யுபிஐ (UPI) பரிவர்த்தனைகளுக்கு பரிவர்த்தனை கட்டணம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக பல செய்திகள் வெளியானது. ஒருவேளை அப்படி அறிமுகப்படுத்தப்பட்டால் நான்கில் மூன்று பேர் யுபிஐ கட்டண முறையைப் பயன்படுத்துவதை நிறுத்தி விடுவார்கள் என்று ஆராய்ச்சி நிறுவனமான லோக்கல் சர்க்கிள்ஸ்-இன் அறிக்கை தெரிவித்துள்ளது. அதாவது தோராயமாக 75% யுபிஐ பயனர்கள் யுபிஐ கட்டண முறையை விட்டு வெளியேறி விடுவார்கள் என்று கூறப்படுகிறது. இந்த அறிக்கை செப்டம்பர் 22-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியானது.
லோக்கல் சர்க்கிள்ஸ் அறிக்கைக்காக பதிலளித்த 15,598 யுபிஐ பயனர்களில் 75 சதவீதம் பேர், "UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்படக்கூடாது, மேலும் கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டால் நான் பயன்படுத்துவதை நிறுத்திவிடுவேன்" என்று சொல்லியதாக லோக்கல் சர்க்கிள்ஸ் கணக்கெடுப்பு அறிக்கை கூறுகிறது. மீதியுள்ள 22 சதவீத UPI பயனர்கள் கருத்துக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக இந்தியாவின் 308 மாவட்டங்களில் உள்ள யுபிஐ பயனர்களிடம் கிட்டத்தட்ட 42,000 பதில்களை லோக்கல் சர்க்கிள்ஸ் பெற்றுள்ளது. அறிக்கையின்படி, பதிலளித்தவர்களில் 63 சதவீதம் பேர் ஆண்கள், 37 சதவீதம் பேர் பெண்கள்.
இதற்காக டயர் 1 நகரங்களில் இருந்து 41 சதவீத மக்களும் டயர் 2 நகரங்களில் இருந்து 30 சதவீத மக்களும் டயர் 3 மற்றும் டயர் 4 நகரங்களில் இருந்து 29 சதவீத மக்களும் கணக்கெடுப்புக்கு பதில் அளித்தனர்.
2024-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலும் இதேபோன்ற ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அப்போது 73 சதவீத பயனர்கள் பரிவர்த்தனை கட்டணத்தைச் செலுத்தத் தயாராக இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. செப்டம்பரில் இந்த எண்ணிக்கை 3 சதவீதம் அதிகரித்து 75 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அறிக்கை கூறுகிறது.
இந்தியாவில் ஃபின்டெக் நிறுவனங்களின் வளர்ச்சி யுபிஐ போன்ற டிஜிட்டல் கட்டண சேவைகளை பயன்படுத்துவதை எளிதாகவும் வசதியானதாகவும் மாற்றியுள்ளது. இது இந்திய குடிமக்களின் தினசரி பரிவர்த்தனையை எளிதாக்கியுள்ளது என்று தான் கூற வேண்டும். அனைத்திற்கும் மக்கள் யுபிஐ கட்டணங்களை தான் பயன்படுத்தி வருகின்றனர். உலகளாவிய தொற்றுநோயான கோவிட் 19 ஏற்பட்டபோது சோசியல் டிஸ்டன்ஸ் இருந்த காரணத்தினால் பணப்பரிவர்த்தனை வெகுவாக குறைந்தது. அப்போதும் அதிகளவில் யுபிஐ பரிவர்த்தனை செய்யப்பட்டது.
நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவிலிருந்து (NPCI) சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி, UPI பரிவர்த்தனை அளவு 2023 முதல் 2024-ஆம் நிதியாண்டில், கடந்த நிதியாண்டோடு ஒப்பிடும்போது, 44 சதவீதம் உயர்ந்துள்ளது.
2022 முதல் 2023-ஆம் நிதியாண்டில் 84 பில்லியனாக இருந்த பரிவர்த்தனைகள் 100 பில்லியனைத் தாண்டி 131 பில்லியனாக உள்ளன, இதன் மதிப்பு ரூ.139.1 டிரில்லியனுடன் ஒப்பிடும்போது ரூ.199.89 டிரில்லியனாக உயர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் UPI பரிவர்த்தனைகள் 36 சதவீதம் அதிகரித்து ரூ.66 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications