வேர்ல்ட் எக்கனாமிக் ஃபோரம் 2025-ஆம் ஆண்டுக்கான அதன் வேலை வாய்ப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் பணியமர்த்தும் இந்திய நிறுவனங்களில் சுமார் 30 சதவீத நிறுவனங்கள் பட்டப்படிப்பு இல்லாமல் திறன் அடிப்படையில் பணியமர்த்தலை செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளது. உலக அளவில் இந்த எண்ணிக்கை 19 சதவீதமாகவே இருக்கிறது. இதிலிருந்து இந்தியாவில் திறமைக்கு முன்னுரிமை வழங்கப்படுவதை தெள்ளத் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் வேலை வாய்ப்பு சந்தை கடுமையான மாற்றங்களுக்கு உட்பட்டு வருகிறது. தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் பணியமர்த்தல் நடைமுறைகளிலும் மாற்றம் ஏற்படுகிறது. அதோடு புவிசார் அரசியல் பதட்டங்கள், காலநிலை மாற்றங்கள் ஆகியவை 2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் வேலை சந்தையில் சில மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும் அறிக்கை தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் செயல்படும் நிறுவனங்கள் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ், ரோபோட்டிக்ஸ், தானாக இயங்கும் சிஸ்டம்கள் மற்றும் எனர்ஜி டெக்னாலஜி போன்றவற்றில் அதிக முதலீடு செய்து வருவதாகவும் அறிக்கை தெரிவித்துள்ளது.

உலகளவில் தொழில் நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப நிறுவனங்கள் தங்களை தானே உயர்த்திக் கொண்டு வருகின்றன. அதற்கு ஏற்றார் போல இந்தியாவில் உள்ள நிறுவனங்களும் முதலீடுகளில் கவனம் செலுத்தி வருகிறது. இந்திய நிறுவனங்கள் தங்கள் உலகளாவிய சகாக்களுடன் ஒப்பிடுகையில் தொழில்நுட்பங்களை விரைவாக ஏற்றுக் கொள்கின்றனர்.
இதே போல இந்தியாவில் உள்ள 35 சதவீத நிறுவனங்களில்.. முக்கியமாக செமி கண்டக்டர்கள் மற்றும் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பங்கள் போன்றவற்றில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கின்றன. மேலும் 21 சதவீத நிறுவனங்களில் குவாண்டம் மற்றும் என்கிரிப்ஷன் தொழில்நுட்பங்களில் மாற்றங்கள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கின்றன.
இந்த மாற்றங்களினால் வேலை சந்தையில் அதிகளவிலான வேலை வாய்ப்புகளும் உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பிக் டேட்டா ஸ்பெஷலிஸ்ட், ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் மற்றும் மெஷின் லேர்னிங் ஸ்பெஷலிஸ்ட், செக்யூரிட்டி மேனேஜ்மென்ட் ஸ்பெஷலிஸ்ட் போன்ற பணிகளுக்கு அதிக தேவையை உருவாக்கும் என்று வேர்ல்ட் எக்கனாமிக் ஃபோரம் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
இந்த மாற்றங்களுக்கு ஏற்ப டிகிரியை விடுத்து திறன்களுக்கு முன்னுரிமை வழங்க உள்ளதாக 30 சதவீத இந்திய நிறுவனங்கள் தெரிவித்திருக்கின்றன. சமீபத்தில் எலான் மஸ்க் தனது X பதிவில் ஒரு போஸ்டை வெளியிட்டு இருந்தார். அதில் எவ்ரிதிங் என்ற அப்ளிகேஷனை செய்து முடிப்பதற்காக பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளதாகவும், இதற்கு தன்னுடன் இணைந்து செயல்பட ஒரு ஹார்ட்கோர் சாப்ட்வேர் இன்ஜினியர் தேவை என்றும் அழைப்பு விடுத்திருந்தார்.
இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் அவர் தன்னுடைய பதிவில், "நீங்கள் எந்த பள்ளியில் படித்தீர்கள்? எந்த பள்ளிக்குச் சென்றீர்கள்? அல்லது எந்த பெயர் பெற்ற நிறுவனத்தில் பணிபுரிந்தீர்கள்? என்றெல்லாம் எங்களுக்கு கவலையே இல்லை உங்களுடைய ப்ரோக்ராமை மட்டும் எங்களுக்கு அனுப்புங்கள்!", என்று கூறி தனது பதிவை பகிர்ந்திருந்தார்.
எனவே திறன்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கும் போக்கு தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளது. பட்டப்படிப்பை முடிக்காமல் டேலண்டை மட்டுமே நம்பியிருக்கும் நபர்களுக்கு இது உதவும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!



Click it and Unblock the Notifications