டெல்லி: இந்தி,யாவில், வெங்காய விலையை சீர் படுத்த மோடி அரசு சுமார் 1 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்யச் சொல்லி இருக்கிறார்கள். அநேகமாக இந்த வேலை இப்போது தொடங்கி இருக்கும்.
ஆனால் மறு பக்கம், இன்னொரு அரசு அமைப்பு, தன் கைவசம் இருந்த வெங்காயத்தில் சுமார் 50 சதவிகிதத்தை பாதுகாக்க முடியாமல் வீணடித்து இருக்கிறது.
அது எந்த அமைப்பு..? எவ்வளவு வீணடித்து இருக்கிறார்கள்..? எவ்வளவு வெங்காயத்தை அவர்கள் வாங்கி இருந்தார்கள்..? ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
NAFED
NAFED - National Agricultural Cooperative Marketing Federation of India தான் அந்த அரசு அமைப்பு. இவர்கள் விலை நிலைப்படுத்தும் நிதியில் (Price Stabilization Fund) இருந்து 57,372 மெட்ரிக் டன் வெங்காயத்தை வாங்கி இருக்கிறார்கள். வாங்கிய வெங்காயத்தை பழங்கால முறைப்படியே பாதுகாத்து இருக்கிறார்கள்.
குடோன்
இன்றைய நவீன அறிவியல் காலத்தில் கூட, குறிப்பாக வெங்காய விலையால் மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் போது கூட, குளிர் சாதன வசதி இருக்கும் குடோன்களில் வெங்காயத்தை வைக்கவில்லை. மாறாக வழக்கம் போல குடோன்களில் சாக்கு மூட்டைகளிலும், தரையிலும், தார்பாயிலுமே வைத்திருக்கிறார்கள் போல.
பயன்பாடு
அப்படி வைத்து முறையாக பயன்படுத்தி இருந்தால் கூட பரவாயில்லை. ஆனால், வாங்கிய வெங்காயத்தில் சுமார் 50 சதவிகிதத்தைக் கூட முறையாக பயன்படுத்தவில்லை. சமீபத்தில் நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சகத்தில் இருந்து கிடைத்த தகவல் படி 57,372 டன் வெங்காயத்தில், 30,400 டன் வெங்காயத்தை பயன்படுத்தவில்லை எனச் சொல்லி இருக்கிறார்கள்.
NAFED தரப்பு
வெங்காயத்தை குளிர் சாதன வசதி கொண்ட, குடோன்களில் வைக்கவில்லை, சாதாரண விவசாய பொருட்களுக்கான குடோன்களில் தான் சேமித்து வைத்தோம் என NAFED தரப்பே ஒப்புக் கொண்டது. அதிகமான மழை பொழிவு காரணமாகவும், கூடுதல் ஈரப் பதத்தாலும் வெங்காயம் அதிகம் வீணானது எனச் சொல்லி இருக்கிறார்கள்.
வெங்காய விலை
ஏற்கனவே இந்தியாவில் வெங்காய உற்பத்தி சுமார் 30 - 40 சதவிகிதம் சரிந்து இருக்கிறது. இந்தியாவின் சில முக்கிய நகரங்களில் வெங்காயத்தின் விலை கிலோ 40 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை கடந்த சில மாதங்களில் விற்கப்பட்டது. போகிற போக்கைப் பார்த்தால் வெங்காயத்தின் விலை செஞ்சுரி அடித்து விடும் போலிருக்கிறதே..!
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications