இந்திய - சீன ராணுவ வீரர்களுக்கு மத்தியில் 2020 ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, இந்திய அரசு சுமார் 267 சீன செயலிகளை தடை செய்தது. தேசிய பாதுகாப்பு அச்சம் மற்றும் தரவு தனியுரிமை ஆகியவற்றை காரணம் காட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நடவடிக்கையால் பெரும்பாலான சீன நிறுவனங்கள் இந்தியாவை விட்டு வெளியேறியது, இதோடு இதில் பணியாற்றிய பல லட்சம் இந்திய மக்களும் தங்களது வேலையை இழந்தனர். ஆனால் 4 வருடத்திற்கு பின்பு தற்போதைய சந்தையைப் பார்க்கும்போது, தடை செய்யப்பட்ட பல செயலிகள் சைலெண்டாக மீண்டும் இந்திய சந்தைக்குள் வந்துள்ளன.

2025 ஆம் நிலவரப்படி, முன்பு தடை செய்யப்பட்ட செயலிகளில் சுமார் 36 செயலிகள், கூகிள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் இரண்டிலும் மீண்டும் அறிமுகமாகியுள்ளது. இந்த செயலிகளில் சில அதன் அசல் வடிவத்தைத் அப்படியே வைத்துக் கொண்டு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன, மற்றவை பெயர் மாற்றி ரீபிராண்டிங் செய்து அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.
சில செயலிகள் அவற்றின் பிராண்டிங் மற்றும் உரிமையாளர் விவரங்களில் மாற்றங்களை செய்து அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. இன்னும் சில நிறுவனங்கள் சட்ட சிக்கல் இருக்க கூடாது என்பதற்காக இந்திய நிறுவனங்களுடன் இணைந்து தனது செயலிகலை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. இதன் மூலம் மத்திய அரசின் தடைகளின் வலிமை குறித்து சந்தேகம் எழுகிறது.
இந்தியாவுக்குள் மீண்டும் நுழைந்துள்ள முக்கிய சீன செயலிகளின் லிஸ்ட்:
ஒரு காலத்தில் பிரபலமான பைல் ஷேரிங் செயலியான Xender, ஆப்பிள் ஆப் ஸ்டோரில் "Xender: File Share, Share Music" என மீண்டும் வந்துள்ளது. இருப்பினும் இது கூகிள் பிளே ஸ்டோரில் இல்லை.
MangoTV மற்றும் Youku போன்ற சீன ஸ்ட்ரீமிங் தளங்களும் அவற்றின் பிராண்டிங் அல்லது அடையாளத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் இந்தியாவுக்கு திரும்பியுள்ளன.
Alibaba க்கு சொந்தமான பிரபலமான ஷாப்பிங் செயலியான Taobao எந்த மாற்றமும் இல்லாமல் மீண்டும் வந்துள்ளது.
டேட்டிங் செயலியான Tantan கூட "TanTan - Asian Dating App" என்ற புதிய பெயரில் மீண்டும் வந்துள்ளது.
Shien, ஃபேஷன் ஷாப்பிங் செயலி, இது அதன் செயல்பாட்டை எளிதாக்க இந்திய நிறுவனமான ரிலையன்ஸுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்த கூட்டணி மூலம் தரவு சேமிப்பை இந்தியாவிற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.
இதேபோல், 2020 இல் தடை செய்யப்பட்ட பயன்பாடுகளில் ஒன்றான PUBG மொபைல், தென் கொரிய நிறுவனமான Krafton இன் கீழ் Battlegrounds Mobile India (BGMI) ஆக இந்திய சந்தையில் மீண்டும் நுழைந்தது. BGMI கூட இந்தியாவின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றிய பிறகு 2022 இல் மீண்டும் தடை செய்யப்பட்டு 2023 இல் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது.
முன்பு தடை செய்யப்பட்ட பல செயலிகள் திரும்பிய போதிலும், மிகவும் பிரபலமான குறுகிய வீடியோ தளமான TikTok இந்தியாவில் மீண்டும் வரும் எந்த வாய்ப்புகளும் இல்லாதது போல் தெரிகிறது.
டிஜிட்டல் உலகில் இத்தகைய தடைகளை உறுதியாக விதிப்பதில் பெரும் சிக்கல் உள்ளது இதன் மூலம் தெளிவாகிறது. பல செயலிகள் தற்போது இந்தியா மற்றும் அமெரிக்க சந்தைக்குள் நுழைய வேண்டும் என்பதற்காக இப்போது சிங்கப்பூர், வியட்நாம், தென் கொரியா, சீஷெல்ஸ், ஜப்பான் அல்லது பங்களாதேஷ் உட்பட பல்வேறு நாடுகளில் உள்ள நிறுவனங்களின் கீழ் தங்கள் உரிமையை மாற்றி புதிய அடையாளத்துடன் வருகிறது.
மேலும், சில செயலிகள் இந்திய அரசு விதிமுறைகளைச் சமாளிக்க இந்திய நிறுவனங்களுடன் உரிமம் ஒப்பந்தங்களை செய்து வருகின்றன. Shein செயலியின் வெற்றி பல செயலிகள் இந்தியாவுக்குள் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications