ஏர் இந்தியா மற்றும் விஸ்தாரா விமான சேவை நிறுவனங்கள் இணைக்கப்படுவதால் சுமார் 300 ஊழியர்கள் வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் ஏர் இந்தியா மற்றும் விஸ்தாரா விமான சேவை நிறுவனங்களை இணைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ஏர் இந்தியாவில் பணியாற்றி வரக்கூடிய விமானத்தில் அல்லாமல் பிற வேலைகளில் ஈடுபடக்கூடிய ஒப்பந்த தொழிலாளர்கள் சுமார் 300 பேருக்கு இதுவரை அவர்களின் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
கிட்டத்தட்ட 10 முதல் 15 ஆண்டு காலமாக ஏர் இந்தியா நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர்கள் ஒப்பந்த தொழிலாளர்களின் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை என்றும் இவர்களுக்கு என்ன வேலைகள் வழங்கப் போகிறார்கள் என்பது குறித்த தகவலையும் வெளியிடவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

Non flying staffs பிரிவில் இருக்கும் ஒப்பந்த தொழிலாளர்கள் கிட்டத்தட்ட 300 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். வழக்கமாக இவர்களது ஒப்பந்தம் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனிடையே ஜூலை 17ஆம் தேதி ஏர் இந்தியா நிறுவனம் ஊழியர்கள் தானாகவே ஓய்வு பெறக்கூடிய விஆர்எஸ் திட்டத்தை அறிமுகம் செய்தது. அதாவது Grouns staff பிரிவில் ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியாக வேலை பார்த்து வரக்கூடியவர்கள் தானாக ஓய்வு பெற்றுக் கொள்ளலாம் என்றும் ஐந்து ஆண்டுகளுக்கு குறைவான பணி அனுபவம் கொண்டவர்கள் விஎஸ்எஸ் எனப்படும் வாலண்டியரி சப்ரெஷன் திட்டத்தின் ( voluntary separation scheme ) கீழ் தகுதி பெறுவார்கள் என்றும் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால் இதில் ஒப்பந்த தொழிலாளர்களும் வருவார்களா என்பது குறித்த தகவலை ஏர் இந்தியா வெளியிடவில்லை.
டாடா நிறுவனமும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விஸ்தாரா நிறுவனமும் இந்தியாவில் 51: 49 என்ற விகிதத்தில் கூட்டு நிறுவனங்களாக இணைந்து செயல்படுவது என அறிவிப்பு வெளியிட்டன. இந்த ஆண்டு இறுதிக்குள் இதற்கான பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய சூழலில் இந்தியாவில் இந்த இரண்டு நிறுவனங்களையும் சேர்த்து 23 ஆயிரம் ஊழியர்கள் பணி புரிகின்றனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications