ஜி20 கூட்டத்திற்கு வந்த வெளிநாட்டு தலைவர்களின் மனைவிக்கு ஸ்பெஷல் கிப்ட்.. வாவ்..!!

ஜி20 நாடுகளின் அதிபர்கள் மற்றும் இக்கூட்டத்திற்கு வந்த வெளிநாட்டு தலைவர்களின் வாழ்க்கைத் துணைவர்களுக்கு இந்தியப் பாரம்பரியமிக்க பரிசுகள் அளிக்க மத்திய அரசு முக்கியமான சில பொருட்களை தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தெலுங்கானாவின் பெருமைக்குரிய செரியல் சுருள் ஓவியம், கையால் நெய்யப்பட்ட டஸ்ஸார் பட்டு ஸ்டோல், சட்டீஸ்கரின் புகழ்வாய்ந்த கைவினைஞர்களால் கையால் செய்யப்பட்ட பெல் மெட்டல் பெண் சிலை ஆகியவை ஜி 20 நாட்டுத் தலைவர்களின் வாழ்க்கைத் துணைவர்களுக்கு வழங்கப்படவுள்ள பரிசுகளில் ஒன்றாகும்.

ஜி20 கூட்டத்திற்கு வந்த வெளிநாட்டு தலைவர்களின் மனைவிக்கு ஸ்பெஷல் கிப்ட்.. வாவ்..!!

ஜி 20 உச்சி மாநாட்டின் போது சனிக்கிழமையன்று பூசா வளாகத்தில் உள்ள இந்திய விவசாய ஆராய்ச்சி (ஐஏஆர்ஐ) அமைப்பிற்கு அவர்கள் வருகை தரும் போது இந்தப் பரிசுகள் அளிக்கப்பட உள்ளன. மத்திய
அதிகாரிகள் கூறியது படி , நாட்டின் வளமான பாரம்பரிய கலை கலாசாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று பரிசுப் பொருட்கள், ஜி 20 தலைவர்களின் வாழ்க்கைத் துணைவர்களுக்கு அழகிய வேலைபாட்டுடன் கூடிய சிறிய அலங்காரப் பையில் வைத்து வழங்கப்படும்.

பூசா வளாகத்தில் நேஷனல் கேலரி ஆஃப் மாடர்ன் ஆர்ட் (என்ஜிஎம்ஏ) பார்வையிடல், ராஜ்காட்டில் மகாத்மா காந்திக்கு மாலை அணிவித்தல், க்யூரேட்டட் ஷாப்பிங் போன்ற நிகழ்ச்சிகள் சர்வதே தலைவர்களின் வாழ்க்கைத் துணைவர்களுக்காகத் திட்டமிடப்பட்டவையாகும்.

செரியல் சுருள் ஓவியம் (Cheriyal scroll painting) - இந்த கலை வடிவம் பல நூற்றாண்டுகள் பழமையானது. செரியல் சுருள்களில் புராணங்கள் மற்றும் புனைவுகளை சித்தரிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மற்றும் கலைநயமிக்க மையக்கருத்துகளில் வேரூன்றிய இந்த ஓவியங்கள் இப்பகுதியின் பழமையான கலை வடிவங்களில் ஒன்றாகும், அதன் வளமான கதைசொல்லல் மரபுகளை உள்ளடக்கியது.

ஒரு குறிப்பிட்ட புவியியல் தோற்றம் கொண்ட தயாரிப்புகளுக்கு வழங்கப்படும் புவியியல்சார் குறியீடானது (ஜிஐ) செரியல் சுருள்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

துஸ்ஸார் பட்டு ஸ்டோல் (Tussar silk)- சத்தீஸ்கரின் சால் காடுகளில் இருந்து பெறப்பட்ட துஸ்ஸார் பட்டுகளில் இருந்து கையால் நெய்யப்பட்ட பாரம்பரிய ஸ்டோல்களும் மிகவும் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. புதிதாகப் பிரித்தெடுக்கப்பட்ட சாமந்தி பூக்கள் மற்றும் மஞ்சள் ஆகியவற்றிலிருந்து பட்டு ஸ்டோல்கள் சாயமிடப்பட்டுள்ளன. நூல் கையால் ரீல் செய்யப்பட்டு, துணி கையால் நெய்யப்படுவதால் அவை எப்போதும் நிலைத்திருக்கும்.

பெல் மெட்டல் பெண் சிலை (bell metal figurine)- சத்தீஸ்கரைச் சேர்ந்த கைவினைஞர்கள், பழங்கால மெழுகு நுட்பத்தைப் பயன்படுத்தி, பெல் மெட்டலைக் கொண்டு உணவு தயாரிக்கும் ஒரு பெண்ணின் சிலையைத் தயாரித்துள்ளனர்.

ஹரப்பா நாகரிகத்தின் புகழ்பெற்ற நடனப் பெண் கலைப்பொருளை உருவாக்கப் பயன்படுத்தப்படும் செயல்முறையைப் போன்றே இந்தச் சிலையும் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சிலை முதலில் ஒரு மெழுகு சிற்பமாக களிமண்ணால் மூடப்பட்டிருக்கும். பின்னர் அது சுடப்படுகிறது. களிமண்ணை சூடாக்கியதும் மெழுகு உருகி கெட்டியான களிமண்ணுக்குள் சிற்பத்தின் அச்சு உருவாகும். அந்த அச்சில் உலோகத்தை ஊற்றி ஆற வைத்து அதை பின்னர் நளினமாக செதுக்குவார்கள். இந்தக் கலைப்படைப்பு மிகச் சிறந்த கலை அம்சமாகும்.

பூஸா வளாகத்துக்கு வருகை தரும் போது, தம்பதிகள் வெவ்வேறு மாநிலங்களில் இருந்து வரும் தினை விவசாயிகளையும் சந்திப்பார்கள். மேலும் பிரபல சமையல் கலைஞர்களான குணால் கபூர், அஜய் சோப்ரா, அனாஹிதா தோண்டி ஆகியோரால் நேரடியாக சமைக்கப்பட்ட தினை சார்ந்த சிற்றுண்டிகளை சாப்பிடுவர்.
ஐக்கிய நாடுகள் சபை 2023 ஆம் ஆண்டை சர்வதேச தினை ஆண்டாக அறிவித்தது.

இந்தியா சார்பில் செய்யப்பட்ட முன்மொழிவின் அடிப்படையில் 70 க்கும் மேற்பட்ட நாடுகளின் ஆதரவுடன். 2023-24 பட்ஜெட் உரையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சிறு தானியங்களை "ஸ்ரீ அண்ணா" என்று குறிப்பிட்டு, இந்தியாவை தினைகளுக்கான உலகளாவிய மையமாக மாற்ற அழைப்பு விடுத்தார்.
13 இந்திய மாநிலங்களில் கிட்டத்தட்ட 25 மில்லியன் குறு விவசாயிகள் தினைகளை பயிரிடுகின்றனர்.

ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 18 மில்லியன் டன் தினைகளை உற்பத்தி செய்கிறது, இவை ஜவ்வரிசி, சோளம், கேப்பை உள்ளிட்ட சிறு தானியங்கள் ஆகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+