சர்வதேச மொபைல் சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ்-க்கும், கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு-க்கும் காலம் காலமாகப் போட்டி இருக்கிறது. குறிப்பாகத் தரம், சேவை ஆகியவற்றைத் தாண்டி அதிக வாடிக்கையாளர்களை வைத்துள்ளது யார் என்ற போட்டி கடந்த சில ஆண்டுகளில் கடுமையாகியுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், 2020ஆம் நிதியாண்டின் முதல் இரு காலாண்டுகளில் மட்டும் சுமார் 26 சதவீத ஆப்பிள் ஐஓஎஸ் வாடிக்கையாளர்கள் ஐபோன் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு ஆண்ட்ராய்டு-க்கு மாறியுள்ளனர்.

இந்தச் செய்தி தற்போது டெலிகாம் மற்றும் ஸ்மார்ட்போன் சந்தையில் மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுவது மட்டும் அல்லாமல் முக்கிய விவாத பொருளாகவும் மாறியுள்ளது.
ஆண்ட்ராய்டு சென்ட்ரல் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் 2019ஆம் ஆண்டின் 3வது காலாண்டிலிருந்து 19 சதவீதம், 26 சதவீதம், 26 சதவீதம், 12 சதவீதம் என ஒவ்வொரு காலாண்டுக்கும் ஐபோன் வாடிக்கையாளர்கள் இத்தளத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இந்த மாற்றத்திற்கு மிக முக்கியமான காரணம் ஐபோன் விலை ஒவ்வொரு வருடமும் கடுமையாக அதிகரித்து வருவது தான். சேவை தரத்தில் பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லாத நிலையில் வெறும் கேமரா, நிறங்கள், ஸ்க்ரீன் வடிவம் ஆகியவற்றில் மட்டும் சில மாற்றங்கள் செய்து விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது ஆப்பிள்.
இதேபோல் கொரோனா தொற்று மற்றும் அதன் மூலம் மக்கள் மத்தியில் பொருளாதார ரீதியாக ஏற்பட்டு உள்ள மாற்றங்கள் ஆகியவை ஐபோனில் இருந்து விலகி ஆண்ட்ராய்டு-க்குள் நுழையவும் முக்கியக் காரணமாக உள்ளது. இதேபோல் ஐபோன் 12 வெளியாகக் காலதாமதம் ஆனதும் முக்கியக் காரணமாக உள்ளது.
மக்களாகிய நீங்கள் சொல்லுங்க எது பெஸ்ட்..? ஆண்ட்ராய்டு Vs ஆப்பிள் ஐஓஎஸ்
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது



Click it and Unblock the Notifications