இன்றைய இளைஞர்கள் மாத சம்பளத்திற்கு வேலைக்கு செல்வதற்கு பதிலாக சொந்த தொழில் செய்து முன்னேறி வருகின்றனர் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் 29 வயது இளைஞர் ஒருவர் டியூஷன் சொல்லிக் கொடுத்தே கோடீஸ்வரர் ஆகியுள்ளார் என்ற தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
அந்த இளைஞர் யார்? எப்படி கோடீஸ்வரர் ஆனார்? என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
பாதியில் விட்ட படிப்பு
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த சார்லி சாங் என்பவர் கடந்த 2014ஆம் ஆண்டு கல்லூரி படிப்பை பாதியில் விட்டு வெளியே வந்தார். அவர் மருத்துவராக ஆக விரும்பிய நிலையில் அவருக்கு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லை. இதனை அடுத்து அவர் தனது படிப்பை பாதியில் நிறுத்தினார்.
டியூஷன்
படிப்பை நிறுத்தியவுடன் அவர் பணம் சம்பாதிக்க கஷ்டப்பட்டு கொண்டிருந்த நிலையில் பல்வேறு வேலைகளை செய்தார். ஆனால் அதில் அவருக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை. அதன் பின்னர் அவர் குழந்தைகளுக்கு டியூஷன் சொல்லி கொடுத்து வருமானம் பெற்றார்.
யூடியூப் ஐடியா
இந்த நிலையில் அவருக்கு யூடியூப் தளம் மூலம் டியூசன் சொல்லிக் கொடுக்கும் ஐடியா வந்தது. இதனையடுத்து அவர் சொந்தமாக தனக்கென ஒரு யூடியூப் சேனலை ஆரம்பித்து அதில் மாணவர்களுக்கு தேவையான பாடங்களை புரியும்படி வித்தியாசமாக சொல்லிக் கொடுத்தார். இதனால் அவருடைய சேனலுக்கு சப்ஸ்கிரைபர்கள் அதிகரித்த நிலையில் ஆட்சென்ஸ் கிடைத்தது. இதனால் அவருக்கு வருமானமும் கிடைத்தது.
ரூ.12 கோடி வருமானம்
படிப்படியாக அவருடைய சேனலுக்கு வருமானம் அதிகரிக்க தொடங்கிய நிலையில் தற்போது அவருக்கு யூடியூப் மூலம் 12 கோடி ரூபாய் வருடத்திற்கு கிடைத்துள்ளதாக தெரிகிறது. அவரது சேனலுக்கு சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சொகுசு கார்கள்
சார்லி சாங் ஒரு கார் பிரியர் என்பதால் அவர் பலவிதமான சொகுசு கார்களை வாங்கி குவித்துள்ளார். அவரிடம் ரூ.1.8 கோடி மதிப்புள்ள ஃபெராரி 458 கார் உள்ளது. அதுமட்டுமின்றி அவர் BMW 3 சீரிஸ் காரை சமீபத்தில் வாங்கினார். மேலும் அவர் தனது பணத்தை ஒருசில வணிகங்களிலும் முதலீடு செய்து இருக்கிறார். குறிப்பாக ரியல் எஸ்டேட் மற்றும் இ-காமர்ஸ் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications