டெல்லி: இந்தியாவின் உயரிய கல்வி நிறுவனங்களாக கருதப்படும் ஐஐடிக்களில் பயிலும் மாணவர்கள் பெரும்பாலும் கேம்பஸ் பிளேஸ்மெண்ட் மூலம் பெரிய நிறுவனங்களில் பணிக்கு அமர்ந்துவிடுவார்கள் என்பது தான் இத்தனை நாள் கேள்வி பட்ட செய்தி. ஆனால் தற்போது நிலைமை மாறி இருப்பது ஆர்டிஐ மூலம் பெறப்பட்ட தகவலில் தெரிய வந்துள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை ஐஐடி நிறுவனங்களில் கல்வி பயின்றவர்களில் 32 சதவீதம் பேர் கேம்பஸ் பிளேஸ்மெண்டுகள் மூலம் பணிவாய்ப்பு பெறவில்லை. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்த தகவல் கிடைக்கப்பெற்றதாக சிஎன்பிசி டிவி18 வெளியிட்டுள்ள செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே நடப்பாண்டியல் ஐஐடி நிறுவனங்களில் கல்வி பயின்றவர்களில் பல மாணவர்கள் கேம்பஸ் பிளேஸ்மெண்ட் மூலம் வேலை வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகின்றனர் என அவ்வப்போது செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

கொரோனாவுக்கு பிந்தைய காலகட்டத்தில் தான் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களும் ஊழியர்களை பணி நீக்கம் செய்வதை அதிகரித்தும், புதிதாக ஆட்களை தேர்வு செய்வது உள்ளிட்டவற்றை குறைத்தும் உள்ளன. ஆனால் கொரோனாவுக்கு முன்பிருந்தே ஐஐடி நிறுவனங்களில் பயின்றவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்காமல் போயிருக்கிறது என்பது இந்த தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கிடைக்கப்பெற்ற விவரங்களில் வெளியாகியுள்ளது. சிஎன்பிசி டிவி 18 நிறுவனம் கிட்டத்தட்ட 23 ஐஐடி நிறுவனங்களிலும் நிகழ்ந்த கேம்பஸ் இன்டர்வியூகள் மற்றும் அதில் வேலை கிடைத்த மாணவர்களின் தகவல்களை ஆர்டிஐ தகவலின் மூலம் பெற்றுள்ளது.
பாலக்காடு , திருப்பதி, காந்தி நகர், பாட்னா இந்தூர், ஹைதராபாத் மற்றும் ஜோத்பூர் ஆகிய ஐஐடி நிறுவனங்களில் பயின்றவர்களில் கேம்பஸ் பிளேஸ்மெண்ட் மூலம் வேலை வாய்ப்பு பெற்றவர்கள் விகிதம் மிக மிக குறைவாக உள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது. இந்த தகவலின் படி 2016 ஆம் ஆண்டு 30 சதவீத மாணவர்கள், 2017ஆம் ஆண்டு 31 சதவீத மாணவர்கள், 2018 ஆம் ஆண்டு 38 சதவீத மாணவர்கள், 2019 ஆம் ஆண்டு 29 சதவீத மாணவர்கள், 2020 ஆம் ஆண்டு 28 சதவீத மாணவர்கள், 2021இல் 35 சதவீத மாணவர்கள் கேம்பஸ் மூலம் பிளேஸ் ஆக வில்லை என செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2016 முதல் 2023 வரை ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது சராசரியாக 29 சதவீத மாணவர்கள் கேம்பஸ் பிளேஸ்மெண்ட்கள் மூலம் பணி வாய்ப்புகளை பெறவில்லை.
இதனிடையே 2024 ஆம் ஆண்டு ஐஐடி மும்பையில் கல்வி பயின்றவர்களில் 6.1% மாணவர்கள் இன்னும் வேலை வாய்ப்பு பெறவில்லை என்று அந்த கல்வி நிறுவனமே எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications