ரூ.3.5 கோடி சம்பளம்.. வேலை வேண்டாம் என தூக்கி எறிந்த ஊழியர்.. காரணத்தை கேட்டா கடுப்பாகிடுவீங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரபலமான ஆன்லைன் ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் சமீப காலமாக பல சர்ச்சைகள் வெடித்து வருகின்றன.

பிரபலமான ஓடிடி தளத்தில் மக்களுக்கு பிடித்தமான பல வெப் சீரிஸ்கள், திரைப்படங்கள், மக்களை கவரும் கவர்ச்சிகரமான நிகழ்ச்சிகள் என பலவும் வெளியாகி வருகின்றன.

சமீபத்தில் அதன் மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக 150 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும், குறிப்பாக வருவாய் குறைந்து வரும் நிலையில் இந்த பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும் நிறுவனம் தெரிவித்தது.

திடீரென 4% உயர்ந்த அதானி நிறுவனத்தின் பங்கு: ரூ.1913 கோடி முதலீடு காரணமா?திடீரென 4% உயர்ந்த அதானி நிறுவனத்தின் பங்கு: ரூ.1913 கோடி முதலீடு காரணமா?

எதிர்ப்பு

எதிர்ப்பு

இதற்கிடையில் நெட்பிளிக்ஸ்-ல் ஓளிப்பரப்படும் டெவ் சேப்பலின் என்ற நிகழ்ச்சிக்கு பரவலான எதிர்ப்புகள் இருந்து வந்தது. குறிப்பாக ஊழியர்கள் மத்தியிலேயே இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்புகள் இருந்து வந்தது. இந்த நிகழ்ச்சியானது மூன்றாம் பாலினத்தவர்களை கேலி செய்யும் விதமாக இருப்பதால், தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியிருந்தாலும் அது தொடர்ந்து ஓளிப்பரப்படும் என்று நெட்பிளிக்ஸ் அறிவித்தது. இந்த நிலையில் தான் ஊழியர்களுக்கும் கடும் கட்டுபாடுகளை விதித்தது. அதோடு எந்த நிகழ்ச்சி யாருக்கு வேண்டும் என்பதை தேர்ந்தெடுக்கும் வசதி வாடிக்கையாளர்களுக்கு உண்டு.

நீங்களே வெளியேறிக் கொள்ளலாம்

நீங்களே வெளியேறிக் கொள்ளலாம்

எங்களுடன் இணைந்து பணியாற்றும் கலைஞர்களின் கலை ஆற்றலை ஆதரிக்கும் நிலைபாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். ஆக ஊழியர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் பணியை செய்ய வேண்டும். அதில் உங்களுக்கு விருப்பமில்லை எனில் நீங்கள் தாராளமாக வெளியேறிக் கொள்ளலாம் என்று வெளிப்படையாக கூறியது.

ரூ.3.5 கோடி சம்பளம்
 

ரூ.3.5 கோடி சம்பளம்

இப்படி பற்பல சர்ச்சைகளுக்கு மத்தியில் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தில் ஆண்டுக்கு 3.5 கோடி சம்பளத்தில் பணிபுரிந்து வந்த ஊழியர் ஒருவர், திடீரென தனது பணியினை விட்டு விலகியுள்ளார். இந்த பணியில் இருந்து விலக்கியதற்கு அவர் கூறிய காரணம் தான் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

என்ன காரணம்?

என்ன காரணம்?

தான் செய்யும் வேலை மிக போர் (bore) அடிப்பதாக அந்த ஊழியர் காரணம் தெரிவித்துள்ளார்.

சீனாவினை சேர்ந்த மைக்கேல் லின் என்ற பொறியாளார் தான் இப்படி ஒரு அசர வைக்கும் காரணத்தை கூறி, தனது வேலையினை தூக்கி எறிந்துள்ளார்.

எப்போது இணைப்பு?

எப்போது இணைப்பு?

முன்னதாக அமேசானில் பணிபுரிந்த மைகேல், கடந்த 2017ம் ஆண்டு தான் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தில் பணியில் இணைந்துள்ளார். இவருக்கு ஆண்டு ஊதியம் 4.50 லட்சம் டாலராகும், இதன் இந்திய மதிப்பு 3.5 கோடி ரூபாயாகும். இந்த நிலையில் மே 2021ல் தனது பணியில் இருந்து வெளியேறியுள்ளார். அவர் வெளியேறிய போது அவருக்கு என்ன பைத்தியம் பிடித்து விட்டதா? என பலரும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ரொம்ப போர் அடிக்குது?

ரொம்ப போர் அடிக்குது?

நான் ஆண்டுக்கு 4.5 லட்சம் டாலர்கள் சம்பளத்தில் நான் நெட்பிளிக்ஸ் சம்பளத்தில் பணிபுரிந்து வந்தேன். 5 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த நிலையில்,அதிலிருந்து விலகி விட்டேன், இலவசமாக உணவு, அதிகளவிலான சம்பளம், சம்பளத்துடன் கூடிய விடுமுறை என பலவும் கிடைத்தது. எனினும் அந்த வேலை எனக்கு போர் அடித்ததால் வேலையை விட்டு நின்றுவிட்டேன் என அசால்ட்டாக பதிலளித்துள்ளார்.

எதிர்ப்புகள்

எதிர்ப்புகள்

இதற்கு ஆரம்பத்தில் லின்-ன் பெற்றோரே எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதன் பிறகு மெண்டாரும் எதிர்ப்பு தெரிவித்தார். மீண்டும் நல்லதொரு பணி கிடைக்கும் முன்பே பணியை விட்டு நீங்க வேண்டாம் என கூறினார். ஆனால் நான் இது குறித்து நன்கு ஆலோசனை செய்து, அதன் பிறகே பணியில் இருந்து விலகினேன்.

ஏன் என்ன காரணம்?

ஏன் என்ன காரணம்?

ஆரம்ப காலத்தில் இந்த பணியில் நான் நிறைய கற்றுக் கொண்டேன். எம்பிஏ படிக்கும்போது கேஸ்டடியில் வேலை பார்த்தது போன்று இருந்தது. அதற்கு சம்பளமும் தரப்பட்டது. அனைத்தையும் கற்றுக் கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டது. தினசரி நான் நிறைய கற்றுக் கொண்டேன். ஆனால் கொரோனாவுக்குப்பின் சமூகமயமாக்கல், சக ஊழியர்கள், ஊதியம் , வேலை என அனைத்தும் முடிவுக்கு வந்தது. எனக்காக நான் வேலை செய்ய முடிவில்லை. எனக்கு வேலையில் நீடிக்க பிடிக்காமல் போனது போர் அடிக்கத் தொடங்கியது. அதனால் தான் வேலையை ராஜினாமா செய்தேன் எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

3.5 crore salaried netflix employee quits job? Do you know why?

Michael Lin joined Netflix in 2017. His annual salary is 3.5 crore rupees. He left in this position in May 2021. Lin has quit her job saying this job is too bore.
Story first published: Monday, June 6, 2022, 15:35 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X