போர்ப்ஸ் 2023 ஆம் ஆண்டிற்கான உலகின் மொத்த பில்லியனர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில்மட்டும் உலக அளவில் சுமார் 2640 பில்லியனர்கள் இருப்பதாகவும், அவர்களின் நிகர சொத்து மதிப்பு குறித்தும் முழு விவரத்தை வெளியிட்டுள்ளது.
போர்ப்ஸ் அறிக்கையின்படி, 2022 இல் பட்டியலில் சுமார் 2,668 பேர் பில்லியனர்களாக இருந்துள்ளனர். ஆனால் அவர்களில் சிலரின் மொத்த சொத்து மதிப்பு குறைந்துள்ளதால் சில வெளியேறியனர்.
இது மட்டும் அல்லாமல் 2640 பில்லியனர்களின் மொத்த சொத்து மதிப்பு இந்த ஆண்டு 500 பில்லியன் டாலர் குறைந்து 12.2 டிரில்லியன் டாலராக குறைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இந்தியாவின் 2022 நாமினல் ஜிடிபி அளவு 3.46 டிரில்லியன் டாலர்.
கோடீஸ்வர அந்தஸ்த்தை இழந்த 254 பேர்!
ஃபோர்ப்ஸ் அறிக்கையின்படி, 2022 இல் இருந்ததை விட கிட்டத்தட்ட பாதி பில்லியனர்கள் அவர்களின் சொத்து மதிப்பில் சரிவை சந்தித்து உள்ளனர் எனத் தெரிவித்துள்ளது. அதிலும் 254 பேர் பில்லியனர்கள் அந்தஸ்தை இழந்துள்ளனர்.
பொருளாதார மந்தநிலைதான் காரணம்!
தனியார் மற்றும் பொதுச் சந்தையில் இது ஒரு கஷ்டமான காலகட்டமாக இருப்பதால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு உலகின் மொத்த பில்லியனர்களின் எண்ணிக்கையில் சரிவைக் கண்டுள்ளது எனவும் அறிக்கை கூறுகின்றது.
ரஷ்யா-உக்ரைன் போர் ஒரு வருடத்திற்கு மேல் நடந்து வருவது, பணவீக்கம் அதிகரிப்பது, மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை நிறுத்தாமல் உயர்த்துவது மற்றும் கிரிப்டோ சந்தையில் ஏற்பட்ட அதிரடி மாற்றங்கள், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தையில் வங்கிகளின் தடுமாற்றம் ஆகியவை முக்கிய பாதிப்புகளாக உள்ளது.
எலான் மஸ்க்!
இந்நிலையில் ஃபோர்ப்ஸ் அறிக்கையின்படி, உலகின் இரண்டாவது பெரும் பணக்காரராக முதல் இடத்தில் இருந்த டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ், ட்விட்டரின் தலைவரான எலான் மஸ்க், இந்த ஆண்டு இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
எலான் மஸ்க் 180 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்திலிருந்து இப்போது 2 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டரை 44 பில்லியன் டாலர் மதிப்பில் கையகப்படுத்துவதாக அறிவித்ததைத் தொடர்ந்து அவரது எலக்ட்ரிக் கார் தயாரிப்பாளரான டெஸ்லாவின் பங்குகள் கிட்டத்தட்ட 50 சதவீதம் சரிந்ததுதான் அவரின் சரிவிற்கு காரணமாக கூறப்படுகிறது.
முதல் இடத்தை பிடித்த புதிய நபர்!
பிரான்ஸின் ஆடம்பரப் பொருட்களான லூயிஸ் உய்ட்டன் (Louis Vuitton), கிறிஸ்டியன் டியோர் (Christian Dior) மற்றும் டிஃப்பனி (Tiffany) போன்ற பிராண்டுகளை வைத்திருக்கும் அதிபரான பெர்னார்ட் அர்னால்ட் முதல் முறையாக 211 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் ஃபோர்ப்ஸ் பட்டியலில் உலகின் பெரும் பணக்காரர் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
முகேஷ் அம்பானி!
அதேசமயம் இந்தியாவின் முகேஷ் அம்பானி உலக பணக்காரர்கள் பட்டியலில் 83.4 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் 9 ஆவது இடத்தில் உள்ளார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications