அதிர்ஷ்டம் என்பது வாழ்க்கையில் எப்போதாவது நிகழக்கூடிய ஒன்று தான். அப்படி கிடைக்கும் அதிர்ஷ்டம் ஒரே நேரத்தில், குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கிடைத்தால் அது பேரதிர்ஷ்டம் தானே.
கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக் கொண்டு கொடுக்கும் என்பார்கள். அமெரிக்காவினை சேர்ந்த ஒரு குடும்பத்தினருக்கு இத்தகைய பேரதிர்ஷ்டம் தான் கிடைத்துள்ளது எனலாம்.
மாரிலாண்ட்-ஐ சேர்ந்த 61 வயது நபர் ஒருவர், ஒரு டாலர் செலுத்தி லாட்டரியில் கலந்து கொண்டார். அவருடையை 28 வயது மகளும், 31 வயது மகனும், அதே கடையில் லாட்டரியில் பங்கேற்க பணம் கட்டினர்.
லாட்டரியில் பரிசு
ஒரே குடும்பத்தை சேர்ந்த இந்த மூவரும் லாட்டரியில் ஒரே நம்பரை தேர்வு செய்துள்ளனர். இவர்கள் 5 - 3 - 8 - 3 - 4 என்ற நம்பரை தேர்வு செய்திருந்தனர். இந்த மூன்று பேருக்கும் தலா 50 ஆயிரம் டாலர்கள் பரிசாக கிடைத்தது. இதன் இன்றைய இந்திய மதிப்பு 41 லட்சம் ரூபாயாகும்.
வீடு வாங்க திட்டம்
தங்களுக்கு கிடைத்த பரிசுத் தொகையில், ஒருவருக்கு கிடைத்த தொகையை வைத்து வீடு வாங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மற்ற இருவரின் தொகையை முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளனர் இந்த அதிர்ஷ்ட குடும்பத்தினர்.
இது தான் அதிர்ஷ்டமோ?
பொதுவாக லாட்டரி சீட்டு வாங்கும்போது எந்த நம்பரை வாங்குவது என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். பார்க்கும் நம்பர் எல்லாமே அதிர்ஷ்டவசமான நம்பராக தோன்றும். இன்னும் சிலர் தங்களது அதிர்ஷ்ட நம்பராக தங்களது வாகனத்தின் நம்பர், பிறந்த தேதி என பலவற்றையும் தேர்வு செய்வார்கள். அப்படியே தேர்வு செய்தாலும் எப்படி மூன்று பேரும் ஒரே நம்பரை தேர்வு செய்வார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எது எப்படியோ இது தான் அதிர்ஷ்டம்.
கார் வாங்க திட்டம்
இம்மாத தொடக்கத்தில் பழைய மேப்களை பயன்படுத்தி தனது லாட்டரி எண்ணை தேர்வு செய்ததாக, 77 வயதான முதியவர் 50000 டாலர்களை பரிசாக பெற்றார். இந்த பரிசு தொகையில் புதியதாக கார் வாங்க திட்டமிட்டுள்ளதாக அந்த முதியவர் கூறியிருந்தார்.
வாழ் நாள் முழுவதும் பரிசு
மெக்சிகனை சேர்ந்த மற்றொரு நபருக்கு அவரின் வாழ் நாள் முழுவதும் ஆண்டுக்கு 25,000 டாலர்கள் பரிசாக கிடைத்தது. இந்த அதிர்ஷ்டவசமான நம்பரை கண்டறிய அவர் ரேண்டம் எண் ஜெனரேட்டரை ஆன்லைனில் பயன்படுத்தியதாக கூறியிருந்தார்.
மொத்தத்தில் அமெரிக்காவில் பலருக்கும் அதிர்ஷ்ட காற்று வீசிக் கொண்டுள்ளது எனலாம்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications