இத்தகைய நடவடிக்கையை எடுத்து வருகிறது.

2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் சேவை பிரம்மாண்ட வரவேற்பை பெற்றது. இந்த ரயில் 180 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க கூடிய திறன் கொண்டவை. மேலும் தண்டவாளம் மற்றும் கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்ப 160 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது.

புதிதாக வரும் 250 வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவை! விமானத்திற்கு இணையான வசதிகள்! இனி நைட் டிராவல் வேற லெவல்!

முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவை 16 பெட்டிகளுடன் இயங்கக்கூடியது. இதில் சுமார் 823 பயணிகள் வரை தாராளமாக அமர்ந்து பயணம் செய்யலாம். இதில் ஏசி ஃபர்ஸ்ட் கிளாஸ், ஏசி 2 டயர் மற்றும் ஏசி 3 டயர் வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட இருக்கும் ட்ரெயினில் என்னென்ன வசதிகள் கிடைக்கும்?: முழுக்க முழுக்க தானியங்கி அடிப்படையிலான கதவுகள், அதிர்வை தாங்கக்கூடிய கட்டமைப்பு, பயணிகள் சோர்வு இல்லாமல் பயணம் செய்யக்கூடிய படுக்கைகள், விமானத்திற்கு இணையான சில நவீன வசதிகள் ஆகியவை அடங்கும்.

Also Read

பிற ரயில்களில் பயணம் செய்வதைக் காட்டிலும் இதில் பயணம் செய்யும்போது பிரீமியம் அனுபவம் உங்களுக்கு கிடைக்கும். விசாலமான லக்கேஜ் சேமிப்பு இடங்கள், மொபைலுக்கு சார்ஜர் போட பிளக் பாயிண்ட், நவீன கழிப்பறை வசதிகள், சமையலறை வசதிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்தனி இருக்கைகள், அனைத்து பெட்டிகளிலும் சிசிடிவி கண்காணிப்பு வசதி, அவசர காலத்தில் ரயில்வே ஊழியர்களுடன் நீங்கள் எளிதில் பேசும் வகையில் எமர்ஜென்சி டாக் பேக் வசதி, ரயில் தீப்பற்றி எரிந்தால் அதை கண்டறியும் வசதி என பல வசதிகள் இதில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேகமான இரவு நேர பயணம்: ஹவுரா காமாக்கியா இடையே உள்ள 966 கிலோ மீட்டர் தூரத்தை சராய்காட் எக்ஸ்பிரஸ் 17 மணி நேரத்தில் கடக்கும். ஆனால் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவை மணி நேரத்தில் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜ்தானி போன்ற ரயில்களுக்கு புதிதாக வரும் வந்தே பாரத் டிரெயின் டஃப் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட நாட்களாகவே அதிக தூர பயணம் செய்வதற்கு இது போன்ற ரயில்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் நவீன தொழில்நுட்பத்துடன் வந்தே பாரத் சேவை தொடங்கப்பட்டால் இன்னும் பயணிகளுக்கு ஏதுவாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+