சர்வதேச விமான நிறுவனங்களின் மூன்று விமானங்கள் கடந்த 48 மணி நேரத்தில் நாட்டின் பல்வேறு விமான நிலையங்களில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டன.
இந்திய விமான நிறுவனங்கள் கடந்த 50 நாட்களில் பல முறை தொழில்நுட்பம் மற்றும் விமானக் கோளாறு காரணமாகத் தரையிறக்கப்பட்ட நிலையில்
இன்று சர்வதேச நாடுகளைச் சேர்ந்த 3 விமான நிறுவனங்களுக்குத் தொழில்நுட்ப அவசரம் காரணமாகத் தரையிறக்கப்பட்டு மோசமான நாளாக அமைந்தது.
டிஜிசிஏ
வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கோழிக்கோடு, சென்னை மற்றும் கொல்கத்தாவில் இந்தத் தரையிறக்கல்கள் மேற்கொள்ளப்பட்டதாகச் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (டிஜிசிஏ) மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அனைத்து அவசர தரையிறக்கல்களும் பல வகைத் தொழில்நுட்ப சிக்கல்களால் நிகழ்ந்தன.
ஏர் அரேபியா
ஏர் அரேபியா விமானம் ஷார்ஜாவில் இருந்து கொச்சிக்கு ஜி9-426 விமானத்தை இயக்கிக் கொண்டிருந்த போது ஹைட்ராலிக் கோளாறு ஏற்பட்டது. விமானம் ஓடுபாதையில் பத்திரமாகத் தரையிறங்கியது. விமானம் பாதுகாப்பாக இழுத்துச் செல்லப்பட்டது.
எத்தியோப்பியன் விமான நிறுவனம்
இதேபோல் மற்றொரு சம்பவத்தில், ஜூலை 16 அன்று, அடிஸ் அபாபா-வில் (Addis Ababa) இருந்து பாங்காக் சென்ற எத்தியோப்பியன் ஏர்லைன்ஸின் விமானம் அழுத்தம் காரணமாகக் கொல்கத்தா விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்
இதேபோன்ற மூன்றாவது சம்பவத்தில், ஜூலை 15 அன்று, ஹைட்ராலிக் கோளாறு காரணமாக, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் விமானம் சென்னை விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
DGCA அதிகாரிகள் விளக்கம்
"சனிக்கிழமை இரண்டு வெளிநாட்டு விமான ஆபரேட்டர்கள் நிறுவனம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. ஹைட்ராலிக் சிக்கல்கள் காரணமாகக் கொச்சினில் ஏர் அரேபியாவும், அழுத்தம் பிரச்சினை காரணமாகக் கொல்கத்தாவில் எத்தியோப்பியன் விமானமும் தரையிறக்கப்பட்டது, வெள்ளியன்று, ஹைட்ராலிக் சிக்கல்கள் காரணமாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சென்னையில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது என்று DGCA அதிகாரிகள் கூறினார்.
இண்டிகோ
இதற்கிடையில், ஷார்ஜாவில் இருந்து ஹைதராபாத் செல்லும் இண்டிகோ விமானம் பாகிஸ்தானின் கராச்சிக்கு அதிகாலையில் திருப்பி விடப்பட்டது. இது மற்றொரு இந்திய விமானம் நிறுவனம், சில நாடுகளுக்கு முன்பு தான் மதுரைக்குச் செல்ல வேண்டிய விமான நிறுவனம் தரையிறக்கப்பட்டது.
பாகிஸ்தான் காரச்சி
"ஷார்ஜாவில் இருந்து ஹைதராபாத் செல்லும் இண்டிகோ விமானம் 6E-1406, கராச்சிக்கு திருப்பி விடப்பட்டது. விமானி தொழில்நுட்பக் கோளாறைக் கண்டார். தேவையான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு, முன்னெச்சரிக்கையாக, விமானம் கராச்சிக்குத் திருப்பி விடப்பட்டது" என்று இண்டிகோ செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications