100க்கு 257 மதிப்பெண்கள்! எப்படி போட்டாலும் கணக்கு வரலையே! பீகார் பல்கலைகழகத்தில் அதிர்ச்சி..

முசாபர்பூர், பீகார்: பீகார் மாநிலத்தில் ஒரு பல்கலைக்கழகத்தில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 100க்கு 257 மதிப்பெண்கள் வழங்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 30 மதிப்பெண் கொண்ட செய்முறை தேர்வுக்கு 250 மதிப்பெண்கள் வழங்கியிருக்கிறார்களாம்.

பீகார் மாநிலம் முசாபர்பூர் பகுதியில் அமைந்திருக்கிறது பீம்ராவ் அம்பேத்கர் பீகார் பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பை படிக்கும் மாணவர்களுக்கான மூன்றாவது செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டன. தற்போது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 100 மதிப்பெண்கள் கொண்ட இந்த தேர்வில் மாணவர்கள் பங்கேற்று எழுதினார்கள். இதில் பலருக்கும் 100க்கு 257 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்திருக்கிறது.

100க்கு 257 மதிப்பெண்கள்! எப்படி போட்டாலும் கணக்கு வரலையே! பீகார் பல்கலைகழகத்தில் அதிர்ச்சி..

அதேபோல 30 மதிப்பெண்கள் கொண்ட செய்முறை தேர்வுக்கு கல்லூரி பல்கலைக்கழக நிர்வாகம் 225 மதிப்பெண்களை வழங்கி இருக்கிறதாம் . இதன் காரணமாக மாணவர்கள் குழப்பமும் அதிர்ச்சியும் அடைந்திருக்கின்றனர். இது தவிர நன்றாக பரீட்சை எழுதிய பல மாணவர்களுக்கு தேர்வில் அவர்கள் தோல்வி அடைந்ததாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்திருப்பதும் மாணவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியலை நிறுத்தி வைத்திருப்பதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இந்த பல்கலைக்கழகத்தில் இது போன்ற குளறுபடி நடப்பது இது முதல் முறை கிடையாது, ஏற்கனவே பலமுறை பல்கலைக்கழக நிர்வாகம் கவனக்குறைவாக செயல்பட்டு இருக்கிறது செயல்பட்டு இருப்பதாக மாணவர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்படுகிறது. விடைத்தாள்களை சரி செய்வது, மதிப்பெண்களை வழங்குவது, தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் பல்கலைக்கழக நிர்வாகம் எப்பொழுதுமே மெத்தனமாகவே இருப்பதாக மாணவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இவ்வாறு பல்கலைக்கழக நிர்வாகம் அடுத்தடுத்து தவறுகளை மேற்கொள்வது தங்களுடைய எதிர்காலத்தையே பாதிக்கிறது என கூறும் மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகம் இது ஒரு சிறு தவறு எனக் கூறி தப்பி விடுகிறது ஆனால் இந்த மதிப்பெண்கள் எங்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகிறது என மாணவர்கள் கவலைப்படுகின்றனர். இதனிடையே பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டாளரான பேராசிரியர் ராம்குமார் அளித்துள்ள பேட்டியில், இந்த விவகாரம் தொடர்பாக தற்போது விசாரணையில் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்திருக்கிறார்.

மதிப்பெண்களை எக்ஸெல் சீட்டில் உள்ளிடும் போது சில தவறுகள் நிகழ்ந்து விடுகின்றன என கூறியிருக்கும் அவர் இந்த மாணவர்களுக்கு அவர்கள் எடுத்த சரியான மதிப்பெண்கள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன என அறிவித்துள்ளார். இந்த தவறுக்கு பல்கலைக்கழகத்தில் வேலை செய்யக்கூடிய கம்ப்யூட்டர் ஆபரேட்டரை காரணம் என்றும் தற்போது அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இனி மாணவர்களின் மதிப்பெண்களை வெளியிடுவதற்கு முன்பாக இரண்டு முறை சரி பார்க்க வேண்டும் என தான் உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார் .மீண்டும் ஒருமுறை கவனக்குறைவாக செயல்பட்டால் அனைத்து ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தான் கடுமையாக எச்சரித்து இருக்கிறேன் என அவர் தெரிவித்திருக்கிறார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+