வெளிநாட்டு ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும் நோக்கில், விதிகளை மீறியதாக 357 இணையதளங்கள் மற்றும் 2,400 வங்கிகள் கணக்குகளுக்கு தடை விதித்து சுமார் ரூ. 126 கோடியை முடக்கி சரக்கு மற்றும் சேவை வரி புலனாய்வு இயக்குநரகம் (DGGI) நடவடிக்கை எடுத்துள்ளது. ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ், ஆன்லைன் பண கேமிங் (Online Money Gaming) என்பது செயல்படக்கூடிய உரிமைகோரலாக இருப்பதால், அது 'சரக்குகளின்' விநியோகமாக வகைப்படுத்தப்பட்டு 28% வரிக்கு உட்பட்டது. இந்தத் துறையில் செயல்படும் நிறுவனங்கள் ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்ய வேண்டும்.

ஜிஎஸ்டி நுண்ணறிவுத் துறை (DGGI) ஆன்லைன் பண கேமிங், சூதாட்டம், மற்றும் பரிவர்த்தனை (betting/gambling) செயல்படுத்தும் 700-க்கு மேற்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களை கண்காணித்து வருகிறது. இந்த நிறுவனங்கள் பதிவு செய்யத் தவறியதன் மூலமும், வரி செலுத்த வேண்டிய தொகைகளை மறைப்பதன் மூலமும், வரிக் கடமைகளைத் தவிர்ப்பதன் மூலமும் ஜிஎஸ்டியை ஏய்ப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை வருவாய் நுண்ணறிவுத்துறை (DGGI) மற்றும் மின்னணுவியல், தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) இணைந்து, சட்டவிரோத / விதிமீறிய வெளிநாட்டு ஆன்லைன் பண கேமிங் நிறுவனங்களின் 357 இணையதளங்கள் தடைசெய்துள்ளன.
இதுமட்டுமல்லாமல், சமீபத்திய விசாரணையில், வருவாய் நுண்ணறிவுத்துறை (DGGI) சட்டவிரோத ஆன்லைன் கேமிங் தளங்களை குறிவைத்து, பங்கேற்பாளர்களிடமிருந்து பணம் வசூலிக்க பயன்படுத்தப்பட்ட பல வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளது. இதேபோல், வருவாய் நுண்ணறிவுத்துறை (DGGI) மற்றும் இந்திய குற்றப் புள்ளிவிவரக் கழகம் (I4C), தேசிய கட்டணக் கழகம் (NPCI) ஆகியவை இணைந்து, சட்டவிரோத ஆன்லைன் கேமிங் தளங்களின் 2,000 வங்கி கணக்குகளை முடக்கியதுடன், ரூ.4 கோடியையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் இதுதொடர்பான விசாரணையில், சட்டவிரோத வெளிநாட்டு ஆன்லைன் கேமிங் நிறுவனங்களின் இணையதளங்களில் பயன்படுத்தப்பட்ட UPI ஐடிகள் மற்றும் வங்கி கணக்குகள் கண்டறியப்பட்டன. அதில், 392 வங்கி கணக்குகள் Debit Freeze செய்யப்பட்டு, மொத்தம் ரூ.122.05 கோடி பணம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. Debit Freeze என்பது வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்க முடியாத வகையில் கணக்கு முடக்கப்படும் முறையாகும்.
மேலும், இந்தியாவிற்கு வெளியில் இருந்து ஆன்லைன் பண கேமிங் தளங்களை இயக்கி வரும் சில இந்தியர்களுக்கு எதிரான மற்றொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. இந்த நபர்கள் சத்குரு ஆன்லைன் மனி கேமிங் பிளாட்ஃபார்ம், Mahakaal Online Money Gaming Platform மற்றும் Abhi247 Online Money Gaming Platform உள்ளிட்ட பல்வேறு ஆன்லைன் தளங்கள் மூலம் இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் கேமிங்கை எளிதாக்குகின்றனர். இதன்மூலம் இந்திய வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் வசூலிக்க மியூல் வங்கி (Mule Bank Accounts) கணக்குகளைப் பயன்படுத்தியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதன்படி, இந்த தளங்களுடன் இணைக்கப்பட்ட 166 மியூல் கணக்குகள் இதுவரை முடக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் இதுபோன்ற மேலும் நபர்களுக்கு எதிரான விசாரணை நடந்து வருகிறது என்றும் வருவாய் நுண்ணறிவுத்துறை (DGGI) தெரிவித்துள்ளது. விதிமீறிய வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய வர்த்தக சந்தையில் நேர்மையான போட்டியை சீர்குலைக்கின்றன. இது உள்ளூர் நிறுவனங்களைப் பாதித்து, சந்தை சமநிலையை மாற்றுகிறது.
மேலும், சட்டத்தை மீறி செயல்படும் வெளிநாட்டு நிறுவனங்கள் தடைகளை மீறி புதிய இணையதளங்களை உருவாக்குகின்றன என்றும் 'மியூல்' வங்கி கணக்குகள் மூலம் பண பரிவர்த்தனைகளை நடத்துகின்றன என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மோசடிக்காக பயன்படுத்தப்படும் வங்கி கணக்குகள் ('மியூல்' அக்கவுண்ட்கள்) மூலம் திரட்டப்படும் நிதி, சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் ஆபத்து உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சில பாலிவுட் நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் போன்ற பிரபலங்கள் சட்டவிரோத ஆன்லைன் பண சூதாட்ட (Money Gaming) தளங்களை விளம்பரப்படுத்தி சிக்கியுள்ளனர். இந்த தளங்களில் பணமீட்டும் மோசடிகள் இருக்கக்கூடும் என்பதால், மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் என்றும் இது அவர்களின் தனிப்பட்ட நிதிக்கு ஆபத்தை விளைவிக்கும் மற்றும் நிதி ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் நடவடிக்கைகளுக்கு மறைமுகமாக ஆதரவளிக்கக்கூடும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications