90 நாட்களில் 33% பேர் ராஜினாமா.. ஊழியர்களை தக்கவைத்துக் கொள்ள அதிரடி போனஸ்.. வேலைக்காகுமா..?

சர்வதேச அளவில் மிகப்பெரிய ஐடி நிறுவனங்களில் ஒன்று காக்னிசண்ட். மற்ற ஐடி நிறுவனங்களை போலவே காக்னிசண்ட் நிறுவனமும் மிகப்பெரிய சவாலை தற்போது எதிர்கொண்டுள்ளது.

கொரோனாவின் வருகைக்கு பிறகு ஐடி நிறுவனங்களின் தேவையானது அபரிமிதமாக அதிகரித்துள்ளது. ஆனால் திறனுள்ள ஊழியர்களுக்கான பற்றாக்குறை என்பது மிக அதிகரித்துள்ளது.

ஒரு புறம் நிறுவனங்கள் ஊழியர்களை தக்கவைத்துக் கொள்ள போனஸ், ஊதிய உயர்வு, பதவி உயர்வு என கொடுத்து வருகின்றன.

தொடர்ந்து பணியமர்த்தல்

தொடர்ந்து பணியமர்த்தல்

கொரோனா காலத்தில் ஐடி நிறுவனங்களுக்கான தேவையானது மிகப்பெரிய அளவில் அதிகரித்த நிலையில், ஐடி ஊழியர்களுக்கான தேவையும் மிகப்பெரிய அளவில் அதிகரித்து வருகின்றது. இதனால் ஐடி நிறுவனங்கள் தொடர்ந்து ஊழியர்களை பணியமர்த்தி வருகின்றன. தொடர்ந்து சம்பள உயர்வு, பதவி உயர்வு கொடுத்து ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ள முயற்சித்து வருகின்றன.

ஊழியர்களுக்கு பற்றாக்குறை

ஊழியர்களுக்கு பற்றாக்குறை

இப்படி கடுமையான தேவைகளுக்கும் மத்தியில் ஐடி நிறுவனங்கள் எதிர்கொண்டு வரும் மிகப்பெரிய சவால் அட்ரிசன் விகிதம் தான். இதில் தேவை என்பது ஒருபுறம் அதிகரித்துக் கொண்டே வந்தாலும், மறுபுறம் பற்றாக்குறை என்பது அதற்கு மேலாக அதிகரித்து வந்தது. இது ஐடி நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக அமைந்தது.

மிகப்பெரிய சவால்

மிகப்பெரிய சவால்

ஐடி நிறுவனங்கள் பல ஒப்பந்தங்களை போட்டு வரும் நிலையில், அதனை சரியான நேரத்தில் முடித்துக் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளன. ஆனால் மறுபுறம் ஊழியர்கள் பற்றாக்குறை என்பது மிகப் பெரும் சவலாக உள்ளது. இந்த நிலையில் தான் விலை போர் என்பது உருவாகியுள்ளது. இது மேற்கொண்டு ஊழியர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது.

அட்ரிஷன் விகிதம்

அட்ரிஷன் விகிதம்

ஐடி ஊழியர்களுக்கான தேவை என்பது மிக வரலாறு காணாத அளவு அதிகரித்துள்ள நிலையில், இந்த நிலை இன்னும் அடுத்த சில வருடங்களுக்கு நீடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் அட்ரிஷன் விகிதம் மீண்டும் மிகப்பெரிய கவலை அளிக்கும் விதமாக ஐடி நிறுவனங்களுக்கு மாறியுள்ளது.

கானிசண்ட் டெக்னாலஜி

கானிசண்ட் டெக்னாலஜி

அந்த வகையில் சர்வதேச அளவில் முன்னணி ஐடி ஜாம்பவான் ஆன, கானிசண்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதமானது 33% அதிகரித்துள்ளது. ஆக இருக்கும் ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ள, அதிக அளவிலான போனஸை கொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

பிரையன் ஹம்பரீஷ் கருத்து

பிரையன் ஹம்பரீஷ் கருத்து

காக்னிசண்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பிரையன் ஹம்பரீஷ் இதுகுறித்து கூறுகையில், கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பாண்டில் போனஸ் விகிதம் மற்றும் பதவி உயர்வு என்பது அதிகளவில் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது நடப்பு ஆண்டில் செலவினத்தை அதிகரிக்கலாம் என கூறியுள்ளார்.

மற்ற நிறுவனங்களின் என்ன நிலவரம்

மற்ற நிறுவனங்களின் என்ன நிலவரம்

எப்படியிருப்புனும் கடந்த காலாண்டில் 37% இருந்த நிலையில், தற்போது 33% ஆக குறைந்துள்ளது. இது சற்று குறைந்திருந்தாலும், தொடர்ந்து 30% மேலாகவே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் மற்றொரு மிகப் பெரிய முன்னணி நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதம் 11.1%, இன்போசிஸ் 20.1% அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளன. ஆக இதனுடன் ஒப்பிடும்போது காக்னிசண்ட்டில் அதிகம் என தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.

அதிகளவில் சம்பள உயர்வு

அதிகளவில் சம்பள உயர்வு

இதற்கிடையில் திறமையை தக்கவைத்துக்கொள்ள ஐடி நிறுவனங்கள் பெருமளவிலான சம்பள அதிகரிப்பினை கொடுக்க இது வழிவகுக்கும். சராசரியாக அடுத்த ஆண்டில் ஐடி நிறுவனங்களில் சம்பள உயர்வு என்பது 9.5% அதிகரிக்கலாம் என்றும் ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. 2021 ஆம் ஆண்டில் அட்ரிஷன் விகிதம் 5.2% இருக்கும் எனவும், இது 2022ஆம் ஆண்டில் 8.8% அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.

வருவாய் விகிதம்

வருவாய் விகிதம்

இந்த நிறுவனம் கடந்த வாரத்தில் வெளியிட்டுள்ள செப்டம்பர் காலாண்டு அறிக்கையின் படி, அதன் வருவாய் விகிதமானது கடந்த ஆண்டை காட்டிலும் 11% அதிகரித்து 4.7 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது கடந்த ஜூன் காலாண்டில் 4.6 பில்லியன் ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதெ நிகர வருவாய் விகிதமானது 6% அதிகரித்து 544 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+