இந்தியாவின் முன்னணி ஸ்மார்ட்போன் விற்பனை பிராண்டுகளாக இருக்கும் சீன நிறுவனங்கள் அடுத்தடுத்து வருமான வரி ஏய்ப்பு நடத்தி மாட்டிக்கொண்டு இருக்கும், இதேவேளையில் சீனா கடன் செயலி நிறுவனங்கள் தொடர்ந்து மோசடி செய்து மக்களின் பணத்தைத் திருடி வரும் நிலையில் மத்திய நிதியமைச்சகம் மூலம் வரித் துறை வரை கடுமையான நடவடிக்கையை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் வருமான வரித்துறை சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் இந்திய நிறுவனங்களைக் கட்டம் கட்ட துவங்கியுள்ளது.
மத்திய வரித் துறை
மத்திய வரித் துறை இந்தியா மற்றும் சீனாவில் இருந்து பெறப்பட்ட தரவுகளில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பில் கணிசமான வித்தியாசத்தைக் கண்டறிந்துள்ளது. அதாவது சீனாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் உள்நாட்டு நிறுவனங்கள் குறைவான விலையைப் பதிவிட்டு உள்ளதை மத்திய வரி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
சீனா
சீனாவில் இருந்து இந்தியாவுக்கான ஏற்றுமதி செய்யும் விலையை விட, இந்தியாவின் விலைப்பட்டியல் இறக்குமதிகள் மதிப்புக் கணிசமாகக் குறைவாக உள்ளது. இதன் மூலம் வரி விதிப்பில் பெரிய வித்தியாசத்தைக் காட்ட முடியும்.
under-invoicing பிரச்சனை
ஏப்ரல் 2019 முதல் டிசம்பர் 2020 வரை குறைவான விலைப்பட்டியல் அதாவது (under-invoicing) மூலம் சுமார் 16,000 கோடி ரூபாய் வரையிலான வரி ஏய்ப்புச் செய்ததாகச் சந்தேகிக்கப்படும் 32 இறக்குமதியாளர்களுக்குச் செப்டம்பர் மாத கடைசி வாரத்தில் சுங்க அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
விசாரணை
இது தொடர்பான விசாரணையில், under-invoicing பல இடங்களில் செய்யப்பட்டு உள்ளது தெரியவந்துள்ளன, குறிப்பாகச் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மீது அதிகப்படியான under-invoicing நிகழ்வுகள் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
16,000 கோடி ரூபாய்
இதைத் தொடர்ந்து தான் 16,000 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்புச் செய்ததாக 32 உள்நாட்டு இறக்குமதியாளர்கள் மீது சந்தேகிக்கப்படும் காரணத்தால் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியுள்ளோம் என்று வரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நோட்டீஸ்
மேலும் இத்தகைய அறிக்கை இனி வரும் காலகட்டத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் under-invoicing பிரிவில் இகுக்கும் இறக்குமதிகள் பெரும்பாலும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், கேஜெட்டுகள் மற்றும் உலோகங்களாக உள்ளது தெரிய வந்துள்ளது.
வரி விதிப்பு
பொதுவாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீதான சுங்க வரியை குறைக்க வேண்டும் என்பதற்காகப் பொருட்களின் விலையைக் குறைத்து மதிப்பிடப்பட்டு ரசீது சமர்ப்பிக்கப்படும். சமீபத்தில் மத்திய அரசு உள்நாட்டில் தயாரிக்கப்படும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு வரியை குறைத்த வேளையில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விலையை அதிகரித்தது.
சுங்க வரி
இந்த நிலையில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீதான சுங்க வரியை குறைக்க வேண்டும் என்பதற்காகப் பொருட்களின் விலையைக் குறைத்துப் பில் போடப்பட்டதால் மத்திய அரசு வரி இழப்பு ஏற்பட்டு உள்ளது.
சீன ஏற்றுமதி தரவுகள்
அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இந்தியா 79.16 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களைச் சீனாவில் இருந்து இறக்குமதி செய்துள்ளது. மறுபுறம், சீனாவின் சுங்கத்தின் பொது நிர்வாகத்தின் தரவுகள் படி இதே காலக்கட்டத்தில் இந்தியாவிற்கான ஏற்றுமதி பொருட்களின் மதிப்பு 89.99 பில்லியன் டாலராக உள்ளது.
10 பில்லியன் டாலர்
இதன் மூலம் இந்தியாவில் இருக்கும் இறக்குமதி நிறுவனங்கள் சுமார் 10 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்குச் சுங்க வரி ஏய்ப்பு செய்துள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ஒவ்வொரு ஆண்டும் இந்த மதிப்பின் இடைவெளி அதிகரித்து வருகிறது.
தொடர் உயர்வு
2019 காலண்டர் ஆண்டில் சீனாவிலிருந்து இந்தியாவின் இறக்குமதி 68.35 பில்லியன் டாலர் ஆகும், அதே நேரத்தில் சீனாவின் தரவுகள் படி இதன் அளவு 74.92 பில்லியன் டாலராக உள்ளது. சுமார் $6 பில்லியன் இடைவெளி, இதேபோல் 2020 இல் 8 பில்லியன் டாலர், 2021 இல் 10 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications