ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பின்பு அதானி பங்குகளின் விலை பெரிய அளவில் சரிந்த நிலையில் ஆர்பிஐ கடந்த வாரம் இந்தியாவில் இருக்கும் அனைத்து வங்கிகளையும் அதானி குழுமத்திற்கு எவ்வளவு கடன் கொடுக்கப்பட்டு உள்ளது என்ற விபரங்களைக் கேட்டது.
இதற்கு அனைத்து வங்கிகளும் பதில் அளித்த நிலையில் எஸ்பிஐ வங்கியும் மொத்தமாக எவ்வளவு கடன் கொடுக்கப்பட்டு உள்ளது என ஆர்பிஐ-க்கு அறிவித்தது.
இந்த நிலையில் அதானி எண்டர்பிரைசஸ் கடனுக்காக அதானி குழுமத்தின் 3 நிறுவனப் பங்குகள் செக்யூரிட்டியாக அளிக்கப்பட்டு உள்ளது என எஸ்பிஐ வங்கியின் கிளை அமைப்பான எஸ்பிஐகேப் டிரஸ்டி கோ நிறுவனம் வெள்ளிக்கிழமை பங்குச்சந்தையில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
கௌதம் அதானி
58 பில்லியன் டாலர் உடன் இந்தியாவின் 2வது பெரிய பணக்காரராக இருக்கும் கௌதம் அதானி-யின் அதானி எண்டர்பிரைசர்ஸ் கடனுக்காக அதானி குழுமத்தின் 3 நிறுவன பங்குகள் செக்யூரிட்டியாக அளிக்கப்பட்டு உள்ளதாக எஸ்பிஐ வங்கியின் கிளை அமைப்பான எஸ்பிஐகேப் டிரஸ்டி கோ நிறுவனம் வெள்ளிக்கிழமை மும்பை பங்குச்சந்தையில் அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.
எஸ்பிஐகேப் டிரஸ்டி கோ நிறுவனம்
எஸ்பிஐகேப் டிரஸ்டி கோ நிறுவனம் வெள்ளிக்கிழமை சமர்ப்பித்த அறிக்கையின் படி அதானி போர்ட்ஸ் & SEZ, அதானி டிரான்ஸ்மிஷன், அதானி கிரீன் எனர்ஜி ஆகிய 3 நிறுவன பங்குகளை அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் கடனுக்காக 'security trustee' ஆகக் கொடுத்துள்ளது.
இதன் மூலம் திங்கட்கிழமை அதானி பங்குகள் உயர வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
அதானி போர்ட்ஸ் & SEZ
அதானி போர்ட்ஸ் & SEZ கூடுதலாக 75,00,000 பங்குகளைச் செக்யூரிட்டியாக அளித்துள்ளது. இதன் மூலம் SBICAP டிரஸ்டி-யிடம் முன்பிருந்த 0.65 சதவீத பங்குளின் அளவு 1 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அதானி டிரான்ஸ்மிஷன்
அதானி டிரான்ஸ்மிஷன் கூடுதலாக 13,00,000 பங்குகளைச் செக்யூரிட்டியாக அளித்துள்ளது.இதன் மூலம் SBICAP டிரஸ்டி-யிடம் முன்பிருந்த 0.44 சதவீத அளவீடு 0.55 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அதானி கிரீன்
இதேபோல் அதானி கிரீன் நிறுவனம் கூடுதலாக 60,00,000 பங்குகளைச் செக்யூரிட்டியாக அளித்துள்ளது. இதன் மூலம் SBICAP டிரஸ்டி-யிடம் முன்பிருந்த 0.38 சதவீத அளவீடு 1.06 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இதன் மூலம் எஸ்பிஐ கொடுத்த கடனுக்குப் போதுமான செக்யூரிட்டி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக இருக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, அதானி நிறுவனத்தில் உள்ள நிறுவனங்களுக்கு 2.6 பில்லியன் டாலர் அளவிலான கடனை வழங்கியுள்ளதாகக் கடந்த வாரம் ஆர்பிஐ உத்தரவும் தகவலை வெளியிட்டது. இதோடு எஸ்பிஐ வங்கியின் வெளிநாட்டு வங்கி கிளைகள் வாயிலாக அதானி குழும நிறுவனங்களுக்குச் சுமார் 200 மில்லியன் டாலர்கள் அளவிலான கடனை கொடுத்துள்ளது.
1114 மில்லியன் டாலர் கடன்
இதேவேளையில் பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி அதானி குழுமம், பல்வேறு வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் தனது நிறுவனங்களின் பங்குகளை அடைமானம் வைத்து வாங்கியிருந்த 1114 மில்லியன் டாலர் கடனை முன்கூட்டியே செலுத்தியது. இதன் மூலம் அதானி பங்குகள் உயர்ந்தது மறக்க முடியாது.
3 நிறுவனங்கள்
இந்த 1114 மில்லியன் டாலர் அளவிலான கடன் தொகையை முன்கூட்டியே செலுத்தியதன் மூலம் அதானி போர்ட்ஸ் & SEZ-ன் 168.27 மில்லியன் பங்குகள், அதானி கிரீன் எனர்ஜி-ன் 27.56 மில்லியன் பங்குகள், அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தின் 11.77 மில்லியன் பங்குகள் வங்கி மற்றும் நிதி நிறுவன கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டு அதானி குழுமத்தின் நிர்வாகத்திடமே வந்தது.
நடவடிக்கை
அதானி குழுமத்திற்கு எதிராகச் செபி மட்டும் அல்லாமல் ஜனவரி 24 முதல் சிட்டிபேங்க், கிரெட்டி சுசி, MSCI எனப் பல முக்கியமான அமைப்புகள் நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் முக்கியமாக உலகளாவிய மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் இன்வெஸ்டர்ஸ் சர்வீஸ், அதானி க்ரீன் எனர்ஜி உட்பட அதானி குழுமத்தின் நான்கு நிறுவனங்களின் கண்ணோட்டத்தை "Stable" இருந்து "Negative" ஆகக் குறைத்தது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications