நடப்பு ஆண்டின் இறுதி தருணத்தில் உள்ள நாம், 2023ம் ஆண்டில் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் என்னென்ன? என பல நிபுணர்களும் பட்டியலிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது உதய் கோட்டக் 2023ம் ஆண்டில் 3 பிரச்சனைகள் பெரும் தலைவலியை ஏற்படுத்தலாம். இதனை எதிர்கொள்ள நாம் எப்படி தயாராக வேண்டும் என்று மூத்த வங்கியாளர் தெரிவித்துள்ளார்.
பணவீக்கம் உச்சம் தொடலாம்
2023ம் ஆண்டில் மீண்டும் பணவீக்கம் என்பது இனியும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ரஷ்யா - உக்ரைன் இடையேயான பிரச்சனை என்பது மதிப்பிட முடியாத ஒன்றாக உள்ளது. ஆக இது பெரும் தலைவலியை ஏற்படுத்தலாம்.
3 ஆபத்துகள் என்ன அது?
2023ல் நாம் மூன்று பிரச்சனைகளை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று கூறும் வங்கியாளர், முதலாவது பணவீக்கம் என்பது நீண்டகால த்திற்கு இருக்கலாம். இரண்டாவது ரஷ்யா பிரச்சனை இன்று வரையில் கணிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. மூன்றாவது சீனா என பட்டியலிட்டுள்ளார்.
புத்தாண்டு வாழ்த்துகள்
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ள கோடக், அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார வங்கியாளரான உதய் கோடக், கோடக் மஹிந்திரா வங்கி சேவையினை வழங்கி வருகின்றார். இது சிறந்த வணிக வங்கியாக மட்டும் அல்லாது, முதலீட்டு வங்கியாகவும் செயல்பட்டு வருகின்றது. இது தவிர இன்சூரன்ஸ் துறை, தரகு சேவை என பல்வேறு வணிகங்களை செய்து வருகின்றார்.
நிதி வணிகம் டூ வங்கி
உதய் கோட்டக் 1985ம் ஆண்டு நிதி சம்பந்தமான வணிகத்தினை தொடங்கினார். இது கடந்த 2003ம் ஆண்டில் வங்கியாக உருவெடுத்தது. ப்ளூம் பெர்க் இன்டெக்ஸின் படி இவரின் நெட்வொர்த் மதிப்பு 13.6 பில்லியன் டாலராகும்.
பல தலைவலிகள்
சர்வதேச அளவில் நிலவி வரும் பல்வேறு தலைவலிகளுக்கு மத்தியில், பணவீக்கமானது உச்சம் தொட்டு வருகின்றது. இதன் காரணமாக மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றது என்ற நிலையில், உதய் கோட்டக்கின் இந்த எச்சரிக்கையும் வந்துள்ளது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications