சாலையில் நடந்து சொன்றுக்கொண்டு இருக்கும் போதும் தட தடவென பைக் சத்தம் கேட்டால் திரும்பி பார்க்காமலேயே அது ராயல் என்ஃபீல்டு பைக் என்று சொல்ல முடியும், அந்த அளவுக்கு மக்கள் மனதில் பதிந்த ஒரு பைக். ராயல் என்ஃபீல்டு புல்லட் வெறும் பைக் மட்டும் அல்லாமல் இந்திய உற்பத்தி திறனின் ஒரு அடையாளம், குறிப்பாக சென்னையின் அடையாளமாகவே ராயல் என்ஃபீல்டு உள்ளது.
இந்தியா முழுவதும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டு இருக்கும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம், இந்திய தொழிலதிபரான விக்ரம் லால்-க்கு சொந்தமான எய்ச்சர் மோட்டார்ஸ் கைப்பற்றிய சில வருடத்தில் திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டது. இந்த நிறுவனத்தை திவாலாகாமல் காப்பாற்றியது 26வயது இளைஞன் என்றால் உங்களால் நம்ப முடியுமா..?

ராயல் என்ஃபீல்டு இன்று இந்தியாவின் முன்னணி ப்ரீமியம் வாகனங்களை விற்பனை செய்யும் முன்னணி நிறுவனமாக இருக்க முக்கிய காரணம் சித்தார்த் லால். எய்ச்சர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவரான விக்ரம் லால்-ன் மகன் தான் சித்தார்த் லால். சித்தார்த் இந்தியாவின் பிரபலமான தி டூன் பள்ளியில் பிடித்து பின்பு Cranfield பல்கலைக்கழகம் மற்றும் லீட்ஸ் பல்கலைகழகத்தில் மெக்கானிக்கல் மற்றும் ஆட்டோமோட்டிவ் இன்ஜினியரிங் படித்தார்.
சித்தார்த் படித்து முடித்த கையோடு ஜெர்மனி நாட்டின் கனரக வாகன நிறுவனமான MAN சில வருடம் மட்டுமே பணியாற்றிவிட்டு தனது 26வயதில் எய்ச்சர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாகத்தில் 1999 ஆம் ஆண்டு சேர்ந்தார். 2000 ஆம் ஆண்டு கடுமையான நஷ்டத்திலும், உற்பத்தி செய்தால் வீண் என நிலையில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் சிஇஓ ஆக சேர்ந்தார். 1994 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து சரிந்து வந்த ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தை தலைகீழாக மாற்றினார் சித்தார்த் லால்.
2000 முதல் 2004 ஆம் ஆண்டுகள் மத்தியில் பல்வேறு செலவின குறைப்பு, தயாரிப்பில் சில முக்கிய மேம்பாடு புதிய மாடல்கள் அறிமுகம் என துருப்பிடித்துப்போன ராயல் என்ஃபீல்டு நிறுவனம் பளபளவென மாறியது. இவருடைய தலைமையில் தான் ராயன் என்பீல்டு தண்டர்பேர்டு மற்றும் ELECTRA X ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டது.
இதை விட முக்கியமாக ராயல் என்ஃபீல்டு DNA-வில் சற்றும் ஒத்துப்போகாத கான்டினென்டல் ஜிடி 650, இன்டர்செப்டார், ஹிமாலயன் போன்ற முக்கியமான வாகனங்களை அறிமுகம் செய்து பெரிய அளவில் வெற்றியை கண்டது ராயன் என்பீல்டு. பொதுவாக இந்தியாவில் மலிவு விலை அல்லது பட்ஜெட் விலை இருசக்கர வாகனங்களை விற்பது மிகவும் எளிது ஆனால் ப்ரீமியம் வாகனங்களை விற்பது என்பது மிகப்பெரிய சவாலான காரியம். இந்த விஷயத்தில் தான் சித்தார்த் சாதித்துள்ளார்.
2000 ஆம் ஆண்டில் சித்தார்த் லால் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் சிஇஓ-வாக உயர்ந்த 10 வருடத்தில் அதாவது 2014 ஆம் நிதியாண்டில் இந்நிறுவனம் 8738 கோடி ரூபாய் வருவாய் உடனும், 702 கோடி ரூபாய் லாபத்தையும் பதிவு செய்தது. எய்ச்சர் சாம்ராஜ்ஜியத்தில் சுமார் 80 சதவீத லாபம் ராயல் என்ஃபீல்டு வாயிலாக வந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது சித்தார்த் லால் எய்ச்சர் மோட்டார்ஸ் சிஇஓ மற்றும் நிர்வாக தலைவராக உள்ளார், Eicher Goodearth Limited-ன் டைரெக்டர் ஆகவும், VE Commercial Vehicles-ன் சேர்மன் ஆகவும், Eicher Goodearth Holdings-ன் டைரெக்டர் ஆகவும் உள்ளார். சித்தார்ட் லால் தந்தை விக்ரம் லால் தலைமையில் எய்ச்சர்ஸ் குழுமம் management consultancy services, customised engineering, maps and travel guides என பலதுறையில் இறங்கி தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications