இந்தியாவை பொருத்தவரை திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது என்று கூறப்பட்டாலும் திருமண செலவுகள் என்பது பெற்றோர்களுக்கு ஒரு மிகப்பெரிய செலவாக இருக்கும்.
ஆனால் அதே நேரத்தில் திருமணம் சம்பந்தமான வர்த்தகம் செய்பவர்களுக்கு மிகப்பெரிய வியாபாரம் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது இந்தியாவில் திருமண சீசன் தொடங்கியுள்ள நிலையில் 32 லட்சம் திருமணங்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் இதனால் 3.75 லட்சம் கோடிக்கு வர்த்தகம் நடக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருமண சீசன்
இந்தியாவில் டிசம்பர் 14ஆம் தேதிக்கு பிறகு 32 லட்சம் திருமணங்கள் நடைபெற இருப்பதாகவும் இதனால் நாடு முழுவதும் 3.75 லட்சம் கோடி வர்த்தகம் நடக்கும் என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் ஆயுத பூஜை, தீபாவளி உள்பட பண்டிகை காலம் என்பதால் நாடு முழுவதும் வர்த்தகர்கள் மிகப்பெரிய வணிகத்தை பார்த்தார்கள். இந்த நிலையில் அடுத்த கட்டமாக திருமண சீசன் நவம்பர் 14 முதல் டிசம்பர் 14 வரை நடைபெற உள்ளது. இந்த காலகட்டத்தில் மட்டும் 32 லட்சம் திருமணம் நடைபெற இருப்பதாகவும் இதனால் 3.75 லட்சம் கோடி அளவில் நாடு முழுவதும் சம்பந்தமான வியாபாரம் நடக்கும் என்றும் கேட்டு CAIT ரிசர்ச் & டிரேட் டெவலப்மென்ட் சொசைட்டி நடத்திய ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.
திருமண கொள்முதல்
இந்தியாவில் திருமணத்திற்காக கொள்முதல் செய்வது என்பது மக்களின் மிகப்பெரிய வழக்கமாக உள்ளது என்றும் அதனால் ஒவ்வொரு திருமணத்திற்கும் குறைந்தபட்சம் ஒரு லட்சம் அதிகபட்சமாக ஒரு கோடி ரூபாய் வரை செலவு செய்யப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
CAIT ரிசர்ச் & டிரேட் டெவலப்மென்ட் சொசைட்டி
டிசம்பர் 14ஆம் தேதி திருமண சீசன் முடிந்தாலும் அடுத்த கட்ட திருமண சீசன் அடுத்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி தொடங்கி ஜூலை வரை நடைபெறும் என்றும் அதனால் திருமண சீசன் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்றும் CAIT ரிசர்ச் & டிரேட் டெவலப்மென்ட் சொசைட்டி தெரிவித்துள்ளது.
டெல்லியில் திருமணம்
டெல்லியில் மட்டும் வரவிருக்கும் திருமண சீசனில் 75000 கோடி வரை வர்த்தகம் நடக்கும் என CAIT ரிசர்ச் & டிரேட் டெவலப்மென்ட் சொசைட்டி தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 20 லட்சம் திருமணம் நடந்ததாகவும் அதில் மூன்று லட்சம் கோடி வரை திருமண செலவுகள் மட்டும் செய்யப்பட்டதாகவும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
வர்த்தகர்கள்
திருமண சீசனை கணக்கில் கொண்டு நாடு முழுவதும் வர்த்தகர்கள் திருமணம் சம்பந்தமான வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்காக ஏற்பாடு செய்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் திருமணத்தின்போது வாடிக்கையாளர்கள் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக கடைகளை புதுப்பித்து வருவதாகவும் 20% மணமகன் சம்பந்தமான வியாபாரமும் 80 சதவீத மணமகள் சம்பந்தமான வியாபாரமும் நடக்கும் என்றும் கூறப்படுகிறது.
என்னென்ன வியாபாரம்
திருமண சீசனின்போது வீடுகளை பழுது பார்க்கும் பணி நடைபெறும் என்பதால் ரியல் எஸ்டேட் துறையும் விரிவடையும் என்று கூறப்படுகிறது. மேலும் நகைகள், புடவைகள், ஆயத்த ஆடைகள், அணிகலன்கள், திருமண வாழ்த்து அட்டைகள், உணவு பொருள்கள், பூஜை பொருட்கள், அலங்கார பொருட்கள், பரிசுப் பொருட்கள், ஆகியவற்றின் தேவை அதிகமாக இருக்கும் என்றும் இதனால் இந்த ஆண்டு நல்ல வியாபாரம் நடக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் வணிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
திருமண மண்டபங்கள்
மேலும் திருமண மண்டபங்கள், ஹோட்டல்கள், திறந்தவெளி பூங்கா, ஆகியவையும் திருமணத்திற்காக புக் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் கேட்டரிங் சர்வீஸ் நிறுவனங்கள், மலர் அலங்காரம் செய்பவர்கள், டிராவல் சர்வீஸ், போட்டோகிராபர்கள், வீடியோகிராபர்கள், அலங்கார வண்டிகள், அலங்கார விளக்குகள் ஆகியவற்றின் வியாபாரம் நல்லபடியாக நடக்கும் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications