மத்திய அரசும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் பட்ஜெட் 2025 அறிக்கையை தாக்கல் செய்ய தயாராகி வரும் வேளையில் இந்திய நடுத்தர மக்கள் 3 முக்கியமான விஷயங்கள் இந்த பட்ஜெட்டில் வருமா என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர், வருமான வரி விலக்கு மற்றும் வீட்டுக் கடன் ஆகியவை முக்கிய எதிர்பார்ப்புகளாக உள்ளன.
வருமான வரியில் கணிசமான குறைப்பு மிடில் கிளாஸ் மக்களின் எதிர்பார்ப்புகளில் முக்கியமான ஒன்றாகும். வரி செலுத்த வேண்டிய வருமான வரம்பை உயர்த்துவதன் மூலம், மாத சம்பளக்காரர்கள் குறைவான வருமான வரியை செலுத்திய பிறகு அவர்கள் கையில் கூடுதலான பணம் மிஞ்சும். இதை பொருட்கள் வாங்குவதற்கும், முதலீடு செய்வதற்கும் பயன்படுத்தப்பட உள்ளது.

மத்திய அரசு பல்வேறு வருமான பிரிவுகளில் வரி விகிதங்களைக் குறைப்பதற்கும் எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்தியாவில் சமீப காலமாக லிவ்விங் காஸ்ட் அதிகரிப்பு மற்றும் பணவீக்க பாதிப்புகளை எதிர்கொள்ள முடியாமல் மிடில் கிளாஸ் மக்கள் போராடி வருகின்றனர்.
மக்கள் சொந்த வீடு கனவை நினைவாக்கவும், வீடு வாங்குவதற்கு அரசின் உதவிக்கும், நிதி ஆதரவும் நடுத்தர வர்க்கத்தின் முக்கிய தேவையாக உள்ளது. வீட்டு கடன் வட்டி அல்லது அசல் தொகையை செலுத்துவதில் கிடைக்கும் வரி சலுகையை உயர்த்துவது மூலம், மிடில் கிளாஸ் மக்கள் சொந்த வீடு வாங்கும் கனவை எளிதாக நினைவாக்க முடியும். இத்தகைய நடவடிக்கை ரியல் எஸ்டேட் துறைக்கு சாதகமாக இருப்பது மட்டுமல்லாமல், நடுத்தர குடும்பங்களின் ஒட்டுமொத்த நிதி நிலையையும் மேம்படுத்தும்.
மேலும், ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளுடன் தொடர்புடைய மூலதன ஆதாய வரி விதிகளில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என மிடில் கிளாஸ் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்தப் பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் முதலீட்டு முடிவுகளை கணிசமாக பாதிக்கும்.
நடுத்தர வர்க்கத்தின் நிதி நலனை மேம்படுத்துவதோடு நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியையும் ஆதரிக்கும் வகையில், மத்திய பட்ஜெட் 2025 இருக்கும் என நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications