உலகின் டாப் 10 CEO-க்களில் 3 இந்தியர்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைப் பற்றி அதிகம் விவரிக்க வேண்டியது இல்லை. அந்த ஹார்வர்ட் பல்கலைக்கழகம் நடத்தும் பத்திரிகை தான் இந்த ஹார்வர்ட் பிசினஸ் ரிவ்யூ. இவர்கள் வருடம் ஒரு முறை உலகின் டாப் முதன்மைச் செயல் அதிகாரிகளை பட்டியலை தயாரித்து வெளியிடுவார்கள். இந்த 2019-ம் ஆண்டுக்கு இப்போது வெளியிட்டு இருக்கிறது ஹார்வர்ட் பிசினஸ் ரிவ்யூ பத்திரிகை.

இந்த பட்டியலில் முதல் இடத்தை NVIDIA என்கிற அமெரிக்க டெக்னாலஜி நிறுவனத்தின் ஜென்சன் ஹுவாங் (Jensen Huang) பிடித்து இருக்கிறார். முதல் இடம் ஒரு இந்தியருக்கோ அல்லது ஒரு இந்திய நிறுவனத்துக்கோ கிடைக்கவில்லை என்பதில் ஒரு பெரிய வருத்தம் இருக்கிறது.

உலகின் டாப் 10 CEO-க்களில் 3 இந்தியர்கள்..!

 

ஆனால் நம் வருத்தத்தை, சமாதானப்படுத்தும் வகையில் ஹார்வர்ட் பிசினஸ் ரிவ்யூ பட்டியலின் டாப் 10 சி இ ஓ-க்கள் பட்டியலில் 3 இடங்களை நம் இந்தியர்கள் பிடித்து இருக்கிறார்கள்.

வரிசைப் படிப் பார்த்தால் 6-வது இடத்தை அடோப் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியாக வெற்றி நடை போடும், அடோப் நிறுவனத்தை வெற்றி நடை போட வைத்துக் கொண்டிருக்கும் சந்தனு நாராயன் பிடித்து இருக்கிறார்.

அதற்கு அடுத்த இடத்தில், உலகின் பணப் பரிவர்த்தனை நிறுவனங்கள் மிக முக்கிய இடத்தில் இருக்கும் மாஸ்டர் கார்ட் நிறுவனத்தை வழி நடத்திக் கொண்டிருக்கும் அஜய் பங்கா 7-வது இடத்தைப் பிடித்து இருக்கிறார்.

இவரைத் தொடர்ந்து, பில் கேட்ஸின் வாரிசு போலவே மைக்ரோசாஃப்டில் வலம் வந்து கொண்டிருக்கும், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தற்போதைய முதன்மைச் செயல் அதிகாரி சத்யா நாதெல்லா 9-வது இடத்தைப் பிடித்து இருக்கிறார்.

டாப் 10 இடங்களில் இந்த மூன்று பேர் போக, டாப் 100 சி இ ஓ-க்கள் பட்டியலில் டி பி எஸ் வங்கியின் முதன்மைச் செயல் அதிகாரியாக இருக்கும் பியுஷ் குப்தா 89-வது இடத்தில் இருக்கிறார்.

இந்த டாப் 100 சி இ ஓ-க்கள் பட்டியலில் ஆப்பிள் தொடங்கி நைக், லாக் ஹீட் மார்டின், ஜே பி மார்கன், டிஸ்னி என பல நிறுவன சி இ ஓ-க்களை கணக்கில் எடுத்துக் கொண்டு தங்கள் தர மதிப்பீட்டை வெளியிட்டு இருக்கிறார்கள் என்பது இங்கு கவனிக்க வேண்டி இருக்கிறது.

மார்க் பார்க்கர், நைக், சி இ ஓ - 20

ஜெமி டிமான், ஜே பி மார்கன் சேஸ், சி இ ஓ- 23

ராபட் ஐகர், டிஸ்னி, சி இ ஓ - 55

டிம் குக், ஆப்பிள், சி இ ஓ - 62 என பல உலக நிறுவனங்களும் இந்த தரப் பட்டியலில் இடம் பிடித்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: ceo
English summary

3 indian ceo are in Harvard business review top 10 list

Three Indian CEO are in the prestigious Harvard business reviews top 10 talented CEO's list.
Story first published: Tuesday, October 29, 2019, 18:18 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X