கிரெடிட் ஸ்கோர் பற்றி கேள்விபடாதவர் இருக்க முடியாது. இந்தியாவின் எந்த வங்கியில் கடன் பெற வேண்டுமானாலும், அதற்கு கிரெடிட் ஸ்கோர் முக்கியம். உங்களிடம் நல்ல கிரெடிட் ஸ்கோர் இல்லை என்றால் வங்கிகள் உங்களுடைய கடன் விண்ணப்பிக்கங்களை நிராகரிக்கும் வாய்ப்புள்ளது. கிரெடிட் ஸ்கோரை வைத்து தான் பிரீமியம் கிரெடிட் கார்டு முதல் குறைந்த வட்டிலான தனிநபர் கடன்கள் வரை பெற முடியும். அதோடு எளிதாக வீட்டு கடன் பெற வேண்டுமானாலும் அதற்கும் கிரெடிட் ஸ்கோர் அதிகமாக இருக்க வேண்டும்.
கிரெடிட் ஸ்கோர் என்றால் என்ன?: கிரெடிட் ஸ்கோர் என்பது 3 எழுத்து எண் ஆகும். இந்த எண் 600 முதல் 900 வரை இருக்கலாம். ஆனால் கிரெடிட் ஸ்கோர் 750 முதல் 800 வரை இருந்தால் தான்.. அது நல்ல கிரெடிட் ஸ்கோராக இருக்கும். ஸ்கோர் அதிகமாக இருந்தால் வங்கிகள் உங்களுக்கு எளிதில் கடன் வழங்கும்.

இந்த 3 எழுத்து நம்பரை வைத்தே வங்கிகள் நீங்கள் ஏற்கனவே வாங்கிய கடன்கள் சரிவர திருப்பிச் செலுத்தியிருக்கிறீர்களா? எந்த தேதியில் கடனைச் செலுத்தி இருக்கிறீர்கள்? எத்தனை தவணைகளை தவறவிட்டீர்கள்? பழைய கடன் நிலுவையில் உள்ளதா? என அனைத்து விவரங்களையும் தெரிந்து கொண்டு விடும். ஒருவேளை கடனை வாங்கிவிட்டு சரிவர திருப்பிச் செலுத்தாதவராக இருந்தால் கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருக்கும். உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை பார்த்தவுடனே வங்கிகள் நீங்கள் நல்ல நிதி நடத்தை இல்லாதவராக கருதி கடன் வழங்காமல் போகும் வாய்ப்புள்ளது.
இந்தப் பதிவில் உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை அதிகரிக்க என்னென்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து பார்ப்போம்.
சரியான நேரத்தில் பணம் செலுத்துங்கள்: நீங்கள் பணம் செலுத்தும் வரலாறு, உங்கள் கிரெடிட் ஸ்கோரில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே நீங்கள் வாங்கியாக ஹோம் லோன்கள், பர்சனல் லோன்கள், கிரெடிட் கார்டு பில்கள் ஆகியவற்றை சரிவர செலுத்த முயற்சி செய்யுங்கள். முடிந்த வரையில் ஆட்டோமேட்டிக் பேமெண்ட் செலுத்தும் செட்டிங்ஸை அமைப்பது நல்லது. நீங்களே மறந்தாலும் ஆட்டோ டெபிட் வசதி இருந்தால் எந்த ஒரு காலக்கெடு தேதியும் தவறாமல் பணம் செலுத்த முடியும்.
கிரெடிட் பயன்பாட்டு விகிதத்தை 30 சதவீதத்திற்குள் வைத்திருங்கள்: எப்பொழுதும் கிரெடிட் கிரெடிட் பயன்பாட்டு விகிதத்தை 30 சதவீதத்திற்கும் குறைவாக வைத்திருக்க முயற்சி செய்ய வேண்டும். உங்களுடைய மொத்த கடன் வரம்பு ரூ.1 லட்சம் என்று வைத்துக்கொள்வோம். எனவே மொத்த கடன் வரம்பில் ரூ. 30,000-த்திற்கும் அதிகமாக பயன்படுத்தக்கூடாது. தொடர்ந்து அதிகமாக கடன் பயன்பாட்டு விகிதம் இருந்தால் அதாவது 30 சதவீதத்திற்கு மேல் இருந்தால் நீங்கள் கடனை அதிகம் சார்ந்திருப்பதாக வங்கிகள் கருத்தில் கொள்ளும். இதனால் உங்கள் கிரெடிட் ஸ்கோர் குறையலாம்.
அடிக்கடி கடன் பெறுவதைத் தவிர்க்கவும்: அடிக்கடி கடன் அல்லது கிரெடிட் கார்டு பெற விண்ணப்பிப்பதைத் தவிர்ப்பது நல்லது. ஒவ்வொரு முறையும் நீங்கள் புதிதாக கிரெடிட் கார்டு அல்லது பர்சனல் லோன் பெற விண்ணப்பிக்கும் போது தற்காலிகமாக உங்கள் கிரெடிட் ஸ்கோர் குறையலாம். கிரெடிட் ஸ்கோரை நிலையாக பராமரிக்க குறுகிய கால இடைவெளியை விட்டு, அதன் பிறகு கிரெடிட் கார்டு அல்லது தனி நபர் கடனுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இப்படி சில விஷயங்களை மட்டும் செய்தாலே உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை அதிகரிக்க முடியும்/ இதனால் எதிர்காலத்தில் கடன் பெறுவது எளிதாகும்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications